வீட்டில் விசேஷம்! ரம்யா பாண்டியன் பகிர்ந்த மகிழ்ச்சி செய்தி! கொண்டாடும் குடும்பம்.. குவியும் வாழ்த்து
சென்னை: நடிகை ரம்யா பாண்டியனுக்கு சமீபத்தில் தான் திருமணம் முடிந்தது. அதைத் தொடர்ந்து அவருடைய சகோதரரின் திருமணம் நடைபெற இருக்கிறது. திருமணத்திற்கான நலங்கு பங்க்ஷன் தொடங்கி இருக்கிறது. அப்போது எடுத்த புகைப்படத்தை ரம்யா பாண்டியன் பகிர்ந்து தன்னுடைய சகோதரருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
என்னதான் திறமையும் உழைப்பும் இருந்தாலும் ஒரு சிலருக்கு தான் அதற்கு தகுந்த வெற்றி கிடைக்கிறது. அதுபோலத்தான் நடிகை ரம்யா பாண்டியன் சினிமாவில் எப்படியாவது பெரிய ஆளாக வேண்டும் என்று அதற்காக பல முயற்சிகள் எடுத்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவிற்கு அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஆனாலும் தன்னுடைய வெற்றிக்காக தொடர்ந்து போராடிய ரம்யா பாண்டியன் சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டார்.

ரம்யா பாண்டியன் பட்டாசு என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் நடிகையாக சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து ஜோக்கர், ஆண் தேவதை போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால் அந்த படங்கள் பெரிய அளவில் ரம்யா பாண்டியனுக்கு பிரபலம் கொடுக்காமல் இருந்த நேரத்தில் தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பலர் வீட்டில் முடங்கி இருந்தனர்.
அந்த நேரத்தில் மொட்டை மாடியில் போட்டோ ஷூட் நடக்க தொடங்கிய ரம்யா பாண்டியனுக்கு சமூக வலைத்தளம் செம வரவேற்பு கொடுத்தது. எந்த பக்கம் திரும்பினாலும் ரம்யா பாண்டியன் புகைப்படங்கள் தான் கண்ணில் பட்டது. அந்த அளவிற்கு இணையத்தை ரம்யா பாண்டியன் மொத்தமாக ஆக்கிரமித்து இருந்தார்.

அதற்கு பிறகு ரம்யா பாண்டியனுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி, குக் வித் கோமாளி நிகழ்ச்சி வாய்ப்பு கிடைத்தது. அதுபோல விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று இருந்தார். இந்த நிலையில் தான் கடந்த வருடம் ஸ்ரீ ரவிச்சந்தர் ஆசிரமத்தில் யோகா பயிற்சி பெற்றார். அங்கு பயிற்சியாளராக பணியாற்றி வந்த நோவல் தவானுக்கும் ரம்யா பாண்டியனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது.

பிறகு இருவருடைய வீட்டிலும் சம்மதத்தை பெற்று தங்களுடைய காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அதை தொடர்ந்து இருவருக்கும் ரிஷிகேஷில் கங்கை நதிக்கரையில் உள்ள கோவிலில் வைத்து எளிமையாக திருமணம் நடைபெற்றது. பிறகு சென்னையில் வைத்து கடந்த நவம்பர் 15ஆம் தேதி வரவேற்பு நடைபெற்றது.

இந்த நிலையில் ரம்யா பாண்டியனின் சகோதரரான பரசு பண்டியனுக்கு திருமணம் நிச்சயம் ஆகி இருக்கிறது. திருமணத்திற்கு முந்தைய நலங்கு பங்க்ஷன் நேற்று நடைபெற்றிருக்கிறது. அப்போது எடுத்த புகைப்படத்தை ரம்யா பாண்டியன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். ரம்யா பாண்டியனின் திருமணத்தை தொடர்ந்து அவருடைய சகோதரரின் திருமணமும் நடைபெற இருக்கும் நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.

-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications