ரேஷ்மா ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. புது அப்டேட் வந்தாச்சு! ஆரம்பமே அசத்தல்! ஆனால் இதை கவனிச்சீங்களா

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியல் மூலமாக சின்னத்திரையில் நடிகையாக மாறிய ரேஷ்மா முரளிதரன் மீண்டும் ஜீ தமிழில் நெஞ்சத்தை கிள்ளாதே என்ற சீரியல் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். சமீபத்தில் இவர் விஜய் டிவியில் நடித்த கிழக்கு வாசல் சீரியல் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் முடிவடைந்து இருந்த நிலையில் மீண்டும் இவருக்கு ஜீ தமிழில் ஜெய் ஆகாஷோடு நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இதற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் இந்த ப்ரோமோவை பார்க்கும் போது இது பூவே பூச்சூடவா சீரியல் பாணியில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருவதை பார்க்க முடிகிறது. ஆனாலும் பழைய ரேஷ்மாவின் துருதுருப்பான நடிப்பை தற்போதைய சீரியலிலும் மீண்டும் ரசிகர்கள் பார்க்க முடிகிறது.

Actress Reshma Muralitharan and Actor Jai Akash act new Serial

ப்ரோமோ வீடியோவில் டிராபிக் சிக்னலில் 2 வீலரில் காத்திருக்கும் ரேஷ்மா பக்கத்தில் நிற்கும் கார் கண்ணாடியை பார்த்து நெற்றியில் பொட்டு வைக்க ஜன்னலை ஓபன் செய்த ஜெய் ஆகாஷ் கொஞ்சம் கூட காமன் சென்ஸ் இல்லையா? இது என்ன உங்க வீட்டு ட்ரெஸ்ஸிங் டேபிள்னு நினைசீங்களா என்று கோபப்படுகிறார்.

உடனே ரேஷ்மா ஹலோ நான் நெத்தியில் தானே பொட்டு வச்சேன், என்னமோ உங்க நெத்தியில் வச்சா மாதிரி பேசுறீங்க என்று பதிலடி கொடுக்க ஜெய் ஆகாஷ் சரியான திமிர் பிடிச்சவளா இருப்பா போல என்று ஆவேசப்படுகிறார். திமிர் பிடிச்சவளா? திமிர் பிடிச்சவ என்ன பண்ணுவா தெரியுமா? என்று கிரீன் சிக்னல் விழுந்ததும் பைக்கை கொண்டு போய் கார் முன்னாடி நிறுத்தி வம்பிழுத்து ஜெய் ஆகாஷ் கீழே இறங்கி வந்ததும் வண்டியை எடுத்து கொண்டு எஸ்கேப் ஆகிறார்.

இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் இந்த ஜோடி சூப்பரா இருக்கும் போலயே.. எங்களுடைய சார்மிங் ஜெய் ஆகாஷ் ,ஐஸ் பேக் என்றெல்லாம் கமெண்ட் அடித்து வருகின்றனர், இந்த சீரியலுக்கு காத்துக் கொண்டிருப்பதாகவும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Actress Reshma Muralitharan and Actor Jai Akash act new Serial

ஆனாலும் ரேஷ்மா நடித்த பூவே பூச்சூடவா சீரியல் முடிவடைந்த பிறகு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான அபி டெய்லர் சீரியலில் ரேஷ்மாவின் கணவரான மதனுடன் ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் அந்த சீரியல் ஓரளவிற்கு வெற்றியடைந்திருந்தாலும் அதில் ரேஷ்மாவின் கதாபாத்திரம் சில மாதங்களுக்குப் பிறகு பெரிய அளவில் எடுபடாமல் போயிருந்தது. அதற்குப் பிறகு அந்த சீரியல் திடீரென்று முடிவுக்கு வந்திருந்தது.

அதை தொடர்ந்து தான் பெரிய அளவில் எதிர்பார்ப்போடு விஜய் டிவியில் கிழக்கு வாசல் சீரியல் ஒளிபரப்பானது. ஆனால் சீரியலில் திடீரென்று கதையை மாற்றி எதிர்பாராத விதமாக முடித்து விட்டனர். அதுபோல விஜய் டிவியில் ஒளிபரப்பான டான்ஸ் நிகழ்ச்சியில் ரேஷ்மா வெளியேற்றப்பட்டது பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது.

இந்த நிலையில் இவர் மீண்டும் ஜீ தமிழில் நடிக்க தொடங்கி இருக்கும் நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அதே நேரத்தில் நெஞ்சத்தைக் கிள்ளாதே சீரியல் பூவே பூச்சூடவா சீரியல் போலவே இருக்கப் போகிறதா? அல்லது வேறு விதமாக இருக்கப் போகிறதா? என்று அடுத்த ப்ரோமோவில் தெரியவரும். என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+