கண்ணீர் விட்டு அழுது வீடியோ வெளியிட்ட நடிகை ரச்சிதா.. நயன்தாரா மோட்டிவேஷன்.. இதுதான் காரணமா?
சென்னை: நடிகை ரச்சிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணீர் விட்டு அழுதபடி வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.
ஏற்கனவே ரச்சிதாவிற்கும் அவருடைய கணவருக்கும் இருக்கும் பிரச்சனை போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போயிருந்த நிலையில் தற்போது இந்த வீடியோ குறித்து அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

இந்த நிலையில் எதற்காக இப்படி ஒரு வீடியோ என்பது குறித்து ரச்சிதா அதில் விளக்கமும் கொடுத்து சிலருக்கு அட்வைஸ்சும் கொடுத்து இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கன்னட நடிகை ஆன நடிகை ரச்சிதா கன்னடாவில் ஒரு சில டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நிலையில் முதல் முறையாக தமிழில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகம் ஆகி, அதை தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் மீனாட்சி ஆக வலம் வந்து கொண்டிருந்தார்.

மீனாட்சி கேரக்டரில் ரச்சிதாவுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாகவே தொடர்ச்சியாக பல சீசன்களில் ரச்சிதா கதாநாயகியாக நடித்து வந்தார். இவரோடு நடிக்கும் கதாநாயகர்கள் மட்டும்தான் மாறிக் கொண்டிருந்தார்கள். இதுவே வேறு எந்த நடிகைக்கும் கிடைக்காத அங்கீகாரமும், வெற்றியும் தான்.
இந்த நிலையில் சரவணன் மீனாட்சி சீரியலை தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர், சொல்ல மறந்த கதை போன்ற பல சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். அதோடு ரச்சிதா காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்த தினேஷ் கார்த்திக் உடன் ஜீ தமிழில் நாச்சியார் புறம் என்ற சீரியலிலும் நடித்திருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் ஆதரவையும் பெற்றிருந்தார்.

அது மட்டும் அல்லாமல் ரச்சிதாவும் அவருடைய கணவர் தினேஷ் கார்த்திக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் இப்போது இவர்கள் இருவருக்கும் இருக்கும் பிரச்சனை போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் சென்று சமூக வலைத்தளத்தில் அனைவருக்கும் தெரிந்து விட்டது.
இந்த நிலையில் நடிகை ரச்சிதா நயன்தாராவின் பாடலான "இதுவும் கடந்து போகும்" என்ற பாடல் பேக்ரவுண்டில் ஓடிக்கொண்டிருக்க தன்னுடைய மன வேதனை மற்றும் வலிகளை அமைதியாக தன்னுடைய கண்களின் மூலமாக கண்ணீர் சிந்தி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ பார்த்த பல ரசிகர்கள் அவருக்கு ஆதரவு கூறி வருகிறார்கள்.

அந்த வீடியோவிற்கு ரச்சிதா, " இது வலிமையான அனைத்து ஆன்மாவிற்காக.... கடந்த வருடங்களை நீங்கள் எப்படி கையாண்டீர்கள் என்று பெருமைப்படுங்கள். இந்த மௌனப் போர்கள் உங்களை தாழ்த்திக் கொள்ள வேண்டிய தருணத்தில், உங்கள் கண்ணீரை துடைத்துக்கொண்டு உங்கள் முதுகில் உங்களை தட்டிக் கொள்ளுங்கள். பாடலின் ஆழமாக போகிறேன். கண்களை நிறைக்கும் அந்த மந்திர வார்த்தைகள்.." என தெரிவித்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications