செம்பருத்தி பட சூட்டிங்கில் நடந்த சம்பவம்! நடிகை ரம்யா கிருஷ்ணன் இப்படி பண்ணுவாங்கன்னு எதிர்பார்க்கல! ரோஜா ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ரோஜா செம்பருத்தி திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த திரைப்படமே அவருடைய வாழ்க்கையில் பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த திரைப்படத்தில் இயக்குனராக இருந்த ஆர் கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் போது நடந்த சம்பவங்கள் குறித்தும், நடிகை ரம்யா கிருஷ்ணன் செய்த செயல் குறித்தும் ஓபனாக பேசியிருக்கிறார்.

90ஸ் காலகட்டத்தில் நடிகை ரோஜா டாப் ஹீரோயினியாக வலம் வந்து கொண்டிருந்தார். முதல் படமே அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்திருந்தது. அதற்கு பிறகு முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்து விட்டார். கமல், ரஜினி, சரத்குமார், கார்த்திக், பிரபு, முரளி, அஜித் என பல நடிகர்களுடன் நடித்திருந்தாலும் இப்போது அவர் அம்மா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Roja Actress Roja Ramya Krishnan

செம்பருத்தி பட நினைவுகள்

அதேபோல சின்னத்திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது, செம்பருத்தி திரைப்படத்தில் நான் நடிக்க வந்த போது எனக்கு எதுவுமே தெரியாது. அந்த படத்தின் கதையும் தெரியாது, அந்த சமயத்தில் நீங்க ஆர் கே ஆர் செல்வமணி இயக்கத்தில் நடிக்கிறீங்களா? என்று கேட்டாங்க. அப்போ எனக்கு அவருடைய படங்கள் எப்படி இருக்கும் என்று கூட தெரியாது.

நடிகை ரோஜா பேட்டி

அது போல செம்பருத்தி படத்தின் கதையும் தெரியாது. அந்த சமயத்தில் ஆர்கே செல்வமணி இயக்கிய கேப்டன் பிரபாகரன் படத்தை போய் பார்த்துட்டு வாங்க என்று சொன்னாங்க. நானும் தியேட்டருக்கு போயிருந்தேன். அங்கு ஆர்கே செல்வமணி என்ற பெயர் ஸ்கிரீனில் வந்த போது ரசிகர்கள் எல்லோரும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போ இவர் பெரிய டைரக்டர் என்று புரிந்து கொண்டேன். அதற்கு பிறகு நானும் செம்பருத்தி படத்தில் கமிட் ஆகி விட்டேன். அந்த சமயத்தில் கூட எனக்கு அந்த படத்தின் கதை என்னவென்று தெரியாது.

ரம்யா கிருஷ்ணன் செய்த செயல்

நான் என்ன கேரக்டரில் நடிக்கிறேன் என்றும் தெரியாது. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நானும் வந்துவிட்டேன். அப்போது எனக்கு மேக்கப் போடப்பட்டிருந்தது. ஆனால் அந்த மேக்கப் எதுவுமே செல்வமணி சாருக்கு பிடிக்கவில்லை. அதே நேரத்தில் ரம்யா கிருஷ்ணனும் ஆர்கே செல்வமணியும் நல்ல பிரண்ட்ஸ். அதனால என்னை நேராக ரம்யா கிருஷ்ணன் வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க.

அங்கு இவங்கதான் இந்த படத்தோட ஹீரோயினி. இவங்களுக்கு மேக்கப் எதுவும் செட் ஆகல. நீ ஏதாவது ட்ரை பண்ணி பாரு என்று செல்வமணி சொன்னாரு. உடனே ரம்யா கிருஷ்ணன் எனக்கு சில மேக்கப் போட்டுவிட்டார். அது அழகாக வந்தது. உடனே இதையே பைனல் பண்ணிடலாம். இதையே பாலோ பண்ணுங்க என்று சில மேக்கப் பொருட்களும் கொடுத்து விட்டாங்க.

Roja Actress Roja Ramya Krishnan

நடிகைகளுக்குள் புரிதல்

அன்னையிலிருந்து இப்போ வரைக்கும் எனக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கும் நட்பு தொடர்ந்து வருகிறது. நாங்கள் எந்த சூட்டிங் போனாலும் அங்கு ஜாலியாக பேசிக்கொண்டு இருப்போம், ரகளை பண்ணுவோம். இப்போ இருக்கிற நடிகைகள் எல்லாம் இந்தளவிற்கு பிரண்ட்ஸாக இருப்பாங்களா? என்று எனக்கு தெரியாது. ஆனால் எங்கள் காலத்தில் எல்லாம் நடிகைகளுக்குள் எந்த ஈகோவும் இருந்தது கிடையாது. யார் மீதும் பொறாமை இருந்தது கிடையாது. அவ்வளவு ஒற்றுமையாக இருப்போம். ஒருவருக்கு ஒருவர் அட்வைஸ் கொடுத்து கொண்டிருப்போம் என்று ரோஜா பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+