எனக்கே அந்த சீரியலில் இப்படி நடந்தது.. கீழே போட்டு மிதிக்க பாக்குறாங்க.. சீரியல் நடிகை ராணி வேதனை
சென்னை: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என பல சேனல்களில் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ராணி தனக்கு சீரியலில் நடந்த அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். பல வருடங்களாக சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் தனக்கே சில பிரச்சனைகள் நடந்திருக்கும் நிலையில் புதியதாக வரும் நடிகைகளின் நிலைமை எப்படி இருக்கும்? என்று அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
ஒரு சில நடிகைகள் தான் தாங்கள் நடிக்கும் எல்லா சீரியல்களிலும் ஒரே போல கேரக்டரில் நடித்து வருவார்கள். அந்த வகையில் ஒருவர்தான் ராணி. இவர் அதிகமாக சீரியல்களில் வில்லியாகத்தான் நடித்து வருகிறார். அலைகள் என்ற சீரியல் மூலம் பிரபலம் அடைந்த ராணி அதை தொடர்ந்து அத்திப்பூக்கள், முன் ஜென்மம், வள்ளி, குலதெய்வம் போன்ற பல சீரியல்களில் நடித்திருந்தார்.

அதிலும் எல்லா சீரியல்களிலும் இவர் வில்லி தான் அதிகமான மேக்கப் போட்டு கெத்தாக இவர் வருவதை பார்த்தாலே நிஜத்தில் இவரிடம் பேசுபவர்கள் ரொம்பவே பயப்படுவார்கள். ஆனால் இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் தான் பாசிட்டிவ்வான கேரக்டரில் நடித்திருந்தார். அந்த சீரியலில் ரோஜாவுக்கு எப்போதெல்லாம் பிரச்சனை வருகிறதோ அப்போது போலீசாக இவர்தான் உதவி செய்வார்.
அதனால் அதுவரைக்கும் அவரை திட்டிதீர்த்த ரசிகர்கள் கூட அந்த சீரியலில் அவரை பாராட்டி வந்தனர். சமீபத்தில் கூட இவர் நடிகை ராதிகா நடிக்கும் தாயம்மாள் என்ற சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் தன்னுடைய சீரியல் வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார். அதில் நான் சின்ன வயசுல இருந்தே சீரியலில் நடிச்சிட்டு இருக்கிறேன்.
கிட்டத்தட்ட 22 வருஷம் ஆகிடுச்சு ஆனாலும் கேப் நான் விட்டதே கிடையாது. நெகடிவ் கேரக்டரில் நான் நடிச்சாலும் எனக்கு அதன் மூலம் பாசிட்டிவ் ரிவ்யூ, பணம், புகழ் எல்லாமே கிடைத்து விட்டது. அதனால் அந்த கேரக்டரை நான் ரொம்ப ரசிச்சு தான் நடித்துக் கொண்டிருக்கிறேன். நான் நடிக்கும் சீரியல்கள் கிட்டத்தட்ட நான்கு, ஐந்து வருடங்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது.

பல சீரியல்களில் நடித்திருந்தாலும் ஒரு சீரியலில் இருந்து தான் பாதியில் விலகி இருக்கிறேன். அதற்கு காரணம் ஒரு சீரியல் லேட் நைட் ஒர்க் பண்ண சொன்னாங்க... அது கூட நானும் சரி என்று சொல்லிவிட்டேன். ஆனால் அவர்கள் சொன்ன விதம் ரொம்ப தவறா இருந்துச்சு. நான் ரெகுலரா வேலை பார்த்துட்டு இருக்கிறேன் இத்தனை வருஷமா பீல்டுல இருக்கிறேன் இருந்தாலும் என்னிடம் சொல்வதற்கு என்று ஒரு முறை இருக்கிறது.
ஒரு பொண்ணா, ஹவுஸ் வைஃபா எவ்வளவோ பிரஷர் ஓட தான் நாங்க வேலைக்கு வருகிறோம். ஆண்கள் கொஞ்சமாச்சும் அதை புரிஞ்சுகிட்டு பெண்களுக்கு மரியாதை கொடுக்கணும். ஆனால் அவங்க ரெஸ்பெக்ட் கொடுக்க மாட்டேங்கிறாங்க. ஈகோ பாக்குறாங்க.. எப்படியாச்சும் கீழ போட்டு மிதிக்கணும்னு நினைக்கிறாங்க. எல்லாருக்கும் சுயமரியாதை இருக்கு.
அவங்க என்னை இன்சல்ட் பண்ணி பேசுனது எனக்கு பிடிக்கல. அதனால்தான் சீரியலில் இருந்து விலகினேன். நான் இத்தனை வருஷமா தொடர்ந்து சீரியலில் நடிச்சிட்டு இருக்கேன் என்னிடமே இப்படி பேசுறாங்கன்னா புதுசா வர்றவங்களுக்கு என்ன நடக்கும்? நான் இத்தனை வருட அனுபவத்தில் இதுபோல அனுபவித்தது கிடையாது. ஆனால் சமீபத்தில் தான் என்னுடைய சினிமா வாழ்க்கையில் கசப்பான சம்பவம் நடந்துச்சு. அது என்னை காயப்படுத்திடுச்சு என்று அந்த பேட்டியில் நடிகை ராணி எமோஷனலாக பேசியிருக்கிறார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications