நான் சொல்லட்டா யார் எப்படினு? நாசரிடம் நேரடியாவே கேட்டேனே.. திரைத்துறை அவலங்களை உடைத்த ராதிகா
சென்னை: நடிகை ராதிகா சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் விஷால் பெண்களிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்கிறவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்று சொன்னதற்கு நடிகை ராதிகா தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார். அதில் நடிகர் நாசரிடம் தானே போன் செய்து பெண்களுக்கு நான்கு பேர் கொண்ட குழு வைத்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தேன். ஆனால் எதுவும் நடக்கல என சில தகவல்களை கூறி இருக்கிறார்.
மலையாள சினிமா உலகில் பெண் நடிகைகளுக்கு நடக்கும் அவலங்கள் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதை தொடர்ந்து மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. மலையாள சினிமாவை போலவே தமிழ் சினிமாவிலும் பல நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருப்பதாக பல நடிகைகள் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் இது பற்றி நேற்று நடிகர் விஷாலியம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டிருந்த நிலையில், அதற்கு அட்ஜெஸ்ட்மென்ட் கேட்கிறார்கள் என்றால் அவர்களை அந்த இடத்திலேயே செருப்பால் அடியுங்கள் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இது அதிகமான விமர்சனங்களை சந்தித்தது. காரணம் விஷால் சொன்னது போல ஒரு பெண் ஒருவரை அடித்து விட்டால் அதற்கு பிறகு அந்தப் பெண்ணிற்கு வரும் பிரச்சனைகளை யார் பார்ப்பார்கள் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அதுபோல விஷால் மீது நடிகை ஸ்ரீ ரெட்டி சில வருடங்களுக்கு முன்பு சில புகார் கொடுத்திருந்த நிலையில் அது பற்றியும் கேட்கப்பட்டிருந்த நிலையில் விஷால் ஸ்ரீ ரெட்டி யார் என்று எனக்கு தெரியாது அவர் செய்த சேட்டைகள் தெரியும் என்று பதில் கொடுத்திருந்தார். இந்த நிலையில் இன்று இது பற்றி நடிகை ராதிகா செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி இருக்கிறார்.
அதில் ஒரு பதவியில் இருக்கும் விஷால் இப்படி அட்ஜஸ்ட்மென்ட் கேட்கிறவர்களை செருப்பால் அடியுங்கள் என்று பேசலாமா? பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று இவர்கள் தானே உறுதிப்படுத்த வேண்டும்? ஆனால் விஷால் இப்படி பேசியது சரிதானா? ஏற்கனவே அவர் ஒரு பேட்டியில் ஒரு யூடியூபர் தவறாக பேசுகிறார் என்றால் அது அவருடைய கருத்து என்று சொல்லி இருக்கிறார். ஆனால் தவறாக பேசும் அந்த யூடியுபரை விஷால் சொன்னது போல செருப்பால் அடிக்க முடியுமா?

விஷால் செருப்பை எடுத்துட்டு வந்தால் நான் விளக்குமாறு எடுத்துட்டு வரேன்.. மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் நம் தமிழ் சினிமாவிலும் நடிகைகளுக்கு பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. "சினிமா துறையில் யார் எப்படி என்று நான் சொல்லவா? என்னிடம் யாரும் இப்படி பிரச்சனை செய்தது இல்லை. ஏனென்றால் நான் அந்த இடத்திலேயே அடித்து விடுவேன். அல்லது அந்த பிரச்சனையை பெருசாக்கி விடுவேன்" என்று தெரியும்.
அதனால் என்னிடம் யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள். ஆனால் சின்ன நடிகைகளின் நிலைமை அப்படியல்ல. "பலர் பிழைப்புக்காக கஷ்டத்திற்காக இந்த சினிமாவை நோக்கி வருகிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது பெரிய பதவியில் இருக்கும் பெரிய நடிகர்கள்தான்". ஆனால் அவர்கள் இப்படி பொறுப்பில்லாமல் பேசலாமா?
"நான் நாசரிடம் போன் செய்து இது பற்றி பேசினேன். பெண் நடிகைகளின் பாதுகாப்பிற்கு நான்கு பேர் கொண்ட ஒரு குழு வைக்க வேண்டும் என்று சொன்னேன். அதில் ஒரு நீதிபதி, வழக்கறிஞர், போலீஸ், நடிகை போன்றவர்கள் இருக்கலாம். இதுபோன்ற ஒரு குழு உடனே அமைக்க வேண்டும். நான்கு வருடம் கழித்து எல்லாம் அமைத்து பிரயோஜனம் கிடையாது" என்று அந்த பேட்டியில் நடிகை ராதிகா தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications