கங்கை நதிக்கரையில் ரம்யா பாண்டியன் திருமணம்.. வெளியான க்யூட்டான புகைப்படம்.. குவியும் வாழ்த்து
சென்னை: நடிகை ரம்யா பாண்டியனுக்கு அவருடைய காதலர் தவோன் என்பவருடன் இன்று (நவம்பர் 8ஆம் தேதி) ரிஷிகேஷ் அருகே சிவபுரி கங்கை நதிக்கரையில் திருமணம் நடைபெற்று இருக்கிறது. அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது .ரசிகர்கள் பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
சமீபத்தில் பல நடிகைகள் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கலக்கி கொண்டு வருகிறார்கள். ஆனால் நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர் திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அங்கு பெரிய அளவில் இவருக்கு பிரபலம் கிடைக்காததால் சின்னத்திரையில் குக் வித் கோமாளி, பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இணையத்தில் அதிகமான ரசிகர்களை வைத்திருக்கும் ரம்யா பாண்டியன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்து கொண்ட போது அதிக அளவில் விமர்சனங்களையும் சந்தித்தார். ஆனாலும் அவருடைய ரசிகர்களின் ஆதரவால் இந்த நிகழ்ச்சியில் அதிக நாட்கள் இருந்தார். அந்த நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன் இருக்கும்போது அவர்தான் பலருடைய ஸ்டேட்டஸ் சாங்குகளில் இடம் பிடித்துக் கொண்டு இருந்தார்.

மொட்டை மாடி போட்டோ ஷூட்டிங் மூலம் பிரபலம் அடைந்த ரம்யா பாண்டியன் அடுத்த மாதம் திருமணம் செய்ய இருப்பதாக சில வாரங்களுக்கு முன்பு செய்திகள் பரவி வந்தது. பெரிய அளவில் இவருக்கு சினிமா வாய்ப்பு கை கொடுக்காததால் இவர் திருமண வாழ்க்கையில் செட்டிலாக முடிவெடுத்து விட்டதாக கூறப்பட்டது.

லவால் தவான் என்பவரை ரம்யா பாண்டியன் திருமணம் செய்ய போவதாகவும், தவோன் யோகா பயிற்சி மாஸ்டராக இருக்கிறார். வாழ்க்கையில் நினைத்ததை சாதிக்க நினைப்பவர்களுக்கு அதற்கான வழிமுறைகளை சொல்லிக் கொடுக்கும் மோட்டிவேஷனராக இருக்கும் தவான் தான் ரம்யா பாண்டியனின் வருங்கால கணவர் என்று கூறப்பட்டது.
ஆனால் பலருக்கும் யார் அந்த தவோன் என்று பெரிய அளவில் தெரியாமல் இருந்த நிலையில் இன்று தன்னுடைய வருங்கால கணவரோடு ரீல்ஸ் வீடியோ ஒன்றை எடுத்து சில வாரங்களுக்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அந்த வீடியோவிற்கு சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர்.

அதைத் தொடர்ந்து இன்று நவம்பர் 8ஆம் தேதி ரிஷிகேஷ் அருகே சிவபுரி கங்கை நதிக்கரையில் நடிகை ரம்யா பாண்டியன் மற்றும் அவருடைய காதலன் தவோன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த ஃபங்ஷனில் அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications