Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பல நாள் கனவு நினைவானது.. ரச்சிதா வெளியிட்ட பதிவு..குவியும் வாழ்த்துக்கள்..ஒரு வழியா நடந்துவிட்டது

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு பிறகு ரச்சிதாவிற்கு புதியதாக திரைப்பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று மகிழ்ச்சியாக தெரிவித்து இருக்கிறார்.

ரச்சிதா சமீபத்தில் தான் புது கார் வாங்கி தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து இருந்தார்.

இந்த நிலையில் தற்போது ரச்சிதா வெளியிட்ட பதிவு சமூக வலைத்தளத்தில் அதிகமாக வாழ்த்துக்களைப் பெற்று வருகிறது.

Actress Rachitha has announced that she will be acting in a movie called Meinigarae

விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக பலருடைய மனதை கவர்ந்த ரச்சிதா தற்போது சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு 91 நாட்கள் வரைக்கும் இந்த நிகழ்ச்சியில் இவர் தாக்குப் பிடித்தார். தான் கடைசி நாள் வரைக்கும் இந்த நிகழ்ச்சியில் இருக்க வேண்டும் என்று பெருத்த ஆசையோடு இருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் வழக்கம் போல சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் ரச்சிதா எந்த சீரியலிலும் கமிட்டாகவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் தான் புதியதாக திரைப்படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கும் செய்தியை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களின் மூலமாக ரசிகர்களுக்கு தெரிவித்திருக்கிறார்.

இயக்குனர் பிரவீன் கிருஷ்ணராஜா என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் மெய் நிகரே என்ற திரைப்படத்தில் தான் ரச்சிதா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்காக ஆன்றோ இசையமைப்பில் படப்பிடிப்பு வேகமாக நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Actress Rachitha has announced that she will be acting in a movie called Meinigarae

ஏற்கனவே "உப்பு கருவாடு" என்ற தமிழ் படத்திலும் இரண்டு கன்னட படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக அவர் நடித்த கன்னட திரைப்படம் இப்ப வரைக்கும் வெளியாகவில்லை. இது குறித்து கூட சமூக வலைத்தளத்தில் சில மாதங்களுக்கு முன்பு இது எப்போது வெளியே வரும் என்று ஆர்வத்தோடு காத்திருப்பதாக பதிவு ஒன்றையும் வெளியிட்டு இருந்தார் .

இந்த நிலையில் தற்போது மெய் நிகரே என்ற திரைப்படத்தின் போஸ்டரை ரச்சிதா வெளியிட்டு இருக்கும் நிலையில் அதற்கு அதிகமான வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஏற்கனவே ரச்சிதா சில நாட்களுக்கு முன்புதான் புதியதாக கார் ஒன்றை வாங்கி அந்த மகிழ்ச்சியை தன்னுடைய ரசிகர்களோடு பகிர்ந்து இருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது அடுத்த ஸ்பெஷல் அறிவிப்பு வெளியிட்டதும் ரச்சிதாவின் பதிவிற்கு லைக்குகள் குவிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+