கமல்ஹாசனுக்கு எதிராக ரச்சிதா வெளியிட்ட பதிவு? ஏன் இந்த குழப்பம்.. ஓப்பனாக சொன்ன வார்த்தை
சென்னை: நடிகை ரச்சிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு அட்வைஸ் செய்கிறவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
அது கடந்த சனிக்கிழமை கமல்ஹாசன் ரச்சிதா மற்றும் தினேஷ் விஷயத்தில் பேசியதற்காக இப்படி ஒரு பதிவு கொடுத்திருக்கிறாரா? அல்லது விசித்திரா தன்னுடைய பர்சனல் வாழ்க்கை குறித்து பிக் பாஸ் வீட்டிற்குள் பேசியதற்காக இப்படி ஒரு பதிவா என்று குழப்பத்தில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

ஆனால் அதில் ரச்சிதா என்னுடைய வாழ்க்கைக்குள் யாரும் வர வேண்டாம் எனக்கு அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்று தெரியும் என்று குறிப்பிட்டு இருப்பதால் இது கமல்ஹாசனை குறித்து தானா? என்றும் பலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
சின்னத்திரை தம்பதிகளான தினேஷ் மற்றும் ரச்சிதா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கும் நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் பலமுறை நான் ரச்சிதாவோடு சேர்ந்து வாழவேண்டும் என்பதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். அதோடு இந்த சீசனில் டைட்டில் ஜெயித்ததும் ரச்சிதாவிடம் கொடுத்து தங்களுடைய அன்பை வெளிப்படுத்துவேன் என்றும் கூறிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் ஆரம்பத்தில் இருந்து தினேஷ் மீது இருக்கும் கோபம் தனக்கு குறையவில்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக அடிக்கடி ரச்சிதா சமூக வலைதள பக்கங்களில் பதிவுகளும் கேப்ஷனும் கொடுத்து தினேஷின் ரசிகர்களை வெறுப்பேத்திக் கொண்டிருக்கிறார். தினேஷ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ரச்சிதாவின் ரசிகர்களும் கூட இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்றும் பலர் அட்வைஸ் செய்து வருகிறார்கள்.
அதற்கு ரச்சிதா அட்வைஸ் செய்வது எல்லாருக்கும் எளிது தான். ஆனா அதை அனுபவிச்சவங்களுக்கு தான் அதோட கஷ்டம் என்னன்னு தெரியும். அதனால யாரும் எனக்கு அட்வைஸ் செய்ய வேண்டாம் என்றும் சொல்லி இருந்தார். இப்படியான நிலையில் தான் கடந்த வாரத்தில் தினேஷோடு பிக் பாஸ் வீட்டிற்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் விசித்திராவிற்கு தன்னுடைய ஆதரவு என்று கூறி விசித்ரா தான் இந்த சீசன் டைட்டில் ஜெயிக்க வேண்டும் என்றும் ரச்சிதா கூறியிருந்தார்.
அதை தொடர்ந்து சில நாட்களிலே தனக்கு ரச்சிதா ஆதரவு தருவது விசித்திராவுக்கு மனரீதியாக தெரிந்து விட்டதோ என்னவோ, கேமரா முன்பு தினேஷ் முகத்தை பார்த்தாலே பிடிக்கல. அவரு கூட என்னால மூணு மாசமே ஒரு வீட்டுக்குள்ள வாழ முடியல எப்படித்தான் இவரோடு ஒரு பொண்ணால வாழ முடியும். நீ திரும்பி வந்துறதா என்று கேமரா முன்பு ரச்சிதாவிற்கு அட்வைஸ் செய்யும் விதமாக பேசி இருந்தார்
அது குறித்து சனிக்கிழமை எபிசோடில் கமல்ஹாசன் அடுத்தவர்களுடைய பர்சனல் வாழ்க்கையில் நீங்கள் தலையிடுவது சரியல்ல. வெளியே பல லட்சம் பேர் பார்க்கும் நிகழ்ச்சியில் கேமரா முன்பு கணவன் மனைவி இருவருக்கும் இடையே நீங்க நாட்டாமை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று நருக்கென்று குட்டு வைத்தது போல பேசியிருந்தார். ஆனால் என்னதான் கமல் பேசி இருந்தாலும் அவர் போன பிறகு வழக்கம் போல விசித்திரா நான் சொன்னது தப்பே இல்லை.
தினேஷ் பார்த்தாலே எனக்கு புடிக்கல. அவரு ஒரு நல்ல அண்ணனா இருக்கலாம். நல்ல தம்பியா இருக்கலாம். நல்லா மகனாக இருக்கலாம் ஆனால் நல்ல புருஷனா இருக்க முடியாது என்று பேசி இருந்தார்.. இது அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று ரச்சிதா தன்னுடைய instagram பக்கத்தில் "ஆமா உண்மை எப்பவுமே கசக்கும். அதுக்காக அது உண்மை இல்லை என்று ஆயிடாது. எல்லாராலும் ஜட்ஜ் பண்ண முடியும். ஆனால் யாராலும் என்னுடைய வாழ்க்கையை வாழ முடியாது .என்னுடைய வாழ்க்கையில் எனக்கு பார்த்துக்க தெரியும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
அதுபோல நான் செய்து கொண்டிருப்பது போர் அந்தப் போரை நான் தனியாக போராடிக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இதனால் ரச்சிதா இந்த பதிவில் கமலுக்கு அட்வைஸ் செய்திருக்கிறாரா என்று பல கேள்வி எழுப்பி வருகின்றனர். அதோட விசித்திரா வெளியே வந்த பிறகு இது குறித்து அவர் என்ன விளக்கம் கொடுக்கப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications