ரஜினிக்கு மட்டுமல்ல.. கமலோடு அந்த டாப் படத்தில் கதாநாயகியாக நடித்த பாக்கியலட்சுமி சீரியல் “ஈஸ்வரி”
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரி கேரக்டரில் நடித்து வரும் நடிகை ராஜலட்சுமி நடிகர் கமல்ஹாசன் நடித்த சூரசம்ஹாரம் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்பட போஸ்டர் இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் ஒரு சில நடிகைகள் ஆரம்பத்தில் கதாநாயகியாக புகழின் உச்சத்தில் கொடிக்கட்டி பறந்து கொண்டிருந்தாலும் சில வருடங்களில் அவர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போனதும் சின்னத்திரையை நோக்கி அடி எடுத்து வைக்கிறார்கள். அந்த வரிசையில் பல நடிகர்கள் சின்ன திரையில் வெற்றி பெற்று புகழின் உச்சத்தில் வலம் வருகிறார்கள். ஆனால் ஒரு சில நடிகைகள் தான் நடிகையாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சில நடிகைகள் அம்மா, கேரக்டரிலும் வில்லியாகவும் மாறிவிடுகிறார்கள். அந்த வரிசையில் ஒருவர்தான் நடிகை ராஜலட்சுமி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் மாமியார் ஈஸ்வரியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்போது சீரியலில் இவரை சுற்றி தான் கதை ஓடிக்கொண்டிருக்கிறது என்று சொல்ல வேண்டும்.
பாக்யா வீட்டில் இருந்து கோபியோடு ராதிகா வீட்டிற்கு ஈஸ்வரி சென்றிருந்தார். அங்கு ராதிகா கர்ப்பம் கலைந்ததற்கு காரணம் ஈஸ்வரி தான் என்று ராதிகாவின் குடும்பத்தினர் எல்லோரும் குற்றம் சாட்டுகின்றனர். ராதிகாவின் அம்மா கமலாவும் ராதிகாவும் சொல்வதைக் கேட்டு கோபி தன்னுடைய குழந்தையை கலைந்து போனதற்கு காரணம் நீங்கதான் நீங்கதான் கொலைக்காரி என்று ஈஸ்வரியை திட்டி வீட்டை விட்டு துரத்தி விட்டிருக்கிறார்.
பாக்யா வீட்டிற்கு ஈஸ்வரி மீண்டும் திரும்பி வந்திருக்கும் நிலையில் பாக்கியா ஈஸ்வரியை பழைய நிலைமைக்கு மாற்ற வேண்டும் என்று சொல்லி கோயிலுக்கு கூட்டிட்டு போய் ஈஸ்வரியின் பழைய தோழி ஒருவரையும் சந்திக்க வைத்திருக்கிறார். அதே நேரத்தில் ஈஸ்வரி மீது ராதிகா போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்க இருப்பதால் இனி அடுத்து போலீஸ் ஸ்டேஷனில் தான் கதை போகப்போகிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் ஈஸ்வரியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ராஜலட்சுமி குறித்த தகவல்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அதாவது ராஜலக்ஷ்மி இப்போது அம்மா, மாமியார் கேரக்டரில் நடித்திருந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அதுவும் நடிகர் ரஜினிகாந்துக்கு மூன்று முகம் திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார். அந்தப் படத்தில் அலெக்சாண்டர் மனைவியாக நடித்து இருப்பார். அதுபோல நடிகர் கமல்ஹாசன் நடித்த சூரசம்காரம் திரைப்படத்தில் சக்கரவர்த்தியின் கேரக்டரின் மகளாக நடித்திருக்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா ஈஸ்வரி மீது அதிகமான பாசம் வைத்திருக்கிறார். ஆனால் சூரசம்காரம் படத்தில் ராஜலட்சுமி கேரக்டர் பாக்கியலட்சுமி தான். இந்த தகவலை தெரிந்து கொண்டதும் ரசிகர்கள் இவர்கள் இருவருக்கும் இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கிறதா? அதனால் தான் பாக்கியா ஈஸ்வரி மீது இவ்வளவு பாசம் கட்டுகிறாரா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ராஜலட்சுமி மூன்று முகம் திரைப்படத்தில் மட்டுமில்லாமல் மேலும் பல தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாகவும் முக்கிய கேரக்டரிலும் நடித்திருக்கிறார். அதிலும் சுஜாதா, அதிசய பிறவிகள், அர்ச்சனை பூக்கள், பூவிழி வாசலிலே, சங்கர் குரு போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அதற்கு பிறகு சில வருடங்களுக்கு முன்பு வெளியான யாரடி நீ மோகினி, பிரியசகி, வரலாறு, திருப்பாச்சி, எம் மகன், பிரிவோம் சந்திப்போம், குட்டி, உத்தமபுத்திரன், சைவம் போன்ற பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications