கருத்து கணிப்பு வெளியானது.. ராதிகா சரத்குமார் வெளியிட்ட திடீர் பதிவு.. விருதுநகர் என்னாச்சு?
சென்னை: நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா சரத்குமார் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்டு இருக்கும் நிலையில் இன்று பல்வேறு சேனல்களில் இருந்து கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. அதே நேரத்தில் ராதிகா சரத்குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகை ராதிகாவிற்கு அறிமுகமே தேவை இல்லை. வெள்ளித்திரை சின்னத்திரை என்று கலக்கி கொண்டு இருக்கும் ராதிகா இப்போது அரசியலையும் விட்டு வைக்காமல் அதிலும் அடி எடுத்து வைத்திருக்கிறார். ராதிகாவின் கணவரான சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆக இருந்த நிலையில் தன்னுடைய கட்சியை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியோடு இணைத்துக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து ராதிகாவிற்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக விருதுநகர் பகுதியில் போட்டியிட சீட்டு கிடைத்தது. அதே நேரத்தில் விருதுநகர் பகுதியில் நடிகர் விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன் தேமுதிகவின் சார்பாக அதிமுகவோடு கூட்டணி சேர்ந்து போட்டியிடுகிறார். அதுபோல அதே விருதுநகர் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் மாணிக்க தாகூர் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.

இதனால் ராதிகா போட்டு இடும் விருதுநகர் தொகுதி ஸ்டார் தொகுதியாக இருக்கிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டமாக நடத்தப்பட்டு இன்றோடு தேர்தல் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் வரும் ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பு இன்று பல சேனல்களில் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.
அதன் நிலவரப்படி விருதுநகர் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் மாணிக்க தாகூர் முதல் இடத்திலும், தேமுதிக கட்சியின் சார்பில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் இரண்டாவது இடத்திலும், பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்ட ராதிகா மூன்றாவது இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இது ராதிகாவின் ரசிகர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

அதே நேரத்தில் ராதிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் ராதிகா தன்னுடைய மகன் மற்றும் கணவர் சரத்குமாரோடு கோவில் ஒன்றுக்கு சென்று இருக்கிறார். அந்த வீடியோவை பகிர்ந்த ராதிகா அதற்கு கொடுத்த கேப்ஷனில் பிப்ரவரி 14-ஆம் தேதி பிஏபிஎஸ் சுவாமி நாராயணன் மந்திர் திறப்பு விழாவிற்கு பிறகு என்னுடைய குடும்பத்தோடு கோயிலுக்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
இந்த மாதம் 28ஆம் தேதி நடைபெற உள்ள விஜயமானது அமைதி மற்றும் நல்லிணக்க ஆலயத்திற்கு நாம் மேற்கொள்ளும் மூன்றாவது விஜயமாகும். இந்த கோயிலில் காணப்படும் மற்றும் உணரப்பட்ட ஆன்மீக லட்சியங்களும் தெய்வீக ஒளியும் அமைதியை கொண்டு வருகின்றன. நல்லபடியாக தரிசனத்தை முடித்தோம்.. என்று ராதிகா கூறியிருக்கும் நிலையில் இந்த வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications