Don't touch.. திருப்பதியில் ரசிகையின் செயலால் கடுப்பான ராதிகா.. அடுத்த நயன்தாரா இவங்களா?
சென்னை: வெள்ளித்திரை சின்னத்திரை என கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் ராதிகா சரத்குமார் திருப்பதியில் ரசிகை ஒருவரிடம் நடந்து கொண்ட செயல் இணையத்தில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
கோயிலுக்கு சாமி தரிசனத்திற்கு சென்ற நடிகை ராதிகா சரத்குமாரை ரசிகை ஒருவர் ஓடி வந்து அவர் தோள் மேல் கை போட்டு போட்டோ எடுக்க முயற்சி செய்திருக்கிறார்.
திடீரென்று வந்து தன்னிடம் அனுமதி வாங்காமல் வீடியோ எடுப்பதை பார்த்து கடுப்பான ராதிகா அந்த ரசிகையை பார்த்து முறைத்திருக்கிறார். அப்போது அங்கே சில கூச்சல் குழப்பங்கள் நடைபெற்றிருக்கிறது.

80ஸ் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் கதாநாயகியாக பலருக்கும் பரிட்சயமான நடிகை ராதிகா அறிமுகமானது கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான். இருந்தாலும் இவர் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்து பக்கத்து வீட்டுப் பெண் போன்று பரீட்சையம் ஆகிவிட்டார்.
வெள்ளித்திரையில் சில கதாநாயகிகளுக்கு வாய்ப்பு குறைந்ததும் சின்னத்திரையை நோக்கி படையெடுப்பது போல ராதிகாவும் சின்ன திரையில் அடி எடுத்து வைத்து அங்கேயும் தனக்கென்று ஒரு சிம்மாசனத்தை அமைத்து கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி சீரியல் இவருக்கு பெரிய அளவில் ரசிகர்களின் மத்தியில் பிரபலத்தை கொடுத்து விட்டது.
சித்தி சீரியல் முதல் சீசன் அமோகமாக வரவேற்பு கொடுத்ததன் காரணமாகவே இவர் சித்தி 2 எடுத்து அதிலும் பாதி நாள் வரைக்கும் நடித்துக் கொண்டிருந்தவருக்கு அரசியல் சினிமா என அடுத்தடுத்து பிசியாக இருந்ததால் சின்னத்திரையை விட்டு விலகி வெள்ளி திரையிலும், அரசியலிலும் முழு நேரமாக கவனத்தை செலுத்த தொடங்கி விட்டார்.
அதுபோல நடிகை ராதிகாவின் சொந்த வாழ்க்கையிலும் பல பிரச்சனைகள் இருந்து வந்தது. ஆரம்பத்தில் நடிகர் விஜயகாந்தை காதலித்து வந்ததாகவும் பிறகு திருமணம் வரை சென்று சில காரணங்களால் அது நின்று போய்விட்டது என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் நடிகர் சரத்குமாரை காதலித்து இரண்டாவது திருமணமும் செய்து கொண்டார்.
தொடர்ந்து திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ராதிகா இப்போது வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதே நேரத்தில் சீரியலிலும் கவனத்தை செலுத்தி வருகிறார். விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் கிழக்கு வாசல் என்ற சீரியலில் மீண்டும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தான் இன்று நடிகை ராதிகா கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்ற நிலையில் அங்கே அவரைப் பார்த்த அவருடைய தீவிரமான ரசிகை ஒருவர் ஓடி வந்து அவரிடம் அனுமதி கேட்காமல் அவர் தோள்மேல் கை போட்டு போட்டோ எடுக்க முயற்சித்து இருக்கிறார். உடனே இவர் திரும்பி பார்த்து முறைத்ததும் அருகில் இருந்த பவுசர்கள் தொடாதீர்கள் தொடாதீர்கள் என்று சத்தம் போட்டு இருக்கிறார்கள்.
தற்போது இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் இதற்கு நெட்டிசன்கள் ஆமா இவங்க பெரிய நயன்தாரா பாரு.. அந்த அம்மா ஓடிவந்து அப்படி போட்டோ எடுக்க முயற்சி செய்யுது. இவங்களும் ஓவரா பில்டப் பண்றாங்க என்று விமர்சித்து வருகிறார்கள். ஆனாலும் சில ரசிகர்கள் யாராக இருந்தாலும் அவரிடம் அனுமதி வாங்கிவிட்டு தானே போட்டோ எடுக்க வேண்டும் இப்படி அத்துமீறுவதும் தவறுதான் என்றும் கூறி வருகிறார்கள்.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications