முக்கிய பிரபலத்தோடு நெருக்கமாக இருக்கும் நடிகை ரவீனா.. அதுவும் அதை மட்டும் கவனிச்சீங்களா?
சென்னை: நடிகை ரவீனா டாடா விஜய் டிவி பிரபலமான மணி சந்திராவோடு எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
மணிச்சந்திராவின் பிறந்தநாளுக்கு அவர் வெளியிட்ட பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.
மணிசந்திராவோடு நெருக்கமாக ஜாலியாக விளையாடியபடி இருக்கும் ரவீனா அவரை காதலிக்கிறாரா? என்று கேள்விகள் எழுந்து வருகின்றது.

சின்னத்திரை வட்டாரத்தில் சில நாட்களாகவே திடீர் திடீரென பலர் காதலை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மௌனராகம் சீரியல் நடிகையாகவும், குக் வித் கோமாளியில் கோமாளியாகவும் இருக்கும் நடிகை ரவீனா டாடா வெளியிட்ட புகைப்படம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
அதற்கு காரணம் நடிகை ரவீனா உடன் ஜோடி சீசன் 9 டைட்டில் வின்னர் ஆகவும், கிங்ஸ் ஆப் டான்ஸ் சீசன் 1 செமி பைனலிஸ்ட் ஆகவும், மாநாடு மயிலாட சீசன் 10இல் பிரபலமாகவும் இருக்கும் மணிச்சந்திராவும் இவரும் சுற்றுலா போன இடத்தில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு மணிச்சந்திராவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியிருக்கிறார்.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி சீரியல்களில் செல்லமான தங்கச்சியாக கலக்கிக் கொண்டிருந்த ரவீனா டாஹாவுக்கு இன்ஸ்டாகிராமில் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது .இவருடைய போஸ்ட்களை பார்த்ததும் ரசிகர்கள் கிறங்கடித்தது கமெண்டுகளை கொட்டி தீர்க்கிறார்கள்.இவர் முதல் முதலில் விஜயுடன் ஜில்லா படத்தில் குழந்தையாக நடித்து இருக்கிறார் .

அந்த படத்தில் பள்ளி செல்லும் சிறுமியாக ஒரு சீனில் வந்தாலும் ரசிகர்களின் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்டார் .அந்த அளவிற்கு எமோஷனலான சீனில் அவர் நடித்ததால் பலரும் யார் அந்த குழந்தை என்று சொல்லும் அளவிற்கு அழகாகவும் இருந்தார். ஜில்லா படத்தில் சிலிண்டர் வெடிக்கும் போது ஒரு குழந்தை ஒரு நோட்டுடன் மாடியிலிருந்து கீழே விழும் அதை ஓடிப்போய் விஜய் பார்ப்பார்.
அந்த சீனில் நடித்தது இவர்தான் முதன்முதலில் விஜயுடன் நடிக்கும் போது அவ்வளவு சந்தோசமாக இருந்ததாம்.அவர் இவரை மடியில் தூக்கி வைத்து நான் நடித்த படங்களில் எது உனக்கு பிடிக்கும் என்று கேட்டு இருந்தாராம் .அப்போது இவரும் கடைசியாக தலைவா படத்தை பார்த்ததால் அந்தப் படத்தின் காட்சிகளை கூறி அவருடன் பேசிக் கொண்டிருந்தாராம். அது இவருக்கு மறக்க முடியாத தருணம் என்று கூறியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் புலி படத்திலும் மீண்டும் அவருடன் நடித்திருக்கிறார். அதில் சிறு வயது விஜய்யின் அக்காவாக இவர் நடித்திருக்கிறார். அதன்பிறகு ராட்சசன் படத்தில் விஷ்ணு விஷாலின் கூட இவர் நடித்திருக்கிறார் .அதிலும் பள்ளி படிக்கும் குழந்தையாக தான் நடித்திருக்கிறார். அதன்பிறகு சீரியல்களில் தங்கச்சி ரோல்களில் கலக்க ஆரம்பித்து இருக்கிறார்.

ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் பூவே பூச்சூடவா சீரியலில் சக்தியின் கடைசி தங்கச்சியாக நடித்திருப்பார் .இந்த சீரியலில் இவர் வீட்டின் செல்லப் பிள்ளையாக நடித்திருந்தாலும் பலர் ரசிகர்கள் இவரை பற்றி தான் கழுவி கழுவி ஊற்றி கொண்டிருந்தார்கள். ஏனென்றால் இவர் இந்த வீட்டின் மூத்த அக்காவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீட்டில் போட்டு கொடுத்து கொண்டு இருந்தார்.
இந்த நிலையில் ரவீனா, மணி சந்திரவோடு வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னும் ஒரு சிலர் ரசிகர்கள் அதற்கு வாய்ப்பில்லை ஏற்கனவே மணி சந்திராவிற்கு ஆள் இருக்கிறது என்றும் கூறி வருகிறார்கள். அது மட்டும் அல்லாமல் இவர்கள் நண்பர்கள் தான் எப்போதும் இப்படித்தான் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்கள் என்றும் தங்களுடைய மனதை தேற்றிக் கொள்கின்றனர்..
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications