ரச்சிதா போட்ட திடீர் போஸ்ட்.. வாழ்த்து தெரிவித்த விசித்திரா.. சஸ்பென்ஸ் இருக்காமே! பதறும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ரச்சிதா மகாலட்சுமி குட்டி டிரவுசர் மற்றும் டி-ஷர்டுடன் உடன் இருக்கும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு திகைப்பூட்டும் தருணங்கள் இருக்கிறது என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இதற்கு நடிகை விசித்திரா தன்னுடைய கருத்தை தெரிவித்து இருந்த நிலையில் இது இணையத்தில் அதிகமான கமெண்ட்ஸ்களை பெற்று வருகிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

நடிகை ரச்சிதா மகாலட்சுமி தமிழில் முதன்முதலாக பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலமாக அறிமுகமாகி அதைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்து விட்டார். பொதுவாக ஒரு சீரியல் வெற்றியடைந்து விட்டால் அதில் அடுத்த பாகம் தொடங்குவது வாடிக்கைதான். அதுபோல தான் சரவணன் மீனாட்சி சீரியல் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வந்தது.

அதில் இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசனில் தொடர்ந்து ரச்சிதா தான் கதாநாயகியாக நடித்து வந்தார். சரவணன் மீனாட்சி சீரியலுக்கு பிறகு விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வந்த ரச்சிதா ஜீ தமிழில் நாச்சியார்புரம் சீரியலிலும் நடித்திருந்தார். அதுபோல கலர்ஸ் தமிழில் சொல்ல மறந்த காதல் என்ற சீரியலில் நடித்திருந்தார். அந்த கதையும் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.

ஆனால் சீரியல் திடீரென்று முடிக்கப்பட்டது. இதற்கிடையில் பிரிவோம் சந்திப்போம் சீரியலில் தன்னோடு நடித்த நடிகர் தினேஷை ரச்சிதா காதலித்து திருமணமும் செய்து கொண்டார். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் ரச்சிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் தினேஷ் ரச்சிதாவிற்கு பெரிய அளவில் சப்போர்ட் செய்து வந்தார். ஆனால் ரச்சிதா நினைத்த மாதிரி அந்த சீசனில் வெற்றி பெற்று டைட்டில் ஜெயிக்கவில்லை. அதைத்தொடர்ந்து ரச்சிதாவிற்காக பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் தினேஷ் கலந்து கொண்டிருந்தார். நான் டைட்டில் வெற்றி பெற்று ரச்சிதாவிடம் அதை கொடுப்பேன். பிறகு மீண்டும் எங்களுடைய வாழ்க்கை ஒன்றாக தொடங்குவோம் என்று அடிக்கடி கூறிக் கொண்டிருந்தார்.

ஆனால் தினேஷ் அந்த நிகழ்ச்சியில் இருக்கும் போது ரச்சிதா தன்னுடைய அதிருப்தியை சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்து கொண்டு இருந்தார். அதே நேரத்தில் தினேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது விசித்ராவிற்கும் தினேஷுக்கும் அடிக்கடி கருத்து மோதல்கள் ஏற்பட்டது. அந்த நேரத்தில் ரச்சிதா விசித்திராவிற்கு தன்னுடைய சப்போர்ட்டை கொடுத்துக் கொண்டிருந்தார்.

விசித்திரா ஒரு முறை ரச்சிதா மீண்டும் தினேஷுடன் சேர்ந்து வாழ வந்து விடாதே என்று கேமரா முன்பு பேசி இருந்தார். அது பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது இந்த நிலையில், ரச்சிதா தினேஷுடன் சேர்ந்து வாழ்வதற்கு எந்த இடத்திலும் தயாராகவில்லை என்பதை தெளிவுபடுத்தியதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தினேஷ் தானும் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் முடிவிலிருந்து விலகி இருப்பதாக கூறி இருந்தார்.

இப்படியான நிலையில் ரச்சிதா இப்போது தொடர்ச்சியாக சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். சீரியலில் இனி நீங்க நடிப்பீங்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு கூட அதற்கு காலம்தான் பதில் சொல்லும் என்று சிரித்தப்படியே கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

காரணம் ரச்சிதா அதிகமாக புடவை மற்றும் தாவணியில் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவார். இது தான் ரசிகர்களுக்கு அதிகமாக பிடித்தது. ஆனால் இன்று குட்டி டவுசர் மற்றும் தொளதொளவென ஒரு டிஷர்ட் போட்டு கொண்டு தலை முடியை அள்ளிக்கொண்டை இட்டு எளிமையாக இருக்கிறார்.

அதோடு இதே கெட்டபில் சில புகைப்படங்களை இவர் பகிர்ந்து இருப்பதை பார்த்ததும் ரசிகர்கள் ஆகா ஓகோ என்று புகழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த புகைப்படங்களுக்கு ரச்சிதா" சில திகைப்பூட்டும் தருணங்களுக்கு தயாராகுங்கள் ரசிகர்களுக்கு சப்ரைஸ் இருக்கு" என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இந்த போஸ்டிற்கு நடிகை விசித்திரா, கியூட் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே சில தினங்களாகவே ரச்சிதா இரண்டாவது திருமணம் செய்ய போகிறார் என்ற செய்திகள் பரவி வரும் நிலையில் அது குறித்த அறிவிப்பை ரச்சிதாவிரைவில் வெளியிட போகிறாரா? என்று சில ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். ஆனால் தன்னுடைய புகைப்படத்துக்கு ரச்சிதா தனிமையாக இருப்பது என்ற டேக் கொடுத்து இருப்பது ரசிகர்களை குழப்பம் அடைய செய்திருக்கிறது. ஆனாலும் ரச்சிதா என்ன சர்ப்ரைஸ் சொல்லப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+