நடிகை ரம்பாவை போலவே அவருடைய மகள்..அதைவிடுங்க, அது என்ன கையில்?குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: நடிகை ரம்பா தன்னுடைய மகள் பள்ளியில் பரிசு பெற்ற புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
பார்ப்பதற்கு அப்படியே ரம்பாவை போலவே இருக்கும் அவருடைய மகளை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்கள் பலரும் தங்களுடைய ஆசிர்வாதங்களையும், வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

நடிகை ரம்பா என்ற பெயரை சொன்னாலே 90 கிட்ஸ்களின் மனம் இப்போதும் குதூகலித்து விடும். அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை ரம்பா தன்னுடைய மகள் புகைப்படத்தை வெளியிட்டு பலரையும் வியக்க வைத்திருக்கிறார்.
நடிகை ரம்பா இதுவரைக்கும் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை நடித்திருக்கிறார். அதுவும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, பேஸ்பூரி, இங்கிலீஷ் போன்ற பல மொழிகளிலும் நடித்து பிரபலமானவர் தான். ஆனால் திருமணத்திற்கு பிறகு தன்னுடைய நடிப்பு வாழ்க்கைக்கு முழுக்கு போட்டு இருக்கும் ரம்பா தன்னுடைய குடும்பத்தை பார்த்து வரும் குடும்ப தலைவியாக மாறி இருக்கிறார்.

இவர் தமிழில் உள்ளத்தை அளித்தா, செங்கோட்டை, ரஜினியின் அருணாச்சலம், நடிகர் அஜித்குமாரோடு ராசி, விஜயோடு நினைத்தேன் வந்தாய் போன்ற பல டாப் கதாநாயகன்களோடு கலகலாக நடித்திருக்கிறார். இவருடைய நடிப்போடு தொடை அழகும், சிரிப்பும் இவருக்கு மேலும் ப்ளஸ் பாய்ட் தான். டாப் கதாநாயகர்களோடு நடித்துக் கொண்டிருந்த ரம்பா கடைசியாக பெண் சிங்கம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
பிறகு கனடாவில் தன்னுடைய குடும்பத்தோடு வசித்து வரும் ரம்பாவிற்கு லாவண்யா, சாஷா என்ற இரண்டு மகள்களும் ஷிவீன் என்ற மகனும் இருக்கின்றனர்.இந்த நிலையில் தன்னுடைய மகள் லாவண்யா பள்ளியில் பேச்சு போட்டியில் பேசி பரிசு வாங்கி இருக்கிறார். அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரம்பா தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் நினைத்தேன் வந்தாய் திரைப்படத்தில் ரம்பாவை பார்த்த மாதிரியே இருக்கிறது இப்போது லாவண்யாவை பார்ப்பதற்கு என்று கூறி வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் அதிகமான ரசிகர்கள் நீங்கள் எப்போதும் மீண்டும் நடிக்க வருவீர்கள் என்று கேட்டு வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் பல பிரபலங்களும் ரம்பாவின் மகளுக்கு வாழ்த்துக்களையும், ஆசிர்வாதங்களையும் அனுப்பி வருகின்றனர்.
-
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications