சட்டை பட்டனை கழட்ட சொன்னார்கள்.. அத்தனை பேரு முன்பு நிர்வாணமாய்.. ரஜினி பட நடிகை உடைத்த ரகசியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் பிரச்சனைகள் பற்றி பல நடிகைகள் வெளியே சொல்ல மாட்டார்கள். ஒரு சில நடிகைகள் மட்டும் சில வருடங்கள் கழித்து தாங்கள் சந்தித்த ஆரம்ப கால பிரச்சனைகள் குறித்து சொல்லி இருக்கிறார்கள். அது போல தான் நடிகை ராதிகா ஆப்தே தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை வெளிப்படையாக பேசி இருக்கிறார். ஆரம்பத்தில் சில படங்களில் தான் நிர்வாணமாக நடித்தேன் அதை தவறாக புரிந்து கொண்டு சிலர் படப்பிடிப்பில் எல்லை மீறினார்கள் என்று கூறி இருக்கிறார்.

கபாலி படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராதிகா ஆப்தே. ஆனால் அதற்கு முன்பே இந்திய அளவில் கதையின் நாயகியாக பல மொழி படங்களில் துணிச்சலான கேரக்டர்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட அவருடைய நடிப்பில் Netflix- லவ் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் 3 சீரியஸ் கவனம் பெற்று வருகிறது. இது ஒரு விதமான கதைகளம் தான். இரண்டு தோழிகள் தங்களுடைய கணவரை ஒருநாள் இரவு மாற்றி அவர்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்வது போலத்தான் கதை போய்க்கொண்டிருக்கும்.

Actress Radhika Apte Rajinikanth

லஸ்ட் ஸ்டோரீஸ் 3

இந்த கதை கருவை மட்டும் பார்த்தால் என்ன இப்படியா? என்று முகம் சுளிக்க வைத்தாலும், படத்தில் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களின் மனநிலையில் ஏற்படும் மாற்றம் கணவனின் புறக்கணிப்பு, செக்ஸ் தேவைகள் போன்ற பல விஷயங்களை அந்த சீரிஸில் காட்டி இருக்கிறார்கள். இதற்கான பேட்டி ஒன்றில் தான் ராதிகா பேசியது படத்தை விட அவருடைய பேட்டி வைரலாக காரணமாகிவிட்டது.

நடிகை ராதிகா ஆப்தே பேட்டி

அதில் அவர் பேசும்போது, நான் படத்தில் சில துணிச்சலான கேரக்டரில் நடித்ததால் நிஜத்திலும் நான் அப்படி இருப்பேன் என்று தவறாக புரிந்து கொண்டார்கள். ஆரம்ப காலத்தில் நான் 4 அல்லது 5 படங்களில் முழு நிர்வாணமாக நடித்திருக்கிறேன். இதை வைத்துக்கொண்டு திரை உலகில் பலர் இவ எதையும் பண்ணிடுவா என்று நினைத்துக் கொண்டு இருந்தார்கள். இதனால் கதைக்கு தேவையில்லாமல் கூட எந்த வித கேள்விகளையும் கேட்காமல் கவர்ச்சியான காட்சிகள், உடலை காட்டுவது போல காட்சிகளை வைத்தால் நான் உடனே சம்மதிப்பேன் என்று சில இயக்குனர்கள் நினைத்து விட்டார்கள்.

Actress Radhika Apte Rajinikanth

இயக்குனர்களின் எதிர்பார்ப்பு

ஆனால் நான் அவர்களிடம் நேரடியாகவே ஆரம்பத்தில் அப்படி நடித்திருக்கிறேன் என்பதற்காக இப்போது செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை, அதனால் நான் இனி இதுபோல நடிக்க மாட்டேன் என்று கராராக சொல்லிவிட்டேன். படப்பிடிப்பு தளங்களில் தேவையில்லாமல் முத்த காட்சிகளை திணிக்க முயன்ற காட்சிகளும் இருக்கிறது. ஒரு காட்சியில் நடிகருக்கு முத்தம் கொடுக்க சொன்னால் இதை நான் ஏன் செய்ய வேண்டும்? இந்த காட்சி கதைக்கு அவசியமா? என்று கேட்க தொடங்கி விட்டேன்.

அதற்கு அவங்க கொஞ்சம் தானே பண்ணுங்களேன் சும்மா 15 வினாடிகளில் முடித்துவிடலாம் என்று கேஷுவலாக சொல்வார்கள். இதைக் கேட்டு எனக்குள் கடும் கோபம் வரும். நான் சில படத்தின் கதைக்காக ஆரம்பத்தில் நிர்வாணமாக நடித்தேன் என்பதற்காக இப்போதும் இப்படியே சொல்கிறார்களே என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு மன்னித்து கொள்ளுங்கள் நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை என நேருக்கு நேராக கேட்டுவிட்டேன்.

Actress Radhika Apte Rajinikanth

சண்டைக் காட்சியில் நடந்த சம்பவம்

அது மட்டும் இல்ல சண்டைக் காட்சிகளில் கூட என்னை அரைகுறையான ஆடைகளில் நடிக்க வைக்க முயற்சி செய்தார்கள். ஒரு படத்தின் படப்பிடிப்பில் ஆக்சன் காட்சிகளில் என்னை நடிக்க கூப்பிட்டு இருந்தார்கள். அப்போது சட்டையின் பட்டங்களை போடாமல் கழட்டி விட்டு நடிக்குமாறு கேட்டார்கள். இது ஒரு சண்டைக்காட்சி இதில் சட்டை தானாக நகரத்தான் செய்யும் இது பேசிக் இதில் சில பட்டன்களை ஏன் கழட்ட வேண்டும்? என்று நான் கேட்டேன்.

Actress Radhika Apte Rajinikanth

சட்டை பட்டனை கலட்ட சொல்லி

அப்படி என்றால் சட்டை பட்டனை கழட்டிவிட்டு வெறும் பிரா மற்றும் உள்ளாடையுடன் மட்டுமே சண்டை போட முடியுமா? என்று கேட்டார்கள். அந்த வார்த்தையை கேட்டதும் என்னை வைத்து என்ன செய்ய முயற்சிக்கிறார்கள் என்று எனக்கு கோபம் வந்தது. உடனே நான் மறுத்துவிட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்தவர் கடைசியாக ஒரு நடிகை சில படங்களில் துணிச்சலாக சில காட்சிகளில் நடித்திருக்கிறார் என்பதற்காக தொடர்ந்து அதுபோல காட்சிகளில் தயக்கம் இன்றி நடிப்பார் என்று நினைப்பது மிகப்பெரிய தவறு.

ஒரு காட்சி, கதை, அதன் நோக்கம் என்ன என்பதை இயக்குனர்கள் தெளிவாக சொல்ல வேண்டும். ஒரு படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நடிகர்களின் விருப்பத்தையும், அவர்களின் தனிப்பட்ட எல்லைகளையும் மீறி யாரும் அழுத்தம் கொடுக்கக் கூடாது என்று அந்த பேட்டியில் ராதிகா பேசி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+