கிலோ கணக்கில் உடம்பில் தங்கம்.. அப்பவே இந்த பிரபல நடிகை அப்படி.. அந்த கேரவன் மேட்டர் என்ன தெரியுமா?
சென்னை: "என்னுடைய அப்பா யார் தெரியுமா? போலீஸ் டிஜிபி.. அவர்கிட்ட பேசறீங்களா? போன் பண்ணி தரட்டுமா?" என்று மிரட்டி மிரட்டியே பல்வேறு இடங்களில் தப்பிச் சென்றுள்ளார் நடிகை ரன்யா ராவ்.. இதுபோலவே சினிமா பிரமுகர்களையும் மிரட்டியிருக்கிறாராம்.. இவர் நடித்தது ஒரேயொரு படம் என்றாலும், அதன்மூலம் இவர் படக்குழுவினருக்கு தந்த டார்ச்சர் அதிகம் என்கிறார்கள்.. இதை பற்றி மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு விரிவாக கூறியிருக்கிறார.
கர்நாடகா மாநிலம் சிக்மக்ளூரைச் சேர்ந்தவர் நடிகை ரன்யா ராவ்.. இவர் தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியிருக்கிறார். இவருடைய வளர்ப்புத் தந்தை ஏடிஜிபி ராமச்சந்திர ராவின் பெயரை பயன்படுத்தியே பலமுறை தப்பித்து வந்தவர், இந்த முறை பெங்களூர் ஏர்போர்ட்டில் மாட்டிக் கொண்டார்.

நடிகையின் தங்க பிசினஸ்
துபாய்க்கும் பெங்களூருவிக்கும் இந்த ஒரு வருடத்தில் மட்டும் 30 முறைக்கு மேல் சென்று வந்துள்ளார்.. இதுதான் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது. நேற்றுமுன்தினம் 14.8 கிலோ தங்கக் கட்டிகளை தன்னுடைய தொடை உள்ளிட்ட இடங்களில் மறைத்து வைத்து கடத்தி வந்துள்ளார்.
ஆரம்பத்தில் ரன்யா ராவ் தனது ஜாக்கெட்டில் தங்கக் கட்டிகளைக் கடத்தியதாக கூறப்பட்டாலும், சோதனையின் போது உடம்பெல்லாம் தங்கம் ஒட்டப்பட்டு, மறைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டதாக டிஆர்ஐ உறுதிப்படுத்தியிருக்கிறது.
பெங்களூரில் லாவெல்லி சாலையில் உள்ள இவரது அப்பார்ட்மென்ட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, 2.06 கோடி ரூபாய் தங்க நகைகள், ரூ.2.67 கோடி ரொக்கம் சிக்கியிருக்கின்றன. தங்கத்தை கடத்தி வந்து, அதில் கமிஷனை பெற்று வந்துள்ளார் நடிகை.. ஒரு கிலோ தங்கம் கடத்தினால் கமிஷனாக 5 லட்சம் ரூபாய் வரை கிடைக்குமாம். இதற்காக துபாயில் ஸ்டார் ஓட்டலில் தங்கும் வசதி உட்பட, அந்த கடத்தல் கும்பலே செய்து தந்துவிடுமாம்.
ஆடம்பர உடைகள் - விஐபி நடை
காஸ்ட்லியாக டிரஸ் அணிந்து, ஆடைகளுக்கு உள்ளே தங்க கட்டிகளை டேப் போட்டு ஒட்டிவிட்டு, அதற்கு மேல் தடிமனான உடைகளை அணிந்து கொண்டு கேஷுவலாக, ஏர்போர்ட்டில் அதிகாரிகளை கடந்து செல்வாராம் இந்த நடிகை. நடிகை என்பதாலும், விஐபி தோற்றம் என்பதாலும், அதிகாரிகளும் இவரை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்..
அப்படியே யாராவது சந்தேகம் ஏற்பட்டு விசாரணைக்கு அழைத்து சென்றால், "என் அப்பா யார் தெரியுமா? ஒரு ஐபிஎஸ் அதிகாரி, அவர்கிட்ட பேசறீங்களா" என்று சொல்லியே சுங்க அதிகாரிகளுக்கு ஷாக் தருவாராம். சமீபத்தில் திருமணமாகி கணவனையும் பிரிந்துவிட்டார் இந்த நடிகை.. வளர்ப்பு தந்தையுடனும் தகராறு செய்து கொண்டு, அவரிடமும் பேச்சுவார்த்தை இல்லையாம்.. ஆனாலும், அதிகாரிகளை மிரட்ட அப்பாவின் பெயரை பயன்படுத்தி வந்துள்ளார்.
பனிப்பிரதேசம் தனி வீடு
இந்நிலையில், நடிகை பற்றி மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, Cheyyaru Balu சேனலில் பேசியிருக்கிறார்.. அதில், "நடிகை ரன்யா ராவ் நடித்தது மொத்தமே 3 படங்கள்தான்.. கன்னடத்தில் 2 படம், தமிழில் வாகா என்ற படம் நடித்துள்ளார்..
இந்த படத்தின் ஷூட்டிங் காஷ்மீர் பார்டரில் எடுக்கப்பட்டது,. பனிப்பிரதேசம் நிறைந்த பகுதி என்றாலும், நடிகைக்காகவே தனி வீடு ஏற்பாடு செய்து, அதில், நெருப்பு மூட்டும் வசதி, ஹீட்டர் வசதி என அனைத்தும் செய்துதரப்பட்டது. ஆனாலும் தனக்கு தனி கேரவன் ஹீட்டருடன் வேண்டும் என்று கேட்டு அடம்பிடித்துள்ளார்..
ஷூட்டிங்கில் அடம் - பிடிவாதம்
மலைப்பிரதேசத்தில் கேரவன் கிடைக்காது என்று சொல்லியும் கேட்கவில்லை.. கேரவன் இல்லாவிட்டால் ஷூட்டிங் வரமாட்டேன் என்ற சொல்லி, 4 நாள் படப்பிடிப்புக்கு வராமல் இருந்துள்ளார் ரன்யா ராவ்..
காஷ்மீர் பார்டரில் ஷூட்டிங் எடுக்க, குறிப்பிட்ட நாட்களே பர்மிஷன் பெற்றிருந்த நிலையில், நடிகை ரன்யா ராவ் செய்த 4 நாள் பிடிவாதம் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை தந்தது. பிறகு வேறுவழியில்லாமல், சென்னையிலிருந்து கேரவன் கொண்டுவரப்பட்டது. ஆனால், இங்குள்ள கேரவன்கள் அனைத்துமே ஏசி வசதிகள் செய்யப்பட்டிருக்கும். அதனால் நடிகைக்காக கொண்டு வரப்பட்ட கேரவனிலும் ஏசி உட்பட அனைத்தும் மாற்றப்பட்டு, ஹீட்டர் வசதிகள் புதிதாக பொருத்தப்பட்டுள்ளன. அதற்கு பிறகே ஷூட்டிங் வந்துள்ளார் ரன்யா ராவ்.
உச்சக்கட்ட கொடுமை
இப்படி பல தொந்தரவுகளை அந்த படம் முழுக்க ரன்யா ராவ் தந்திருக்கிறார்.. தன் அப்பா டிஜிபியின் பேர் சொல்லியே டார்ச்சர் செய்துள்ளார்.. ஏன்தான் இந்த நடிகையை புக் செய்தோமோ? என்று மொத்த பேரும் நொந்து போய்விட்டார்கள்.
இதில் கொடுமை என்னவென்றால், அவ்வளவு அடம் பிடித்து வரவழைக்கப்பட்ட கேரவனை, மீண்டும் சென்னைக்கு கொண்டுவர முடியவில்லை. காஷ்மீர் பனியிலேயே அமுங்கியதால், வெளியே எடுக்க முடியவில்லை. கடைசியில் அந்த கேரவன் அது பனியிலேயே மூழ்கிப்போய்விட்டது" என்றார்.












Click it and Unblock the Notifications