Actress Radhika: 'சன்'னிடமே மீண்டும் திரும்பினார் 'சித்தி'.. 9.30 ஸ்லாட்டை பிடிப்பாரா?
சென்னை: நடிகை ராதிகா சன் டிவியின் பிரைம் டைமான 9:30 நேரத்துக்கான ஸ்லாட்டின் நிரந்தர சொந்தக்காரியாக இருந்தார். சந்திரகுமாரி சீரியல் அவரை ஏமாற்றி விட்டது, சன் டிவியும் கூட அந்த சீரியலால் ஏமாந்தது என்று சொல்லலாம்.
அதன் பிறகு சன் டிவியில் அதிரடி மாற்றங்கள் உருவாகின. ராதிகாவால் சன் டிவிக்கு இழப்பில்லை என்பது போலவும், சன் டிவியால் தனக்கு ஒன்றும் இழப்பு இல்லை என்பது போலவும் இரு தரப்பு நடவடிக்கைகளும் இருந்தன.
என்றாலும் இருவருக்குமே இழப்புதான் என்பதை ராதிகாவின் ட்வீட் நிரூபித்து இருக்கிறது. அதாவது சன் டிவியில் மீண்டும் லைட்ஸ் ஆன் என்று சூசகமாக சன் டிவியில், தான் சீரியல் பண்ண போவதை ட்வீட் செய்துள்ளார் ராதிகா சரத்குமார்.

ராதிகா ராடான்
சினிமா உலகத்துக்கு ராதிகா நடிகை ராதிகா என்றாலும், சன் டிவியைப் பொறுத்தவரை ராடான் ராதிகாதான். ராதிகா தனது ராடான் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நிறைய சீரியல்கள், நிகழ்ச்சிகளைக் கொடுத்து வெற்றி அடைந்து இருக்கிறார். இதற்கு காரணம் சன் டிவி தந்த வாய்ப்பு என்றாலும், வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்ட ராதிகா நல்ல புத்திசாலி.

ஆசை சந்திரகுமாரி
ராதிகா கடைசியாக தயாரித்து நடிக்க ஆரம்பித்த சந்திரகுமாரி சீரியல், அவர் எதிர்பார்த்த அளவுக்கு நல்ல கதையாக அமையவில்லை. அதில் ஏமாற்றம் அடைந்த ராதிகா நிறைய நஷ்டத்தை சந்திக்க நேர்ந்தது, இவருக்கு ஒதுக்கிய அந்த பிரைம் டைம் நேரம் வீணானதில் சன் டிவியும் நஷ்டத்தை சந்திக்க நேர்ந்தது. கடைசியில் ராதிகாவுக்கான அந்த நேரத்தை நடிகை குஷ்பூவின் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒதுக்கித் தந்தது சன் டிவி.
|
ராதிகா சன் டிவி
சன் டிவிக்கும் ராதிகாவுக்குமான பந்தமாக சன் டிவியின் மதிய நேர சீரியலான மின்னலே மட்டுமே ஒளிபரப்பாகி வந்தது. இதில் ராதிகாவின் தங்கை நிரோஷா நடித்து வருகிறார். இந்த சமயத்தில்தான் சன் டிவிக்காக மீண்டும் லைட்ஸ் ஆன் என்றும், கடவுள் வேகம் என்றும் ராதிகா தமது ட்வீட்டர் வலைத் தளத்தில் பதிவிட்டு இருக்கார்.
|
சமுத்திரக்கனி இயக்குநர்
மீண்டும் சன் டிவிக்கு என்ட்ரி கொடுக்கும் நடிகை ராதிகா முதன் முதலில் இயக்குநர் சமுத்திர கனியின் இயக்கத்தில் லைட்ஸ் ஆன் சொல்ல ஸ்டார்ட் காமிரானு ஆக்ஷன் ஆரம்பமாகி இருக்கிறது போலும். ராதிகாவின் பின் பக்க படம் மட்டுமே ட்வீட் தளத்தில் பதிவிடப்பட்டு உள்ளதால், தான் ஆசைப்பட்ட வித்தியாசமான கதா பாத்திரத்தில் நடிக்கும் மகிழ்ச்சியில் ராதிகா இருக்கிறார் என்று தெரிகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications