கோடி கோடியாய் சொத்து சேர்த்த ரமா பிரபா.. நடுத்தெருவில் நின்றதுமே.. ஒரு நொடிகூட ரஜினி யோசிக்கல.. செம
சென்னை: பழம்பெரும் நடிகை ரமா பிரபா குறித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்திருப்பவர்.. மறைந்த நடிகர் சரத்பாபுவின் முதல் மனைவியான ரமா பிரபாவின், இக்கட்டான நிலைமையில் நடிகர் ரஜினிகாந்த் உதவி செய்திருக்கிறார். இதுகுறித்து நெகிழ்ச்சியுடன் அந்த பேட்டியில் ரமா பிரபா நினைவுகூர்ந்துள்ளார்.
ரமா பிரபா, 1947ல் ஆந்திரப் பிரதேச மாநிலம் மதனப்பள்ளி நகரில் பிறந்தவர்.. நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்த இவர், ஊட்டியிலும், சென்னையிலும் தன்னுடைய அத்தை பராமரிப்பின் கீழ் வளர்ந்தவர்.. ஆனால், மாமா குடும்பத்துடன் அடிக்கடி பயணம் செய்வதால் ரமா பிரபாவின் படிப்பில் இடையூறுகள் ஏற்பட்டன.. அதேசமயம், பாதுகாப்பான முறையில் வாழ முடிந்தது.

முன்னணி நடிகை
மாமா மறைவுக்கு பிறகு, சினிமாவில் நடிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.. தன்னுடைய நடிப்பு திறமையால் 1400 திரைப்படங்களில் ரமா பிரபா நடித்துள்ளார்... சர்வர் சுந்தரம், சாந்தி நிலையம், பட்டணத்தில் பூதம், வசந்த மாளிகை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் நகைச்சுவை நடிகையாகவே அறியப்பட்டு, தனக்கென ரசிகர் வட்டாரத்தை உருவாக்கினார்.. தெலுங்கு சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
பிரபல நடிகையின் நிலைமை
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் 70 மற்றும் 80 களில் பிரபலமாக இருந்த நடிகர் சரத்பாபுவை மணந்தார். ஆனால், சரத்பாபுவை விட 4 வயது மூத்தவர் ஆவார். இந்த தம்பதி வாழ்க்கையை மகிழ்ச்சியாக துவங்கினாலும், அவர்களின் நிஜ வாழ்க்கை உறவு சவால்களால் நிறைந்திருந்தது.. இதனால் 1988 லேயே இவர்கள் விவாகரத்து செய்து கொண்டனர். அதற்குபிறகும்கூட, ஏராளமான இன்னல்களை, தடைகளை ரமாபிரபா சந்தித்தார்..
ஒருகட்டத்தில் வாழ்க்கை சூழல் கடினமாகவே மாறிவிட்டது. தெலுங்கு சினிமாவில் அதிக படங்களில் நடித்ததுடன், கதாநாயகிகளுக்கு இணையாக சொத்துகளையும் சம்பாதித்தார்.. ஆனாலும், அந்த சொத்துகளை இழந்து கஷ்டமான நிலைக்கு தள்ளப்பட்டார். அப்போதுதான் ரஜினிகாந்த் உதவி செய்திருக்கிறார்.
நடுரோட்டுக்கு வந்தேன்
இதுகுறித்து பிரபல சேனல் ஒன்றுக்கு ரமா பிரபா சமீபத்தில் பேட்டி தந்திருந்தார்.. அதில், "ரஜினிகாந்த் எத்தனையோ கஷ்டங்கள், அவமானங்களை தாண்டித்தான் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு வந்திருக்கிறார்.. இந்த அளவுக்கு புகழின் உச்சிக்கு சென்றபிறகும், எளிமையாகவும், அடக்கமாகவும் இருக்கிறார். தன்னுடைய வாழ்க்கையில் பல கஷ்டத்தை புரிந்துள்ளதால், உதவி கேட்டு வந்தவர்களை வெறும் கையோடு அனுப்புவது இல்லை. அவரிடம் உதவி கேட்டவர்கள் லிஸ்ட்டில் நானும் இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் ஒருவரை நம்பி மோசம் போனேன். சொத்துகளை எல்லாம் இழந்து கட்டிய துணியோடு நடுரோட்டுக்கு வந்து நின்றுவிட்டேன். அந்த சமயத்தில்தான் வேறு வழி தெரியாமல் ரஜினிகாந்த் வீட்டிற்கு போனேன்..
ஒரு நிமிஷம் கூட யோசிக்கல
வழி செலவுக்கு பணம் கொடுத்தால் போதும் என்று நினைத்துதான் அவரிடம் சென்றேன்.. ஆனால், என்னுடைய நிலைமையை பார்த்து ரஜினிகாந்த், மிகவும் வருத்தப்பட்டார். உடனே தன்னிடமிருந்த 40 ஆயிரம் ரூபாயை எடுத்து எனக்கு கொடுத்து விட்டார். அந்த காலத்தில், 40,000 என்பது மிகப்பெரிய பணம். ஒரு நிமிஷம்கூட யோசிக்காமல், அவரிடமிருந்த பணத்தை அப்படியே தூக்கி என்னிடம் கொடுத்து விட்டார். அவர் தந்த அந்த பணத்தினால் என்னுடைய பல கஷ்டங்கள் தீர்ந்து விட்டன. ரஜினிகாந்த்துக்கு எப்போதும் கடன் பட்டிருப்பேன்" என்றார்.












Click it and Unblock the Notifications