வரலட்சுமியின் பிறந்தநாளுக்கு ராதிகா வெளியிட்ட திடீர் போஸ்ட்.. ஆனால் ரகசியத்தை இப்படி உடைச்சுட்டாங்களே!
சென்னை: நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமியின் நிச்சயதார்த்தம் சில தினங்களுக்கு முன்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் நடைபெற்றது. இந்த செய்தி இணையத்தில் இப்போதும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் ராதிகா, வரலட்சுமியின் பிறந்தநாளுக்கு தங்களுடைய புகைப்படங்களோடு போஸ்ட் ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
அதே நேரத்தில் அந்த போஸ்ட்க்கு ராதிகா கொடுத்த கேப்ஷன் தான் இணையத்தில் அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது. ஆரம்பகால கட்டத்தில் ராதிகாவுக்கும் வரலட்சுமிக்கும் இடையே பிரச்சனை இருக்கிறது என்று கூறப்பட்ட நிலையில் இப்போது இவர்களுக்குள் இருக்கும் அன்பு பலரையும் வியக்க வைத்திருக்கிறது.

நடிகர் சரத்குமார் நடிகராக மட்டுமில்லாமல் அரசியல் பிரமுகராகவும் இருந்து வரும் நிலையில் சமீபத்தில் ஒரு சில நாட்களாக சரத்குமார் குடும்ப விஷயங்கள்தான் இணையத்தில் அதிகமாக வைரல் ஆகி கொண்டு இருக்கிறது. கடந்த வாரத்தில் சரத்குமார் மற்றும் ராதிகா, வரலட்சுமி என குடும்பத்தினர் அனைவரும் குடும்ப கோவிலுக்கு போய் இருந்த நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது.
அதை தொடர்ந்து சரத்குமாரின் முதல் மனைவி சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து பற்றி பேசிய விஷயங்களும் இணையத்தில் மீண்டும் வைரலாகி வந்தது. இப்படியான நிலையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் சரத்குமாரின் முதல் மனைவியின் மகளான வரலட்சுமிக்கு பிரம்மாண்டமாக திடீர் என்கேஜ்மென்ட் நடைபெற்று இருந்தது. வரலட்சுமி திருமண விஷயம் பெரிய அளவில் வெளியே தெரியாமல் இருந்த நிலையில் அவருடைய நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தது.
அது குறித்து பலரும் வரலட்சுமி திருமணம் செய்து கொள்ளப் போகும் நபர் யார் என்று இணையத்தில் தேடி வந்தனர். அதே நேரத்தில் வரலட்சுமி திருமணம் செய்ய போகும் நிச்சோலை சாச்தேவ் என்பவர் மும்பை தொழிலதிபர் என்றும் அவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்து அது விவாகரத்தில் முடிந்து விட்டது என்றும் அவருக்கு பதினைந்து வயதில் ஒரு குழந்தை இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
இப்படியான நிலையில் வரலட்சுமி எங்கேஜ்மென்ட் புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று நடிகை ராதிகா சரத்குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வரலட்சுமி பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் கூறி போஸ்ட் ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் "ஹாப்பி பர்த்டே டூ யூ என் தங்கத்துக்கு" என்று தொடங்க ஹிப் ஹாப் தமிழாவின் பாடலுக்கு வரலட்சுமியின் கியூட்டான புகைப்படங்கள் அதில் எடிட் செய்யப்பட்டிருக்கிறது.

அதோடு அந்த பதிவிற்கு, "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வரலட்சுமி இந்த போஸ்டில் இருக்கும் புகைப்படங்கள் நம்முடைய அன்பை பிணைக்கும் பசை அதிலும் உணவோடு கூடிய புகைப்படங்கள் அதிகமாக இருக்கும். ஏனென்றால் நாம் எப்போதும் நம்முடைய அன்போடு சாப்பிட்டுக் கொண்டுதானே இருக்கிறோம். அதுபோல உங்கள் பயணத்தில் உன் ஆத்ம துணையாக நிச்சோலை சாச்தேவை பெற்றிருக்கிறீர்கள்.
அதுபோல உங்கள் மீது அன்பை தவிர வேறு எதுவும் இல்லை. வாழ்க்கை எப்போதும் சிறப்பாக இருக்க வாழ்த்துகிறேன்...." என்று கேப்ஷன் கொடுக்க இந்த கேப்ஷனுக்கு அதிகமான லைக்குகள் குவிந்து வருகிறது. அதோடு அதிகமான ரசிகர்களும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். நடிகர் சரத்குமார் சாயா என்பவரை திருமணம் செய்திருந்த நிலையில் அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் போது சரத்குமாருக்கும் சாயாவிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.

இந்த நிலையில் நடிகை ராதிகாவை சரத்குமார் காதலித்து இரண்டாவது திருமணம் செய்து இருந்தார். இந்த நிலையில் ஆரம்ப காலகட்டத்தில் ராதிகா மீது வரலட்சுமி கோபத்தில் இருந்ததாக கூறப்பட்டது. இருவரும் பேசாமல் இருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் இப்போது இரண்டு குடும்பமும் ஒன்றாக இருந்து வருகின்றனர். இவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை மற்றும் அன்பை பார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களை குவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications