எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி
சென்னை: நடிகர் விஜய் குறித்து சமீப காலமாக பல சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், நடிகை ரம்பா அளித்த ஒரு பேட்டி தற்போது வைரலாகி, விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

விஜய்யை சந்தித்த ரம்பா
சில மாதங்களுக்கு முன்பு, ரம்பா தனது குடும்பத்துடன் நேரில் விஜய்யை சந்தித்தார். அந்த சந்திப்பில் எடுத்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததும், அது இணையத்தில் வைரலானது. அந்த புகைப்படங்களில் விஜய், ரம்பாவின் மகனை தூக்கி கொஞ்சுவது, குடும்பத்துடன் பேசி இருப்பது போன்ற காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தது.
இதையடுத்து சமூக வலைதளங்களில் பல கேள்விகள் எழுந்தன. ரம்பா அரசியலுக்கு வரப் போகிறாரா?, விஜய்யின் படத்தில் மீண்டும் நடிக்கப் போகிறாரா? என்று பலர் பேச ஆரம்பித்தனர்.
உண்மையை சொன்ன ரம்பா
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ரம்பா தனது பேட்டியில் உண்மையை பகிர்ந்துள்ளார். அவர் சொன்னதாவது, "நான் பல நடிகர்களுடன், பல மொழிகளில் நடித்திருந்தாலும், என் மகனுக்கு விஜய் தான் ரொம்ப பிடிக்கும். குறிப்பாக 'நான் வரவா' பாடல் வந்த சமயத்தில் அந்த பாடலை அடிக்கடி போட்டு டான்ஸ் ஆடுவான். வீட்டில் விஜய் படம் டிவியில் வந்தாலே 'எனக்கு இவரை தெரியும், விஜய் விஜய்' என்று கத்துவான்."
"அதனால் தான் ஒரு நாள் விஜய்க்கு மெசேஜ் அனுப்பி, 'குடும்பத்துடன் வந்து சந்திக்கலாமா?' என்று கேட்டேன். உடனே அவர் வரச் சொன்னார்." "நாங்களும் குடும்பத்துடன் சென்று சந்தித்தோம். அவர் என்னுடன் 10 நிமிடம் தான் பேசினார். ஆனால் என் மகனுடன் ஒரு மணி நேரம் விளையாடிக் கொண்டே இருந்தார். என் மகனும் அவருடன் ரொம்ப நன்றாக பழகிவிட்டான்." "விஜய்க்கு குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும்" என்று ரம்பா தெரிவித்துள்ளார்.
விஜய் - ரம்பா சேர்ந்து நடித்த படங்கள்
விஜய் மற்றும் ரம்பா இணைந்து நடித்த மின்சார கண்ணா படம் ரசிகர்களிடையே இன்னும் நினைவில் நிற்கும். அந்த படத்தில் வந்த "ஊதா ஊதா ஊதாப்பூ" போன்ற பாடல்கள் இன்றும் பிரபலமாக இருக்கின்றன. அந்த காலகட்டத்தில் இருவரின் ஜோடி ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்டது. அதுபோல நினைத்தேன் வந்தாய் உட்பட பல படங்களிலும் இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்திருக்கிறார்கள்.

விஜய் குறித்து பரவி வரும் சர்ச்சைகள்
இந்நிலையில், விஜய் குறித்து சமீபத்தில் பல சர்ச்சைகள் பரவி வருகின்றன. குறிப்பாக குடும்ப பிரச்சனை குறித்து வதந்திகள், மனைவி விவாகரத்து மனு கொடுத்ததாக பரவி வரும் தகவல்கள், குழந்தைகளை கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் என்று பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகின்றன.
ரசிகர்களின் பதிலடி
இந்த நிலையில் தான் ரம்பா கூறிய "விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்" என்ற தகவலை, ரசிகர்கள் தற்போது அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். "குழந்தைகளுடன் ஒரு மணி நேரம் விளையாடும் மனிதர் எப்படி குழந்தைகளை புறக்கணிப்பார்?" "இதுவே விஜய்யின் உண்மை முகம்" என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்".
-
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம்












Click it and Unblock the Notifications