பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகிய ரித்திகா...? அவரே வெளியிட்ட பதிவு.. இப்படி ஒரு பிரச்சனையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கேரக்டரில் நடிகை ரித்திகா நடித்து வருகிறார்.

இந்த நிலையில் திடீரென்று இவர் சீரியலை விட்டு விலகி விட்டதாக தகவல்கள் பரவி வருகிறது.

அதே நேரத்தில் ரித்திகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றும் வெளியிட்டு இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

 actress Rithika left Baakiyalakshmi serial The post he published himself

பொதுவாக சீரியல்களில் இவருக்கு பதில் இவர் என்று மாறுவது ஒன்றும் புதிதல்ல. காரணம் சீரியல்கள் பொதுவாக பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் சிலரால் தவிர்க்க முடியாத காரணங்களால் அதிலிருந்து விலகி விடுகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலிலும் சமீபத்தில் நடந்திருக்கிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் நடிகர்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல பிரபலத்தை பெற்றிருக்கின்றனர். அதே நேரத்தில் இந்த சீரியலின் கதைப்படி குடும்பத்தில் இருக்கும் பெண்களால் தன்னுடைய சுய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்கு சந்திக்கும் கஷ்டங்களும் அதிலிருந்து அவர்கள் வெளியே வந்து சாதித்து பலருக்கும் முன்மாதிரியாக இருப்பது போன்று கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த சீரியலில் நடிகை ரித்திகா அமிர்தா கேரக்டரில் நடித்து வருகிறார்.

இவர் ஏற்கனவே விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். அது மட்டும் அல்லாமல் ராஜா ராணி சீரியலில் முதல் பாகத்திலும் கதாநாயகன் சஞ்சயின் தங்கையாக நடித்திருப்பார். இவருக்கு சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைப்பெற்றது. அதற்குப் பிறகும் சீரியலில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார்.

 actress Rithika left Baakiyalakshmi serial The post he published himself

இந்த நிலையில் ரித்திகா சீரியலில் இருந்து விலகப் போகிறார் என்று தகவல்கள் பரவி வருகிறது. அதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்ற கேள்விகள் எழுந்து வரும் நிலையில் ரித்திகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடுமையாக ஒர்க் அவுட் செய்வது போன்று வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் இன்றைய கஷ்டம் நாளைக்கு சந்தோஷம் என்றும் கூறியிருக்கிறார். அப்படி என்றால் இவர் உடல் எடை அதிகரித்ததால் தான் சீரியலில் இருந்து விலக சொல்லி விட்டார்களா? என்ற கேள்வி எழுந்து வருகிறது.

அதே போல இந்த சீரியலில் அமிர்தாவின் கேரக்டர் நெகட்டிவாக மாறும் என்று ஏற்கனவே கோபி கேரக்டரில் நடிக்கும் நடிகர் சதீஷ் கூறியிருந்தார். அந்த வகையில் நெகட்டிவ் கேரக்டர் நமக்கு செட்டாகாது என்று அதனால் தான் ரித்திகா விலகி விட்டாரா என்றும் கேள்விகள் குவிக்கிறது. என்ன நடந்தது என்பதை பற்றி இன்னும் ஒரு சில நாட்களில் ரித்திகாவே தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+