Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கால் முட்டி எல்லாம் புண்ணாகிட்டு.. அனிருத்தின் அப்பா கூட இப்படித்தான்.. நடிகை சாதனா சொன்ன ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் 170 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த நடிகை சாதனா இப்போது சின்னத்திரையிலும் கலக்கி கொண்டு வருகிறார். கிட்டத்தட்ட 21 வருடங்களாக சின்னத்திரையில் நடித்து வரும் சாதனா தான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.

அதில் இப்போது இசையமைப்பாளராக இருக்கும் அனிருத்தின் அப்பாவோடு தான் திரைப்படத்தில் நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவம் மற்றும் அந்த திரைப்பட சூட்டிங் ஸ்பாட்டில் தனக்கு கிடைத்த வெகுமதி குறித்தும் வெளிப்படையாக சாதனா பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Sadhana opened up about her experiences while acting in cinema

அந்த வகையில் சின்னத்திரையில் வில்லியாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வரும் நடிகை சாதனா முதல் முதலில் நிங்களில் ஒரு ஸ்ரிதி என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாகத்தான் சினிமாவில் அறிமுகம் ஆகி இருக்கிறார். அதற்குப் பிறகு பார்க்கண் முந்திரி தோப்புக்குள் என்ற திரைப்படத்தில் மோகன்லால் ஜோடியாக நடித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து தீர்த்தம், சீசன், ஜிவிதம், ஒரு ராகம் என பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதுவும் கிட்டத்தட்ட நூறு திரைப்படங்களுக்கு மேலாக மலையாளத்தில் சாதனா நடித்துக் கொண்டிருந்தாராம்.

அந்த நேரத்தில் சாதனாவிற்கு1982 ஆம் ஆண்டு ஹிட்லர் உமாநாத் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் சிவாஜி கணேசனின் மகளாக சாதனா நடித்திருக்கிறார். அதை தொடர்ந்து நெஞ்சத்தை அள்ளித்தா திரைப்படத்தில் கதாநாயகி ஆகவும் நடித்து இருக்கிறார். பிறகு உன்னை தேடி வருவேன், நானும் ஒரு தொழிலாளி, ராஜமரியாதை, என்னை பெத்த ராசா, மைடியர் லிசா, மனைவி ஒரு மாணிக்கம்,வீரமணி, சினேகிதியே, லவ் சேனல், புதிய கீதை ஒரு பொண்ணு ஒரு பையன், தொட்டி ஜெயா என்று 50க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களிலும் சாதனா நடித்திருக்கிறாராம்.

நான்கு மொழிகளிலும் 170 க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவர் இப்போது 21 வருடங்களுக்கு மேலாக சின்னத்திரையில் தான் நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் கோபுரம், பணம், நம்பிக்கை, பெண், சொர்க்கம், வேப்பிலைக்காரி, தென்றல் என்ற சீரியல்களில் தொடங்கி இப்போது ஜீ தமிழில் மாரி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதுபோல சில வருடங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் பிரியா பவானி சங்கரின் அம்மாவாகவும் நடித்திருந்தார். அதுபோல சின்னத்தம்பி சீரியலில் நந்தினியின் அம்மாவாகவும் நடித்திருந்தார். இப்படியான நிலையில் தான் இப்போது அவர் தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கையில் நான் அனிருத்தின் அப்பாவோடு நடித்திருக்கிறேன்.

அப்போதெல்லாம் அவருடைய பையன் இவ்வளவு பெரிய இசையமைப்பாளராக வருவார் என்று நான் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை. சூட்டிங் ஸ்பாட்டில் அனிருத்தின் அப்பா ரொம்பவும் அமைதியாக இருப்பாரு. நான் ஒரு பக்கமா என்னுடைய வேலையை பார்த்துக் கொண்டிருந்தால் அவர் ஒரு பக்கமாக அவருடைய வேலையை பார்த்துக் கொண்டிருப்பார். ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் பண்ணாத நபர் அனிருத்தின் அப்பா.

அதுபோல சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த இன்னொரு செயலும் என்னால் மறக்கவே முடியாது. அது என்னவென்றால் ஒரு முறை நான் விசு சார் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அந்த திரைப்படத்தில் ஒரு பாடல் இடம் பெற்றிருந்தது. அந்த பாடலை நான் ஒரே டேக்கில் டான்ஸ் ஆடி முடிக்க வேண்டும் என்று விசு சாரும் புலியூர் சரோஜா அக்காவும் சேர்ந்து ஒரு நாடகம் போட்டு இருக்காங்க. அதுபடி விசு சார் இந்த பொண்ணு மட்டும் இந்த பாட்ட ஒரே டேக்கில் நடித்து முடித்துவிட்டா நான் அவளுக்கு ஒரு கிப்ட் கொடுப்பேன்.

ஆனால் சாதனாவால் ஆட முடியுமா என்று தெரியலையே என்று சொல்ல, அதற்கு புலியூர் சரோஜா கண்டிப்பாக இவளால முடியும் என்று அவரிடமும் நீ ஆடி காட்டிரு என்று என்னிடமும் சொன்னார். நான் இப்படி உசுப்பேத்தினால் செய்யாமல் இருக்க முடியுமா? உடனே எப்படியாவது இதை முடித்தாக வேண்டும் என்று நினைத்து அந்த பாட்டு முழுக்க தண்ணீரை மேலே ஊத்திக் கொண்டு ஆட வேண்டும் நானும் ஆடி முடித்து விட்டேன். ஆனால் ஆடி முடித்த பிறகு என் முட்டி எல்லாம் புண்ணாகிடுச்சு

Actress Sadhana opened up about her experiences while acting in cinema

முட்டி எல்லாம் பிஞ்சு போச்சு டான்ஸ் ஆடும் போது எனக்கு அந்த வலி தெரியல. காலில் தண்ணீர் ஊற்றிக் கொண்டே இருந்தாங்க. பிறகு தான் கால் நடக்க முடியாத அளவிற்கு வலியாக இருந்தது. ஆனால் நான் விசு சார் சொன்ன மாதிரியே டான்ஸ் ஆடிட்டேனு எனக்கு 100 ரூபாய் பரிசு கொடுத்தார். அது என்னால் மறக்கவே முடியாது என்று அந்த பேட்டியில் நடிகை சாதனா நெகழ்ச்சியோடு பேசி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+