பாண்டியன் ஸ்டோரில் இனி நடக்கப்போவது இதுதான்! அதனால் தான் விலகி விட்டேன்.. சாய் காயத்ரியின் பதில்

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து சாய் காயத்ரி விலகியதற்காக விளக்கம் கொடுத்திருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து வந்த சாய் காயத்ரி தான் விலகி விட்டேன் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

சீரியலில் இனி வரும் கதைக்களம் பற்றி சாய் காயத்ரி சில க்ளூ கொடுத்திருக்கிறார்.

தன்னுடைய வாழ்க்கைக்கு இந்த கதை சரியில்லை என்று விலகிய சாய் காயத்திரிக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

அடுத்தடுத்து மாற்றம்

அடுத்தடுத்து மாற்றம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் மூன்று வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் இவருக்கு பதில் இவர் என்று அடிக்கடி பலரும் மாறி விட்டனர். அந்த வகையில் மீனா கேரக்டரில் இரண்டு கதாநாயகிகளும், முல்லை கேரக்டரில் மூன்று கதாநாயகிகளும், ஐஸ்வர்யா கேரக்டரில் மூன்று கதாநாயகிகளும் மாறி இருந்தனர். தற்போது ஐஸ்வர்யா கேரக்டரில் கடைசியாக நடித்து வந்த சாய் காயத்ரியும் திடீரென இந்த சீரியலில் இருந்து விலகி விட்டார் என்ற தகவல்கள் வெளியாகி வந்தது. தற்போது அதற்கு சாய் காயத்திரி முதல் முறையாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.

சாய் காயத்ரியின் விளக்கம்

சாய் காயத்ரியின் விளக்கம்

அதாவது பாண்டியன் ஸ்டோர் சீரியலை விட்டு விலகுவது உண்மைதான். இந்த சீரியலில் இனியும் நடிப்பது எனக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று நினைக்கவில்லை. இனிவரும் கதை என்னுடைய கேரியரை மாற்றிவிடலாம். இதனை அடிப்படையாகக் கொண்டு சீரியலில் இருந்து விலகுகிறேன். என்னுடைய கருத்துக்கு மதிப்பு கொடுத்த டீம் மற்றும் விஜய் டிவிக்கு ரொம்ப நன்றி, அதுபோல மக்களுக்கும் ரொம்ப நன்றி.. என்று அவர் போஸ்ட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இனி யார் ஐஸ்வர்யா

இனி யார் ஐஸ்வர்யா

இந்த நிலையில் ஐஸ்வர்யா கேரக்டரில் ஏற்கனவே நடித்த விஜே தீபிகா மீண்டும் நடிக்க வாய்ப்பு இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் அதை குறித்து தீபிகா இன்னும் உறுதியான தகவல்கள் எதுவும் கூறவில்லை. ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர் சீரியல் சமீப காலமாக நெகட்டிவ் கருத்துகளை பெற்று வருகிறது. தொடர்ச்சியாக மூன்று மருமகள்கள் கர்ப்பமாக இருப்பதாக இந்த சீரியலில் காட்டப்பட்டு வருகிறது. அதுவும் இந்த சீரியலில் லாஜிக்கே இல்லாமல் கதை நகர்வதாகவும் ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

இனி இதுதான் கதையா

இனி இதுதான் கதையா

மொத்த குடும்பமும் ஒரே அறையில் படுத்து கொண்டிருக்கும்போது அடுத்தடுத்து இவர்களால் மட்டும் எப்படி கர்ப்பமாக முடிந்தது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதைத்தொடர்ந்து தற்போது ஜீவா இனி இந்த வீட்டை விட்டு வெளியேறுவது போன்ற சீன்கள் வர இருப்பது போன்று கதை நகர்ந்து கொண்டிருப்பதை பார்க்கும் போதே தெரிகிறது. கண்ணன் மற்றும் கதிர் இருவரும் தனக்கு தேவையான பணத்தை வைத்திருக்கின்றனர். ஆனால் ஜீவா மட்டும் எதற்கெடுத்தாலும் அண்ணன் மற்றும் அண்ணியை சார்ந்து இருப்பதால் ஜீவா மற்றும் மீனாவிற்கு இடையே மனதிற்குள் வருத்தம் ஏற்பட தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் இனி வரும் கதை எனக்கு பிடிக்கவில்லை என்று சாய் காயத்ரியும் கூறி இருப்பதால் அப்போ இனி ஐஸ்வர்யா வில்லியாக மாறப்போகிறாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+