இந்த வருமானம் உடம்புல ஒட்டுமா? இப்படி உங்க பிள்ளைகளை வளர்க்கணுமா? ராதிகா சரத்குமார் ஆதங்கம்
சென்னை: நடிகை ராதிகா சரத்குமார் சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தன்னைப் பற்றியும், தன் குடும்பத்தை பற்றியும் அவதூறு பரப்புபவர்கள் பற்றி கடுமையாக விமர்சித்து இருக்கிறார். இது இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.
பொதுவாக சமீபத்தில் ஒரு சிலர் திரைத்துறையில் இருக்கும் பிரபலங்கள் பற்றி பல விஷயங்களை பேசி யூடியூப் சேனல்களில் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். இதன் மூலம் அவர்களுக்கு அதிகமான வியூஸ் மற்றும் வருமானம் கிடைத்து வருகிறது. சின்ன விஷயத்தையும் பெரியதாக சிலர் பேசி வருகிறார்கள்.

அதுபோல ஒரு சிலர் சினிமாவில் பிரபலமாக இருப்பவர்களை பற்றி பல்வேறு சர்ச்சையான செய்திகளையும் பேசி வருகிறார்கள். அதிலும் தாங்கள் பக்கத்தில் இருந்து பார்த்தது போலவே சிலர் பேசி வருவது குறித்து சில பிரபலங்கள் தங்களுடைய அதிருப்திகளையும் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் ஒரு சிலர் இவர்கள் இப்படித்தான் எதையாவது பேசிக் கொண்டு இருக்கட்டும் என்று அதைப் பற்றி கண்டுகொள்ளாமல் தங்களுடைய வேலைகளில் கவனமாக இருக்கின்றனர்.
இந்த நிலையில் இது குறித்து நடிகை ராதிகா சமீபத்தில் விகடன் சின்னத்திரை 2023 விருதுகள் வாங்கும் நிகழ்ச்சியில் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் நாங்கள் நடிக்கும் போது உள்ள காலகட்டம் வேறு. இப்பொழுது உள்ள காலகட்டம் வேறு .இப்போது இலவச இன்டர்நெட் இருப்பதால் யாரை வேண்டுமானாலும் என்ன வேணாலும் பேசலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
யாரைப் பற்றியும் அவதூறாக பேசுவதற்கு அவர்களுக்கு உரிமையை யார் கொடுத்தது. வருமானம் வருகிறது என்பதற்காக எந்த லெவலுக்கும் இறங்கி பேசுவதற்காக ஒரு சில குரூப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த மாதிரி குரூப்புகள் எங்களைப் பற்றி எங்கள் குடும்பத்தை பற்றி அவதூறாக பேசி அதில் வரும் பணத்தால் அவர்களுடைய பிள்ளைகளை படிக்க வைத்து அந்த பணத்தில் சாப்பிடுகிறார்கள் என்றால் இதுவெல்லாம் நல்ல விஷயமா?
உங்களுடைய பதிவுகளை எல்லாம் நாங்கள் சிரித்துக் கொண்டே கடந்து விடுவோம் என்று மட்டும் நினைக்காதீர்கள். உங்களால் எங்களுடைய வாழ்க்கையை ஒருபோதும் மாற்ற முடியாது. என்னுடைய வாழ்க்கை பயணத்தையோ வெற்றியையோ உங்களால் ஒரு செகண்ட் கூட மாற்ற முடியாது. நாங்களெல்லாம் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறி வந்தவர்கள். நாங்கள் மிகவும் எளிமையாக வாழ்ந்து வருகிறோம்.
எங்களுடைய பொறுமையை மனித தன்மையை நீங்கள் முட்டாள்தனம் என்று நினைக்கக் கூடாது என்பதை இந்த மேடையில் சொல்லிக் கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன் என்று ராதிகா பேசியிருக்கும் நிலையில் இதை பல ரசிகர்களும் பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள்.
சமீபத்தில் சரத்குமாரின் மகள் வரலட்சுமியின் திருமணத்தின்போது வரலட்சுமி பணத்திற்காக தான் நிக்கோலாயை திருமணம் செய்திருக்கிறார் என்று சிலர் வீடியோக்களில் பேசியிருந்தனர். அதோடு வரலட்சுமியின் திருமணத்திற்கு சரத்குமார் கோடிக்கணக்கில் செலவு செய்திருக்கிறார் என்றெல்லாம் சிலர் பேசி வந்தனர். அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் தான் ராதிகா இப்படி பேசி இருக்கிறாரா? என்று சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications