நிறைமாத வயிற்றை காட்டி நடிகை ரித்திகா வெளியிட்ட திடீர் பதிவு.. குழந்தை குறித்து உருக்கம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கேரக்டரில் நடித்து பிரபலமடைந்த நடிகை ரித்திகா கர்ப்பமாக இருக்கும் நிலையில் தன்னுடைய கணவரோடு சேர்ந்து ஒரு போட்டோ சூட் வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டு இருக்கிறார். இது இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதை ரித்திகா அறிவித்திருந்த நிலையில் இதுவரைக்கும் அவர் வயிறு தெரிகிற மாதிரி எந்த புகைப்படங்களும் வெளியிடாத நிலையில் இப்போது வீடியோ வெளியிட்டிருக்கும் நிலையில் பலரும் இவரை வாழ்த்தி வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் ஒன்றில் வினோதினி கேரக்டரில் தன்னுடைய நடிப்பை தொடங்கிய ரித்திகா முதல் சீரியலிலேயே ரசிகர்களின் மனதில் தன்னுடைய முகத்தை பதிய வைத்து விட்டார். அதற்குப் பிறகு விஜய் டிவியில் ஸ்டார் மியூசிக், சூப்பர் சிங்கர் 8 மற்றும் நம்மவர் கமல் போன்ற பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு இருக்கிறார்.

அதை எல்லாம் தாண்டி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்து ரித்திகா ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்தார். அதற்கு பிறகு தான் ரித்திகாவிற்கு பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதிலும் ரித்திகாவிற்கு பாக்கியலட்சுமி சீரியலில் அதிகமான ரசிகர்கள் கிடைத்திருந்தனர். இந்த நிலையில் தான் ரித்திகாவிற்கு விஜய் டிவி பிரபலமான வினு என்பவரோடு திருமணம் முடிவடைந்தது.
திருமணத்திற்கு பிறகு ரித்திகா நடிக்க மாட்டாரா? என்ற செய்திகள் பரவி வந்த நிலையில் திருமணமான சில நாட்களிலேயே ரித்திகா மீண்டும் நடிப்பை தொடங்கி இருந்தார். ஆனால் சில மாதங்களிலே சீரியலில் ஏற்பட்ட கதையின் மாற்றத்தை காரணம் காட்டியோ அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பதை சொல்லாமலேயே திடீரென்று ரித்திகா சீரியலில் இருந்து விலகிவிட்டார். தற்போது அவர் நடித்த அமிர்தா கேரக்டரில் இன்னொரு நடிகை நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சீரியலில் இருந்து விலகிய சில மாதங்களில் ரித்திகா தான் கர்ப்பமாக இருப்பதை இணையத்தில் ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார். அதற்கு பல ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறியிருந்தனர். பாக்கியலட்சுமி சீரியலில் எப்போதும் அமிர்தா கேரக்டரில் ரித்திகா அழுது கொண்டிருப்பது போலத்தான் இருக்கிறது. அதனால் இந்த சீரியலில் இருந்து இவர் விலகியது நல்லது என்றும் பலர் கருத்து கூறி வந்தனர்.

இந்த நிலையில் தற்போது நிறைமாதமாக இருக்கும் ரித்திகா தன்னுடைய கணவரோடு எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். ரித்திகா கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பிறகு எந்த புகைப்படங்களிலும் தன்னுடைய வயிறு தெரிவது போல புகைப்படத்தை வெளியிடாமல் இருந்த நிலையில் இப்போது அவருடைய கர்ப்பகால போட்டோ சூட் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்களை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications