மாரி செல்வராஜ் நடிகைகள் பற்றி அப்படி சொன்னதை ஏத்துக்க முடியல! அவரே இப்படி பேசலாமா? சம்யுக்தா ஆதங்கம்
சென்னை: தமிழ் திரையுலகில் அழுத்தமான சமூக கதைகளை எடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் இயக்குநர் மாரி செல்வராஜ், தான் இயக்கும் படங்களில் மலையாள நடிகைகளை அதிகமாக நடிக்க வைப்பதாகத் தமிழ் நடிகைகள் மத்தியில் ஒரு அதிருப்தி நிலவி வருகிறது. இது குறித்துப் பேசியுள்ள நடிகை சம்யுக்தா, மாரி செல்வராஜ் மீது ஒரு சிலக் கேள்விகளையும், தனது வருத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

சம்யுக்தாவின் கேள்விகள்
மாரி செல்வராஜின் படத்தில் மலையாள நடிகைகள் ஆதிக்கம் செலுத்துவது குறித்துக் கேள்வியெழுப்பிய நடிகை சம்யுக்தா, தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் பேசும்போது, மாரி செல்வராஜ் சார் கிட்ட உங்க சமூகத்து பெண்களை ஏன் நடிக்க வைக்கவில்லை? வெள்ளையா இருக்கும் நடிகைக்கு ஏன் கருப்பு மேக்கப் போட்டு நடிக்க வைக்கிறீங்கன்னு ஒரு சூப்பரா கேள்வி கேட்டா, அதற்கு அவர் ஊனமுற்றோர் கேரக்டரில் ஊனமுற்றோரை தான் நடிக்க வைக்கவேண்டுமானு ஒரு மோசமான பதிலை சொல்லுறாரு. அவர்கிட்ட இருந்து இப்படி ஒரு பதிலை நான் எதிர்பார்க்கவே இல்ல. அவர் நினைச்சா ஒரு சாதாரண பொண்ணை கூட கொண்டு வந்து சிறப்பாக நடிக்க வைக்க முடியாதா? அவர் தன்னோட சமூகத்திற்காக அவ்வளவு பேசுறார் அப்போ அவரோட சமூகத்தில் இருக்கிற திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாமே என்று சம்யுக்தா பேசியிருக்கிறார்.
மாரி செல்வராஜ் பயோகிராஃபி
மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் கிராமத்து மண்ணின் கதையை சொல்லும் இயக்குனராக பிரபலமாகி கொண்டு இருக்கிறார். இவர் இயக்குநர் ராம்மிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். எழுத்தாளராகவும் அறியப்பட்டவர். இவரது திரைப்படங்கள் பெரும்பாலும் தென் தமிழகத்தில் நிலவும் சாதியப் பாகுபாடு, ஒடுக்குமுறை மற்றும் சமூக நீதிப் போராட்டங்களை மையமாகக் கொண்டிருக்கும். இவரது திரைப்படங்களான 'பரியேறும் பெருமாள் (முதல் படம்), கர்ணன் மற்றும் சமீபத்தில் வெளியான 'பைசன் காளமாடன்' போன்ற படங்கள் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன.
நடிகைகள்
இவரது படங்களில் முக்கிய கதாநாயகிகளாக மலையாள நடிகைகளான ரஜிஷா விஜயன் , அனுபமா பரமேஸ்வரன் போன்றோரை அதிகமாக நடிக்க வைப்பதே தமிழ் நடிகைகள் மத்தியில் இந்த விவாதத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது. மாரி செல்வராஜ் மற்றும் பிறத் தமிழ் இயக்குநர்கள் ஏன் தொடர்ந்து மலையாள நடிகைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வைக்கிறார்கள் என்பது குறித்து பெரிய விவாதம் நிலவி வருகிறது.
இயக்குநரின் பதில்
பொதுவாக, மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள், தனதுக் கதைக்குப் பொருத்தமான, கிராமத்து சூழலுக்கும், பாத்திரத்தின் உணர்ச்சிகளுக்கும் துல்லியமாகப் பொருந்தக்கூடிய முகங்களைத் தேடுவதாகக் கூறுவர். மலையாள நடிகைகள் பெரும்பாலும் இத்தகைய எதார்த்தமானப் பாத்திரங்களில் நடிப்பதை எளிதாக ஏற்றுக்கொள்வதாகவும், அதனால் அவர்கள் அதிகம் தேர்ந்தெடுக்கப்படுவதாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ஆனால், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான மாரி செல்வராஜே தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்புக் கொடுக்காமல், சமூகத்தில் எல்லா வகையிலும் நல்லவராக இருக்க முடியவில்லை என்று சம்யுக்தா எழுப்பியுள்ள கேள்விகள் நியாயமானதே என்று பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications