இந்த குழந்தை யார் தெரியுதா? சூர்யா விஷாலுக்கு ஜோடியாக நடித்தவர்.. விமர்சனங்களை தாண்டி சாதித்த நடிகை உருக்கம்
சென்னை: நடிகை சமீரா ரெட்டி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த குழந்தைப் பருவ புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலரும் "இது உண்மையாவே சமீராவா?" என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர்.

தன்னம்பிக்கை முன்னேற்றம்
அந்த பதிவில் சமீரா ரெட்டி ஒரு முக்கியமான விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். சிறு வயதில் தன்னம்பிக்கை மிகவும் குறைவாக இருந்தது, தனது தோற்றத்தைப் பற்றி தயக்கம் இருந்தது என்று அவர் சொன்னது தான் தற்போது அதிகமாக பேசப்படுகிறது. இன்று நாம் பார்க்கும் அந்த கான்ஃபிடன்ஸ், அந்த ஸ்டைல் எல்லாம் ஒரே நாளில் வந்தது இல்லை... பல வருடங்களாக தன்னை தானே ஏற்றுக்கொண்டதின் விளைவு தான் என்பதைக் காட்டும் மாதிரி அந்த பதிவு இருந்தது.
நடிகை சமீரா ரெட்டி
தமிழ் ரசிகர்களுக்கு சமீரா ரெட்டி மிகவும் பரிச்சயமானவர். நடிகர் விஷாலுடன் நடித்த வெடி படங்களாலும், குறிப்பாக சூர்யாவுடன் நடித்த "வாரணம் ஆயிரம்" படத்தின் மூலமாகவும் அவர் நல்ல வரவேற்பு பெற்றார். அந்த காலத்தில் அவர் நடித்த கதாபாத்திரங்கள் ஸ்டைலாகவும், கவனிக்கத்தக்கவையாகவும் இருந்தது.

குடும்ப வாழ்க்கை
மும்பையை சேர்ந்த சமீரா, முதலில் மாடலிங் மூலம் தனது பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு ஹிந்தி சினிமாவில் வாய்ப்பு பெற்று, பின்னர் தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்தார். ஒரு கட்டத்தில் மிகவும் பிஸியாக இருந்த இவர், திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து கொஞ்சம் விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தொழிலதிபர் அக்ஷய் வர்தேவை திருமணம் செய்து கொண்டு, தற்போது இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.
சினிமாவிற்கு கம்பேக்
இப்போது அவர் முழுமையாக சினிமாவை விட்டு விலகவில்லை. சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து, விளம்பரங்கள், பிராண்டு ஒப்பந்தங்கள், வெப் கான்டென்ட் போன்றவற்றில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். நல்ல கதையுடன் வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் நடிக்க தயாராக இருப்பதாகவும் சில பேட்டிகளில் கூறியுள்ளார்.

சொத்து மதிப்பு
சொத்து மதிப்பு பற்றி பார்த்தால், சமீரா ரெட்டியின் சொத்து மதிப்பு சுமார் 80 முதல் 85 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. சினிமா, விளம்பரங்கள், சமூக வலைதளங்கள் போன்றவற்றின் மூலம் அவர் வருமானம் பெற்று வருகிறார்.
ஆனால் இப்போது ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது இந்த பணம் அல்லது க்ளாமர் அல்ல... அந்த ஒரு குழந்தைப் பருவ போட்டோ தான். அந்த போட்டோவில் இருக்கும் சின்ன பெண்ணும், இப்போது இருக்கும் சமீராவும் ரொம்பவே வித்தியாசமாக இருப்பதால், பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
இந்த ஒரு போட்டோவின் மூலம் ஒரு விஷயம் தெளிவாகிறது... தன்னம்பிக்கை இல்லாமல் இருந்த ஒரு பெண், இன்று தன்னையே ஏற்றுக்கொண்டு பலருக்கும் உதாரணமாக மாறியிருக்கிறார். அதனால்தான் இந்த பதிவு சாதாரண பழைய நினைவாக இல்லாமல், பலருக்கும் உணர்வுகளை தூண்டும் ஒரு ரியல் ஸ்டோராக வைரலாகி வருகிறது.
அதிலும் ஒரு சில புகைப்படங்களை பார்க்கும்போது சமீராவின் மகனைப் போலவே சமீரா இருப்பதாகவும் பலர் சொல்லி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சமீராவின் இந்த பதிவிற்கு அதிகமான பாசிட்டிவ் கமெண்ட்ஸ்கள் மட்டும்தான் வந்து கொண்டு இருக்கிறது. "நீங்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை... உங்களை நீங்கள் ஏற்றுக்கொண்டால் அதுவே பெரிய விஷயம்." என சமீரா ரெட்டி தனது வாழ்க்கை மூலம் நிரூபித்து காட்டியிருக்கிறார்.
-
TN 2026 படத்தில் விஜய் ரோலா? தன்னுடைய கெட்டப் பற்றி நட்டி ஓபனா பேசிட்டாரே? பின்னணி சம்பவம் பெருசா இருக்கு -
Kalidas 2 Review: காளிதாஸ் 2 படம் எப்படி இருக்கு? பரத் கொடுத்தாரா? சொதப்பிவிட்டாரா? ரிவ்யூ இதோ -
காதலர் தினம் பட ஹீரோயினி சோனாலிக்கு வந்த சிக்கல்.. போலீஸ் ஸ்டேஷனுக்கு போன புகார்.. நடிகை கொடுத்த விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications