நடிகர் விஜய் தந்தையுடன் சீரியலில் இணையும் ராதிகா.. அதுவும் பிரபலமான "அந்த” திரைப்பட பாணியில்
நடிகர் விஜய்யின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகர் உடன் நடிகை ராதிகா சீரியலில் நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சென்னை: நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனரும் ஆன எஸ் ஜே சந்திரசேகர் விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
எஸ் ஏ சந்திரசேகர் நடிக்கும் சீரியலில் நடிகை ராதிகாவும் அவரோடு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த சீரியலை ராதிகாவின் சொந்த நிறுவனமான ரேட நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

பல திறமை கொண்ட இயக்குனர்
திரைப்பட இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் இருக்கும் டைரக்டர் எஸ் ஏ சந்திரசேகர் பற்றிய தகவல்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பரவி வருகிறது. ஏற்கனவே அவருக்கும் அவருடைய மகன் நடிகர் விஜய்க்கும் பிரச்சனை என்கிற பல தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வரும் நிலையில், தற்போது அவர் சின்னத்திரை சீரியலில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே பல ஹிட் திரைப்படங்களை தமிழ், தெலுங்கு, கண்டனம் ,கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் 70 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

நடிப்பும் இருக்கிறது
எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் வெற்றி,நான் சிகப்பு மனிதன் போன்ற பல ஹிட் திரைப்படங்கள் இவரை வேற லெவலில் ரசிகர்களின் மத்தியில் கொண்டு சேர்த்தது. இவர் இயக்கிய ஒரு சில திரைப்படங்களில் இவர் கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கவும் செய்கிறார். அது மட்டுமல்லாமல் கடைசியாக இவர் டிராபிக் ராமசாமி என்கிற திரைப்படத்திலும் தன்னுடைய நடிப்பை தத்ரூபமாக காட்டி இருக்கிறார். ஒரு இயக்குனருக்கு நடிக்கவும் தெரியும், தயாரிக்கவும் தெரியும் என்று பல்வேறு முகங்களை கொண்ட இவர் தற்போது சின்னத்திரை சீரியல்களிலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சம்சாரம் அது மின்சாரம் பாணியா
நடிகர் விஜயின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகருடன் நடிகை ராதிகா சீரியலில் நடிக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே சித்தி 2 சீரியலுக்கு பிறகு எந்த சீரியலிலும் நடிகை ராதிகா நடிக்காமல் இருந்த நிலையில் சில வருடங்கள் இடைவெளி விட்டு இந்த சீரியலில் நடித்திருக்கிறார். பல வருடங்களுக்கு பிறகு இந்த சீரியலில் நடிகை ராதிகா எஸ்.ஏ சந்திரசேகர் உடன் நடிக்க இருப்பது சம்சாரம் அது மின்சாரம் பாணியில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புது கூட்டணி
தற்போது கிழக்கு வாசல் என்ற தொடரில் முக்கியமான கேரக்டரில் நடிகை ராதிகா நடிக்க உள்ளார். விஜய் டிவியில் இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இதுவரைக்கும் ராதிகா நடித்து வந்த சீரியல்கள் அனைத்தும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது முதல் முறையாக விஜய் டிவி சீரியலில் நடிகை ராதிகா நடிக்க இருக்கிறார். இந்த கிழக்கு வாசல் சீரியலில் கதாநாயகியாக ஜீ தமிழில் பூவே பூச்சூடவா சீரியலில் நடித்த ரேஷ்மா மற்றும் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியலில் நடித்த அஸ்வினி ஆகியோரும் நடிக்க இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த சீரியலில் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
-
குடும்பங்களுக்குள் புகுந்து அவதூறு.. ‘குற்றம் நிரூபித்தால் உயிரோட விடக்கூடாது!’ குஷ்பு ஆவேச பேட்டி -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
கருப்பு படத்தில் ஆர்ஜே பாலாஜி ஸ்கேம் பண்ணிட்டாரா? "இந்த” சீரியலின் 30 நிமிட கதை தான் முழு படமா? ரசிகர்கள் ட்ரோல் -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
விஜயாவை அவமானப்படுத்திய மீனா.. ஸ்ருதியை பழிவாங்க நீத்து பிளான்! ரோகிணி வைத்த செக்.. சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
சிறகடிக்க ஆசையில் அதிரடி ட்விஸ்ட்... வீட்டையே அதிர வைத்த விஜயாவின் முடிவு... புது சிக்கலில் சிக்கிய முத்து! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!












Click it and Unblock the Notifications