வெள்ளித்திரை பிரபலங்களை புது சீரியலுக்கு கொண்டுவரும் ராதிகா.. அவரே வெளியிட்ட நெகழ்ச்சியான பதிவு
சென்னை: நடிகை ராதிகா சரத்குமார் கிழக்கு வாசல் என்கிற சீரியல் பூஜை புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தான் நடிக்கும் புது சீரியலின் அப்டேட் குறித்து ராதிகா சரத்குமார் பல தகவல்களை கூறியிருக்கிறார்.
ராதிகா சரத்குமார் உடன் பல வெள்ளித்திரை பிரபலங்களும் கிழக்கு வாசல் சீரியலில் அறிமுகமாக இருக்கின்றனர்.

நடிகை ராதிகா சரத்குமார்
சமீப காலமாக திரைப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு நிகராக சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதன் காரணமாகவே வெள்ளி திரையில் வாய்ப்பு குறைந்தாலும் சில பிரபலங்கள் அதை கண்டு கொள்வதே இல்லை. உடனே டக்கென்று சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்திருக்கின்றனர். இன்னும் ஒரு சிலருக்கு சின்ன திரையில் இருந்து வெள்ளி திரையில் அமோகமாக வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் வெள்ளித்திரை சின்னத்திரை என கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு நபர் தான் ராதிகா சரத்குமார்.

டிஆர்பியில் முன்னணி
சின்னத்திரையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் டிஆர்பியில் முன்னணியில் இருக்கின்றன. இதில் சீரியல்களின் தரத்தை பொறுத்து அடிக்கடி சேனல்கள் முன்னணி இடத்தை பிடித்துக் கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில் சன் டிவியில் சீரியல்கள் தான் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்த நிலையில் தற்போது புதிது புதிதாக பல சேனல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

கிழக்கு வாசல் சீரியல்
சன் டிவியில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் சீரியல்களில் ஒன்றான சித்தி சீரியல் பலரும் மறக்க முடியாததாக இருந்து வருகிறது. இந்த நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு ராதிகா சரத்குமார் மீண்டும் ராடன் தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கிழக்கு வாசல் எனும் சீரியலில் நடிக்க இருக்கிறார். இந்த சீரியலின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை ராதிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

சேனல் மாற்றம்
ராதிகா வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாக போவதில்லை என்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகிறது என்றும் கூடுதல் தகவலையும் ராதிகா தெரிவித்து இருக்கிறார். ராதிகாவோடு நடிகர் விஜய்யின் அப்பாவும் இயக்குனருமான சந்திரசேகரும் நடிக்க இருக்கிறார். அது மட்டுமல்லாமல் நடிகர் நாகேஷின் மகனான ஆனந்தராஜ் சின்னத்திரை நடிகை ஆன ரேஷ்மா நடிகர் சஞ்சீவ் என பல பிரபலங்கள் இந்த சீரியலில் நடிக்க இருக்கிறார்கள்.

நெகிழ்ச்சியான பதிவு
இந்த நிலையில் ராதிகா தன்னுடைய பதிவில், வாழ்க்கை நம்மை பல்வேறு பயணங்களுக்கு அழைத்துச் செல்கிறது. அந்த தருணத்தில் வாழ்ந்து அதிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி, மேலும் விஜய் டிவியில் கிழக்கு வாசல் தொடங்கும் போது அனைவரின் நல்வாழ்த்துக்கள் தேவை. நான் பல வெற்றி படங்களை இயக்கிய சந்திரசேகர் சார் குடும்ப நண்பராகவும் நல விரும்புவோராகவும், சிறந்த குழுவினருடன் நடிகர் சங்கத்தை வழி நடத்துகிறார். அவர் எங்களுக்கு கிடைத்திருப்பது நல்ல அதிர்ஷ்டம், என்றும் கருத்து தெரிவிக்க அதற்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications