Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரட்சிதா முடிவால் டைவர்ஸ்க்கு ரெடி ஆகும் தினேஷ்? இதுதான் காரணமா?முயற்சிகள் எல்லாம் இப்படி ஆகிவிட்டதே

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமிக்கு அவருடைய கணவர் தினேஷ் கார்த்திக் உடன் விவாகரத்து ஆகப்போவதாக தகவல்கள் மீண்டும் பரவி வருகிறது.

ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு இந்த பேச்சு அதிகமாக அடிபட்டு வந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரச்சிதாவின் மனம் மாறும் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர்.

என்ன நடந்தாலும் ரட்சிதா மனம் இறங்காமல் இருக்கும் நிலையில் தினேஷ் புது முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வலம் வருகிறது.

சின்னத்திரை காதல் திருமணம்

சின்னத்திரை காதல் திருமணம்

சின்னத்திரையில் நடிகர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்வது ஒன்றும் புதியதல்ல. ஆனால் ஒரு சில நடிகர்கள் மட்டும்தான் வாழ்க்கை பயணத்தில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கின்றனர். சிலருடைய வாழ்க்கை ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக பலரும் மெச்சும் வகையில் இருந்தாலும் டக்கென்று அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அவர்களுடைய வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்பட்டு விடுகிறது. அந்த மாதிரி தான் சின்னத்திரை நடிகை ஆன சரவணன் மீனாட்சி மூலம் பிரபலமடைந்த நடிகை ரட்சிதா மற்றும் அவருடைய கணவர் தினேஷ் கார்த்திக் வாழ்க்கையும் இருந்து வருகிறது.

முதல் சீரியலில் திருமணம்

முதல் சீரியலில் திருமணம்

பிரிவோம் சந்திப்போம் என்ற முதல் சீரியலில் ஒன்றாக நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்ட ரட்சிதா மகாலட்சுமி மற்றும் தினேஷ் கார்த்திக் இருவருக்கும் இடையே அதிகமான காதல் இருந்ததன் காரணமாக இவர்கள் இருவரும் சமூக வலைத்தளத்தில் பலரும் பாராட்டும் தம்பதியினராக வலம் வந்து கொண்டிருந்தனர். இவர்களுடைய வாழ்க்கையில் யார் கண்ணுபட்டதோ என்று தெரியவில்லை. இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்தார்கள்.

தினேஷ் கார்த்திக் செய்த செயல்

தினேஷ் கார்த்திக் செய்த செயல்

சில மாதங்களுக்கு முன்பே ரட்சிதா மற்றும் தினேஷ் கார்த்திக் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடியப்போகிறது என்று தகவல்கள் வெளியாகி வந்தது. ஆனால் அதை குறித்து ரட்சிதா தரப்பில் இப்ப வரைக்கும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. ஆனால் அது குறித்து தினேஷ் சில பேட்டிகளில் பேசி இருக்கிறார். அப்போது யாரையும் நாம் கட்டாயப்படுத்த முடியாது. ஒரு நாள் அவர்கள் நம்மை புரிந்து கொள்வார்கள் என்று பேசி இருந்தார். நானும் பல தவறுகளை செய்து இருக்கிறேன். ஆனால் இப்போதுதான் அது புரிகிறது என்று கூறியிருந்தார். இந்த நிலையில் ரட்சிதா மகாலட்சுமி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தபோது ரட்சிதாவிற்கு அதிகமான சப்போர்ட் கொடுத்திருந்தார். முதல் நாளில் தொடங்கி கடைசி நாள் வரைக்கும் ரச்சிதாவிற்காக ஒவ்வொரு நாளும் தன்னுடைய ஓட்டு அளித்து தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தார்.

மனம் மாறவில்லை

மனம் மாறவில்லை

ரட்சிதா மகாலட்சுமி இடம் ராபர்ட் மாஸ்டர் நடந்து கொள்ள விதம் பற்றி நேரடியாகவே பேட்டி ஒன்றில் பேசி அவருக்கு ரெக்கார்ட் கொடுக்க வேண்டும் என்று பேசி இருந்தார். அது மட்டும் அல்லாமல் ரட்சிதாவிற்கு ஆதரவு கொடுக்கும் ரசிகர்களுக்கும் அடிக்கடி நன்றி தெரிவித்து வந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரட்சிதா மனம் வருவார் என்று அதிகமானோர் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் ரட்சிதா அதை பற்றி எந்த இடத்திலும் பேசவே இல்லை. ரட்சிதாவின் நண்பர்கள் உறவினர்கள் என பலரும் பேச்சுப் பார்த்தாலும் ரட்சிதாவின் மனம் மாறியதாக தெரியவில்லை என்று சில தகவல்கள் வெளியாகி வருகிறது.

விவாகரத்து உண்மைதானா

விவாகரத்து உண்மைதானா

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரட்சிதா தன்னுடைய வழக்கமான பணிகளை தொடர்ந்து கொண்டிருக்கிறார். அதுபோல தினேஷ் கார்த்திக் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் இரண்டிலும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் என்னும் சீரியலிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் ரட்சிதாவை பற்றி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எந்த பதிவுகளையும் தினேஷ் கார்த்திக் வெளியிடாமல் இருந்து வந்தாலும் தற்போது மனம் இறங்காத ரட்சிதாவை விவாகரத்து செய்வதற்காக தினேஷ் கார்த்திக் வழக்கறிஞர்களை சந்தித்துக் கொண்டு இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+