நடிகை ரம்பா ரீலாக செய்ததை ரியலாக செய்து காட்டிய மகள்.. கூட இருக்கிறது யாருன்னு தெரிகிறதா?
சென்னை: நடிகை ரம்பா தன்னுடைய மகள் பள்ளியில் பாட்டு பாடிய வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.
பல வருடங்களுக்கு பிறகு தன்னுடைய குழந்தைகள் மற்றும் கணவரோடு ரம்பா எடுத்த புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை ரம்பா பாட்டு பாடுவது போன்று திரைப்படங்களில் ரீலாக செய்ததை அவருடைய மகள்கள் ரியலாக செய்து கொண்டிருப்பதை குறித்து உணர்வுபூர்வமாக ரம்பா கேப்ஷனோடு வெளியிட்டு இருக்கிறார்.

நடிகை ரம்பா என்று சொன்னால் 90ஸ் ரசிகர்கள் பலருக்கும் இப்போதும் ஹார்ட் பீட் எகிற தொடங்கிவிடும். அந்த அளவிற்கு 90ஸ் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை ரம்பா டாப் இடத்தில் இருக்கும் போது சினிமாவை விட்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்து விட்டார். அதற்கு பிறகு சின்ன திரையில் பல ரியாலிட்டி ஷோக்கலில் நடுவராக கலந்து கொண்ட இவர் தன்னுடைய குடும்ப புகைப்படங்களையும் வீடியோக்களையும் இப்போது வெளியிட்டு இருக்கிறார்.
நடிகை ரம்பாவின் நிஜ பெயர் விஜயலட்சுமி என்பது பலருக்கும் தெரியாது. ரம்பா உழவன் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகி அதை தொடர்ந்து, உள்ளத்தை அள்ளித்தா, சுந்தர புருஷன், சிவசக்தி, செங்கோட்டை, அடிமை சங்கிலி, அருணாச்சலம், ராசி, நினைத்தேன் வந்தாய், காதலா காதலா, உனக்காக எல்லாம் உனக்காக, மின்சார கண்ணா, உன்னருகே நானிருந்தால், அன்புடன், குங்கும பொட்டு கவுண்டர் என பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் தான் 2010ல் பிரகாஷ்ராஜ் உடன் இணைந்து விடியும் வரை கத்தி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். மூன்று மொழிகளில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியாகவில்லை. அந்த நேரத்தில் கனடாவை சேர்ந்த இலங்கைத் தமிழரான இந்திரகுமார் பத்மநாதனை 2010ல் திருமணம் செய்து கொண்டார். இப்போது நடிகை ரம்பாவிற்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர்.
திருமணத்திற்கு பிறகு பல சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வந்தார். அதுவும் குறிப்பாக மானாட மயிலாட ஜோடி நம்பர் ஒன் போன்ற பல டான்ஸ் நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்து கொண்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளோடு வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்ட நடிகை ரம்பா தன்னுடைய குடும்பத்தோடு எடுத்த புகைப்படதை இப்போது வெளியிட்டு இருக்கிறார்.

நடிகை ரம்பா நடித்த நினைத்தேன் வந்தாய் திரைப்படத்தில் அவரை போலவே இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த திரைப்படத்தில் திரைப்படத்தில் அவர் பாட்டு பாடுவது போன்று நடித்துக் கொண்டிருப்பார். ஆனால் இப்போது அவருடைய மகள் நிஜத்தில் அழகாக மேடையில் பாடி கொண்டிருக்கிறார். அதோடு ரம்பாவின் கணவர் புகைப்படங்களையும், வெளியிட்டு இருக்கிறார். தற்போது இது வைரலாகி வருகிறது.
-
பொற்காலம் படத்தில் முரளியின் தங்கச்சியாக நடித்த நடிகை மரணம்.. இப்படியா நடக்கணும்? கலங்கி நிற்கும் குடும்பம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
பொசுக்குனு கண்ணீர் விட்ட ஜோதிகா.. டாப் பொசிஷனில் சூர்யா? கருப்பு கன்பார்மா 500 கோடி அடிக்குமாமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications