ஒரு வழியாக அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய ரச்சிதா.. குவியும் வாழ்த்துக்கள்.. இப்படி ஒரு பதிவா?
சென்னை: நடிகை ரச்சிதா தன்னுடைய அம்மாவோடு சேர்ந்து வெளியிட்ட புகைப்படம் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
ரச்சிதாவிற்கு தற்போது புது பட வாய்ப்பு கிடைத்திருக்கும் நிலையில் இலங்கைக்கு போயிருப்பதாக தகவல் கூறி இருக்கிறார்.
இலங்கையில் இருந்தபடியே உருக்கமான வீடியோ ஒன்றையும் ரச்சிதா பகிர்ந்து இருக்கிறார்.

ரச்சிதா மகாலட்சுமி சின்னத்திரை ரசிகர்களுக்கு பேவரைட் கதாநாயகியாக இப்ப வரைக்கும் வலம் வந்து கொண்டிருக்கிறார். பெங்களூரைச் சேர்ந்த ரச்சிதா அறிமுகமானது கன்னட சீரியல் ஆக இருந்தாலும் இவரை சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் செய்தது தமிழ் சீரியல்கள் தான். முதல் முதலாக பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் ரச்சிதா கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார்.
கிராமத்து பெண் கேரக்டரில் தத்ரூபமான தன்னுடைய நடிப்பை வெளிக்காட்டி இருந்தார். இந்த சீரியலில் அவரோடு நடித்த தினேஷ் என்பவரையே காதலித்து திருமணமும் செய்து கொண்டார். 2013 ஆம் ஆண்டு திருமண செய்து கொண்ட இவர் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார். இளவரசி, சரவணன் மீனாட்சி சீசன் 2, சரவணன் மீனாட்சி சீசன் 3, நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2, புதுப்புது அர்த்தங்கள், சத்தியா 2 தன்னுடைய கணவரோடு சேர்ந்து நாச்சியார் புறம் என பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தான் ரச்சிதாவை சரவணன் மீனாட்சி சீரியலில் பார்த்து இயக்குனர் ராதா மோகன் இயக்கிய உப்பு கருவாடு படத்தில் நடிக்க வாய்ப்பையும் பெற்றிருந்தார். அதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியில் 100 நாட்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட இவர் 91 நாட்கள் தாக்கு பிடித்து சிறப்பாக விளையாடியிருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் தனக்கு திரைப்பட வாய்ப்பு கிடைத்திருப்பதாக புகைப்படத்தோடு ரசிகர்களிடம் கூறியிருந்த நிலையில், ரச்சிதா இப்போது இலங்கைக்கு சென்று இருக்கிறார். அங்கு உள்ள கொழும்பு நகரத்திலிருந்து வீடியோ எடுத்து அதை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். தன்னுடைய அம்மாவோடு இவர் எடுத்த புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications