வித்தியாசமான ஹார்மோன் பிரச்சனையில் கஷ்டப்படும் ரச்சிதா.. இந்த நிலைமைக்கு காரணம் இதுதானா?
சென்னை: சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகர் ரச்சிதா தான் வித்தியாசமான ஹார்மோன் பிரச்சனையில் இருந்து வருவதாக பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அதில் தன்னுடைய உடல் எடை அதிகரிப்பதற்கு இது தான் காரணம் என்று ரச்சிதா கூறியிருக்கிறார்.
அத்தோடு வித்யாசமான ஹார்மோன் பிரச்சனையில் சிக்கி இருக்கும் ரச்சிதாவிற்கு ரசிகர்கள் தங்களுடைய ஆறுதல்களை கூறி வருகிறார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் மூலமாக சின்னத்திரையில் தமிழ் ரசிகர்களின் மத்தியில் அறிமுகமான நடிகை ரச்சிதா மகாலட்சுமி முதல் சீரியலிலே பிரபலம் அடைய தொடங்கி இருந்தார். ஆனால் முதல் சீரியலில் இவர் தன்னை ஒரு கருப்பான கிராமத்து பெண்ணாக காட்டியிருந்தார். அதைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீரியலில் இவரா அவர் என்று சொல்லும் அளவிற்கு வித்தியாசத்தை காட்டி இருந்தார்.
அதை தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீரியல் தொடர்ச்சியாக எல்லா சீசன்களிலும் இவரே மீனாட்சி ஆக நடித்திருந்தார். எத்தனையோ கதாநாயகர்கள் மாறி மாறி ஒவ்வொரு சீசனிலும் வந்தாலும் இவர் மட்டும்தான் கதாநாயகியாக தொடர்ந்து வந்தார். இதனாலே இவர் சொந்த பெயரான ரச்சிதா என்பதை மறந்து ரசிகர்கள் மத்தியில் மீனாட்சி என்று வலம் வர தொடங்கினார்.
அதைத் தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர், சொல்ல மறந்த கதை, நாச்சியார்புரம் என்ற ஒரு சில சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் தான் இவருக்கு பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. முதல் சீசனில் இருந்து இந்த வாய்ப்புக்காக காத்திருந்த ரச்சிதாவிற்கு ஆறாவது சீசனில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் எதிர்பார்த்தபடி கடைசி நாள் வரைக்கும் நிகழ்ச்சியில் தொடர முடியவில்லை. அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இவர் எலிமினேஷன் காரணமாக வெளியேற்றப்பட்டார்.
அதைத் தொடர்ந்து ரச்சிதா எந்த சீரியலிலும் நடிக்காமல் இருக்கிறார். அதே நேரத்தில் தான் சினிமாவில் கமிட்டாகி இருப்பதாகவும் கூறியிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் வித்தியாசமான ஒரு ஹார்மோன் பிரச்சனையில் சிக்கி இருப்பதாக கூறியிருக்கிறார். அதாவது எல்லோருக்கும் அதிகமாக சாப்பிட்டால் தான் உடல் எடை கூடும் ஆனால் நான் சாப்பாட்டை முகர்ந்து பார்த்தாலே உடல் எடை கூடிவிடும்.
உடல் எடை அதிகரித்து விட்டது என்று டாக்டர்களிடம் போனால் கூட நீங்கள் சாப்பாட்டை சாப்பிட வேண்டாம் முகர்ந்து பார்த்தாலே போதும் என்று சொல்கிறார்கள். இந்த மாதிரி சிலருக்கு தான் ஹார்மோன் பிரச்சனை இருக்குமாம். எனக்கு அந்த மாதிரி இருக்கிறது. இது உடல் எடை அதிகரிக்கிறது என்பது சொல்வதை விடவும் உடல் எடை உப்பிவிடும் என்று சொல்வது தான் சரியாக இருக்கும். அந்த மாதிரி நிலையில்தான் இருக்கிறேன். ஆனால் உடல் ஆரோக்கியத்திற்காக ஆரோக்கியமான சாப்பாடுகளையும் உடற்பயிற்சிகளையும் செய்து வருகிறேன் என்று ரச்சிதா கூறியிருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
டேய் நம்ம பாண்டியன் படம்ப்பா! தியேட்டரில் ஒன்ஸ்மோர் கேட்டு அலறிய கூட்டம்! அந்த 1 சீன் சரித்திர சாதனை -
சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் படிக்கட்டில் அந்த சத்தம்! யாருமே கவனிக்காத நடிகர் திலகத்தின் கை ரகசியம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications