விஜய்க்கு லக்.. சினிமா மாதிரி மக்கள் நம்பிட்டாங்க.. உடனே CM ஆனதால் கஷ்டம் தெரியல! நடிகை ரோஜா பேட்டி
சென்னை: சினிமாவில் ஹீரோவாக இருந்து அரசியலுக்கு வந்த விஜய் இப்போது தமிழக முதல்வராகி விட்டார். அவருடைய அரசியல் பயணம் குறித்து ஆதரவாகவும், விமர்சனமாகவும் பலரும் பல்வேறு கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் நடிகையும் அரசியல்வாதியுமான ரோஜா பேசியுள்ள வீடியோ சோசியல் மீடியாவில் கவனம் பெற்று வருகிறது.
ரோஜாவுக்கு சினிமாவும் தெரியும், அரசியலும் தெரியும் என்பதால் அவர் விஜயின் அரசியல் பயணத்தை பற்றி பேசி இருப்பது ரசிகர்கள் மத்தியில் மீண்டும் விவாதம் ஆகியிருக்கிறது. குறிப்பாக சினிமாவில் ஹீரோவாக காட்டப்படும் ஒரு விஷயத்தையும், அரசியலையும் ஒன்றாக பார்க்க கூடாது என்ற கோணத்தில் அவர் பேசியிருக்கிறார்.
ரோஜா பேட்டி
அதாவது ரோஜா பேசுகையில், விஜய் லக்கில் சிஎம் ஆனதால் கஷ்டம் என்னன்னு அவருக்கு தெரியல. இப்போ தோத்திருந்தா இந்த 5 வருஷம் கட்சியை எப்படி நடத்துறதுன்னு ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பார். சினிமா மாதிரி வில்லன் கூட சண்டை போட்டு ஏழைகளுக்கு ஆதரவாக இருப்பார் என்ற கற்பனையில் தான் பலர் வாக்களித்திட்டாங்க. உண்மையாக விஜய் எப்படி ஆட்சி பண்ணுவார் என்று யாருக்கும் தெரியாது. இந்த அஞ்சு வருஷத்துக்கு பின் அரசியலுக்கும், சினிமாக்கும் உள்ள வித்தியாசத்தை விஜய் கற்றுப்பாரு என்று ரோஜா அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

விஜயின் அரசியல் சினிமா படம்
விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பே அவரது திரைப்படங்களில் அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகள் தொடர்பான வசனங்கள் தொடர்ந்து இடம் பெற்று வந்தன. கத்தி, மெர்சல், சர்க்கார், மாஸ்டர் போன்ற படங்களில் விவசாயிகள், மருத்துவம், ஊழல், அரசியல், போதை பொருள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டிருக்கின்றன. விஜயின் அரசியல் பயணத்தை பற்றி பின்னோக்கி பார்க்கும்போது அவரது திரைப்படங்களில் இந்த அரசியல் கருத்துக்களும் அடிக்கடி பேசப்பட்டு இருக்கின்றன.
ரோஜா சொன்ன விஷயம்
அப்படிப்பட்ட விஜய் இப்போது நிஜ அரசியலில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறார். இதைத்தான் ரோஜா தனது பேட்டியில் சுட்டிக்காட்டி இருக்கிறார். இந்த பேட்டியில் ரோஜா சொல்ல வருவது என்னவென்றால், சினிமாவில் ஒரு ஹீரோவின் கதாபாத்திரத்துக்கும் நிஜ வாழ்க்கையில் ஒரு முதலமைச்சரின் பொறுப்புக்கு மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது என்பதுதான். படத்தில் ஒரு பிரச்சனையை வந்தால் வில்லனை எதிர்த்து சண்டை போட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நின்று சில காட்சிகளிலேயே பிரச்சனை முடிந்துவிடலாம்.
ரசிகர்கள் கருத்து
ஆனால் அரசியலில் ஒரு பிரச்சனைக்கு பின்னால் நிர்வாகம், சட்டம், பொருளாதார அதிகாரிகள், மக்கள் எதிர்ப்பு என்று பல விஷயம் இருக்கும். அதனால் தான் சினிமாவில் பார்த்த விஜய்யை வைத்து மட்டும் நிஜ அரசியலில் விஜய் எப்படி செயல்படுவார் என்பதை முடிவு செய்து விட முடியாது என்ற கோணத்தில் ரோஜா பேசி இருக்கலாம். ஆனாலும் ரோஜா அந்த பேட்டியில் கேஷுவலாக பேசிய விஷயம் இப்போது பலருடைய கவனத்தை ஈர்த்து இருக்கிறது. ஒரு சிலர் ரோஜா பேசியதை பாராட்டுகின்றனர். ஆனால் விஜய் ரசிகர்கள் ரோஜாவையும் விமர்சிக்க தொடங்கி விட்டார்கள்.


Click it and Unblock the Notifications
