மீனா பற்றி இதெல்லாம் வெளியே தெரியாது.. பேசிக்கொண்டிருக்கும் போதே அழுத ரம்பா.. உடைபட்ட ரகசியம்
சென்னை: நடிகை ரம்பாவும், மீனாவும் நெருங்கிய தோழிகள். அடிக்கடி இவர்கள் இருவரும் புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் ரம்பா மீனா பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசி இருந்தார். அப்போது மீனாவின் கணவர் இறந்த சமயத்தில் என்ன நடந்தது என்று எமோஷனலாக ரம்பா பேசியிருந்தார். பேசும்போதே ரம்பா கண்கலங்கி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் ஆகி கதாநாயகியாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு சில வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த மீனா இப்போது மீண்டும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடுவராக கலந்து கொண்டு இருக்கிறார். மீனாவிற்கு சினிமாவிலும் அதிகமான நெருங்கிய தோழிகள் இருக்கிறார்கள்.

மீனாவின் தோழிகள்
கடந்த 2022 ஆம் ஆண்டு தான் மீனாவின் கணவர் வித்தியாசாகர் உடல் நிலை குறைபாட்டால் காலமானார். அந்த நேரத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்தது நடிகை ரம்பா, கலா மாஸ்டர் போன்ற ஒரு சில நடிகைகள் தான். இந்த நிலையில் மீனா குறித்து நடிகை ரம்பா பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் அவர் பேசும்போது மீனாவை எனக்கு பல வருடங்களாக தெரியும் அவர் எனக்கு நெருங்கிய தோழி. அதற்காக அவரை அங்கே வா இங்கே வா என்று நான் அலைய வைக்க மாட்டோம்.
மீனாவின் கணவர் இறப்பு
மீனாவிற்கு எப்போதும் துணையாக நாங்கள் இருக்கிறோம் என்பதை அவருக்கு புரிய வைப்போம். அதேபோல மீனாவின் கணவர் வித்தியாசாகர் இறந்த சமயத்தில் நாங்கள் உடைந்து போய்விட்டோம். அந்த நேரத்தில் மீனாவிற்கு துணையாக நான் இருக்க வேண்டும் என்று கடவுள் தலையில் எழுதி வைத்திருக்கிறார். அதனால் மீனாவிற்க்கு துணையாக அந்த நேரத்தில் என்னால் வர முடிந்தது. இல்லை என்றால் வந்திருக்க முடியாது.
செங்கோட்டை திரைப்படம்
மீனா வாழ்க்கையில் பல கஷ்டங்களை பார்த்திருக்கிறார். ஆரம்பத்தில் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி பல திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார். புகழின் உச்சத்தில் இருக்கும்போதும் யாரிடமும் பிகு செய்ய மாட்டார். நானும் மீனாவும் செங்கோட்டை திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருந்தோம். அது கூட எங்களுடைய பந்தம் என்று தான் சொல்வேன்.

அழகான நட்பு
அப்படி ஒரு படத்தில் நாங்கள் நடித்ததால் தான் எங்களுக்குள் நட்பு உறுதியானது. மீனாவின் அம்மாவும் ரொம்பவும் தைரியமானவங்க, மீனாவுக்கு ஒரு குழந்தை மட்டும் தான் இருக்கிறார்கள். அவங்களும் மீனாவை போலவே எல்லாரிடமும் பழகுவாங்க. மீனாவின் கணவர் இறந்த சமயத்தில் மீனாவிற்க்கு நாங்கள் துணையாக இருந்தோம். அவருடைய இறுதி சடங்குகளுக்கு கூட நாங்கள் கூட இருந்து மீனாவை பழைய நிலைக்கு கொண்டு வந்தோம்.
ரம்பா எமோஷனல்
மீனாவும் அவருடைய அம்மாவும் தைரியமாக இருந்தாலும் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு அது தெரியாது. மீனா எப்போதும் தனியாக இல்லை அவருக்கு நாங்கள் எல்லோரும் துணையாக இருக்கிறோம் என்று பேசிக் கொண்டிருக்கும் போதே நடிகை ரம்பா எமோஷனல் ஆகி இருக்கிறார்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications