7 ஆண்டு நட்பு.. நடிகர் அரவிந்த்சாமி கேட்ட கேள்வி.. ராதிகாவை திருமணம் செய்தது பற்றி சரத்குமார் பேட்டி
சென்னை: நடிகை ராதிகா சரத்குமார் இன்று தன்னுடைய அறுபதாவது பிறந்தநாளை வெகு விமர்சனமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.
நடிகை ராதிகாவிற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவருடைய கணவர் நடிகர் சரத்குமார் ராதிகா பற்றி பேட்டி ஒன்றில் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

எதனால் ராதிகாவை திருமணம் செய்து கொண்டேன் என்பது பற்றி அந்த பேட்டியில் சரத்குமார் பேசியிருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நடிகையாகவும், இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் நடிகை ராதிகா பல முகங்களை கொண்டு பலருக்கும் முன்மாதிரியாக கலக்கிக் கொண்டிருக்கிறார். வெள்ளி திரையில் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் பெரும் புரட்சியை செய்து வெள்ளித்திரை நடிகைகள் பலரையும் சின்ன திரையில் வர வைத்தவர்களில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.

ராடான் மீடியா ஒர்க்ஸ் என்ற நிறுவனத்தை நிறுவி அதன் சேர்மனாக இருந்து வரும் ராதிகா தேசிய விருது மட்டுமல்லாமல் 6 ஃபிலிம்பேர் விருது, இரண்டு நந்தி விருது, மூன்று தமிழ் மாநில விருது என அடுக்கடுக்கான பல விருதுகளையும் வாங்கி குவித்து இருக்கிறார். அதோடு ஒரு ராதிகா பழம் பெரும் நடிகர் எம் ஆர் ராதாவின் மகள்தான்.
இந்த நிலையில் தான் கடந்த 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே நடிகர் சரத்குமார் சாயா என்பவரை திருமணம் செய்து பிறகு சில வருடங்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார். சாயா மற்றும் சரத்குமாரின் மகள் தான் நடிகை வரலட்சுமி.

இந்த நிலையில் நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டது பற்றி சரத்குமார் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில், எல்லார் வாழ்க்கையிலும் நிறைய கஷ்டங்கள் இருக்கும். நான் ஒரு நடிகனாக இருக்கும்போது எனக்கு நடந்த காதல் சம்பவங்கள் குறித்த கதைகளை எல்லாம் நான் ராதிகாவிடம் நாங்கள் நட்பாக இருக்கும்போது சொல்லி இருக்கிறேன். ஆனால் அப்போது அவர் தான் எனக்கு மனைவியாக வருவார் என்று நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை.
அதுமட்டுமல்லாமல் நானும் ராதிகாவும் 7 ஆண்டுகளாக நல்ல நண்பர்களாக இருந்திருக்கிறோம். அப்போது ஒரு நாள் அரவிந்தசாமி எங்களிடம் எனக்கு தெரியாமல் கல்யாணமா? என கேட்டு கடுப்பாக்கி இருந்தார். அந்த நேரத்தில் எங்களுக்குள் நட்பு தான் இருந்தது. நான் என் கடந்த காலம் குறித்து நிறைய விஷயங்களை ராதிகாவிடம் திருமணத்திற்கு முன்பு பகிர்ந்து இருக்கிறேன். ஆனால் திருமணத்திற்கு பிறகு நானும் ராதிகாவும் கடந்த காலத்தை பற்றி பேசிக் கொள்வதில்லை என்று அந்த பேட்டியில் சரத்குமார் கூறியிருக்கிறார்.
அதுபோல நடிகர் சரத்குமாரை ராதிகா திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு நடிகர் பிரதாப் போத்தனை திருமணம் செய்து விவாகரத்தும் பெற்றிருந்தார். அடுத்ததாக ரிச்சர்ட் ஹார்ட்டி என்பவரை திருமணம் செய்து அவரையும் பிரிந்து இருந்தார். இவரது மகள் ராயன் ஹார்ட்டி கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனை திருமணம் செய்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று நடிகை ராதிகாவின் பிறந்தநாளுக்கு அவருடைய கணவர் நடிகர் சரத்குமார், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் என்றென்றும் அன்பு, மகிழ்ச்சி, செழிப்பு ஆகியவற்றால் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். அன்புடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்... என்று கூறி ராதிகாவுடைய அதிகமான புகைப்படங்களை வீடியோவாக எடிட் செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications