எங்க வீட்ல விசேஷம்.. வதந்திக்கு பதிலடி.. கணவரோடு மகிழ்ச்சியான போஸ்ட் போட்ட ரம்பா.. குவியும் வாழ்த்து
சென்னை: நடிகை ரம்பா தன்னுடைய கணவரோடு மகிழ்ச்சியான போஸ்ட் வெளியிட்டு இருக்கிறார். அதற்கு சினிமா, சீரியல் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். சில வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்த ரம்பா இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டிருக்கிறார்.
90ஜ் கிட்ஸ்களின் ஃபேவரைட் கனவு கன்னி ரம்பாவிற்கு எப்போதும் ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக நடித்த பல நடிகைகள் சினிமா வாழ்க்கையை விட்டுவிட்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டனர். அவர்கள் வரிசையில் நடிகை ரம்பாவும் ஒருவர்.

மீண்டும் ரம்பா
ஆரம்பத்தில் பல திரைப்படங்களில் தன்னுடைய க்யூட்டான சிரிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்த ரம்பா திருமணத்திற்கு பிறகு அதிகமான திரைப்படங்களில் நடிக்கவில்லை. ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். அதுவும் அவருக்கு பெரிய பிரபலத்தை கொடுக்கவில்லை என்பதால் சினிமாவிற்கு டாட்டா காட்டிவிட்டு குடும்பத்தோடு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.
ரம்பாவின் குடும்பம்
ரம்பாவிற்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். அதில் மூத்த மகள் ரம்பாவை ஜெராக்ஸ் எடுத்தது போல இருக்கிறார். ரம்பா தன்னுடைய குழந்தைகள் மற்றும் கணவரோடு எடுக்கும் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். அதை பார்க்கும் ரசிகர்கள் சினிமாவிற்கு அடுத்த கதாநாயகி ரெடியாகிவிட்டார் என்று கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.

ரம்பா அறிமுகமான படம்
ரம்பா தமிழ் சினிமாவில் அறிமுகமானது உழவன் என்ற திரைப்படத்தின் மூலமாக தான். அந்த திரைப்படத்தை விடவும் அதற்கு பிறகு அவர் நடித்த திரைப்படங்கள் அவருக்கு அதிகமான ஹிட் கொடுத்தது. அதிலும் உள்ளத்தை அள்ளித்தா, சுந்தர புருஷன், செங்கோட்டை, விஐபி, அருணாச்சலம், காதலா காதலா என ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிக்காட்டி இருந்தார்.

விஜய், அஜித் ஜோடி
விஜய், அஜித் போன்ற முன்னணி கதாநாயகர்களோடு ஜோடியாக நடித்திருக்கிறார். விஜய்க்கு ஜோடியாக பல படத்தில் நடித்திருந்தாலும் மின்சார கண்ணா திரைப்படத்தில் விஜயை ஒன்சைடாக காதலிக்கும் கேரக்டரில் நடித்திருந்தார். அதுபோல ரம்பா என்றதுமே அழகிய லைலா என்னும் பாடலில் பாவாடையை காற்றில் பறக்கவிட்டு அவர் போட்ட டான்ஸ் தான் பலருக்கு நினைவிற்கு வரும்.

அழகிய லைலா
இந்த பாடலின் தாக்கம் இப்போது உள்ள 2k கிட்ஸ்களுக்கும் இருக்கிறது. சமீபத்தில் இந்த பாடல் பெரிய அளவில் ட்ரெண்டானது. தொடையழகி ரம்பா என்று சொன்னால் இளைஞர்கள் மட்டும் அல்லாமல் இளம் வயதை கடந்தவர்கள் கூட பிரைட் அடைந்து விடுவார்கள். அந்த அளவிற்கு இவருடைய க்யூட்டான சிரிப்பு, ஸ்டைலான பார்வையால் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், பெங்காலி என பலமொழி ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார்.
ரம்பா சொத்து மதிப்பு
பெண் சிங்கம் என்ற திரைப்படத்தில் கடைசியாக நடித்துவிட்டு நடிப்பு வாழ்க்கைக்கு முழுக்கு போட்டிருந்தார். அதேபோல கடந்த 2019ல் இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்திருந்தார். அதுபோல ரம்பாவின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 3 மில்லியன் டாலர் வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதுபோல ரம்பாவின் கணவர் இந்திரகுமார் மேஜிக் வுட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறாராம்.

நடிக்காத காரணம்
அவருடைய கம்பெனியில் கிட்சன் மற்றும் படுக்கை அறை, குளியலறை பொருள்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். சமீபத்தில் கூட கோயம்புத்தூரில் தன்னுடைய கடையில் இரண்டாவது பிராஞ்ச் திறப்பு விழாவில் ரம்பா கலந்து கொண்டு இருந்தார். அப்போது தமிழ் சினிமாவில் பெண் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கதை இல்லை அதனால் தான் எனக்கு சினிமாவில் நடிக்க இப்போது ஆர்வமில்லை என்றும் கூறியிருந்தார்.
மகிழ்ச்சி செய்தி
இது ஒரு பக்கம் இருந்தாலும் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சின்னத்திரையிலும் ரம்பா என்ட்ரி கொடுத்திருக்கிறார். அதுவும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டிருக்கிறார். அதேபோல இன்று அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புதிய வீட்டின் பூமி பூஜை நடத்தப்பட்டிருக்கிறது என்று தன்னுடைய கணவரோடு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

வதந்திகளுக்கு பதிலடி
இவருக்கு பல திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை ரம்பாவிற்கு தெரிவித்து வருகிறார்கள். அதுபோல சில மாதங்களுக்கு முன்பு ரம்பா அவருடைய கணவரை விவாகரத்து செய்யப் போகிறார் என்ற வதந்திகள் பரவி வந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் இந்த புகைப்படம் இருக்கிறது என்று ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications