ச்சீ.. பத்து பேரோடு அப்படி இருக்கணுமா..? அதுவும் இந்த பெரிய மனிதர்கள்.. சனம் ஷெட்டி கேட்ட கேள்வி
சென்னை: நடிகை சனம் ஷெட்டி தன்னுடைய யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் பேட் கேர்ள் திரைப்படம் குறித்து தன்னுடைய அதிருப்தியை தெரிவித்து இருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கமெண்ட்களை பற்றி வருகிறது.
ஒரு சிலருக்கு என்னதான் திறமையும் உழைப்பும் இருந்தாலும் அதற்கு சரியான வாய்ப்பு அங்கீகாரம் கிடைக்காமல் இருக்கிறது. அதுபோல சினிமா துறையில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று காத்திருக்கும் பலருக்கு அதற்கு தகுந்த வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். அதில் ஒருவர் தான் நடிகை சனம் ஷெட்டி.

சனம் ஷெட்டி அம்புலி திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். முதல் திரைப்படம் இவருக்கு வெற்றியை கொடுத்தது. ஆனால் அதைத் தொடர்ந்து இவருக்கு பெரிதாக எந்த வாய்ப்புகளும் அமையவில்லை. அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி வந்த சனம் திடீரென்று வெளியேற்றப்பட்டார். இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதனால் அதிகமான ரசிகர்கள் இது அன் ஃபேர் எவிக்ஷன் என்று கூறி வந்தனர். அதற்குப் பிறகு சனம் ஷெட்டி ஒவ்வொரு சீசனிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து கொண்டிருக்கிறார். சிறப்பாக விளையாடும் போட்டியாளர்களுக்கு சப்போர்ட் செய்து வருகிறார். அதுபோல அவர்கள் வெளியே வந்ததும் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களையும் கூறுகிறார்.
அதுபோல சில போட்டியாளர்களை திட்டி தீர்த்தும் வருகிறார். கடந்த எட்டாவது சீசனில் கூட ராணவ், முத்துக்குமரன் போன்றவருக்கு சனம் அதிகமாக சப்போர்ட் செய்திருந்தார். ஆனால் சௌந்தர்யாவை ஆரம்பத்தில் இருந்தே விமர்சித்து வந்தார். இது போல தான் தற்போது பேட் கேர்ள் படம் பற்றி கடுமையாக விமர்சித்து பேசி இருக்கிறார்.
அதில், சம உரிமை என்பது பத்து பேருடன் படுப்பேன், தம்மடிப்பேன், கஞ்சா அடிப்பேன் என்பதல்ல. ஆண்களுக்கு இணையாக சம வாய்ப்புகள் பெண்களுக்கு கிடைப்பதுதான். உண்மையான சம உரிமை ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்த சமூகத்தில் சமமாக வாய்ப்புகள் வழங்கப்படுகிறதா என்றால் அது இல்லை.
சினிமாவை பொருத்தவரை ஹீரோவுக்கு கொடுக்கப்படும் சம்பளமும், ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் சம்பளமும் ஒன்று போல இல்லை. அதை போல் எப்போதும் ஒரு ஹீரோவை அணுகும் விதமும் ஒரு ஹீரோயினை அணுகும் விதமும் வெவ்வேறாக இருக்கிறது. என் வாழ்க்கையில் எனக்கு நேர்ந்ததை வைத்து தான் இதை சொல்கிறேன்.
எங்களை படங்களில் நடிக்க அழைக்கிறார்கள் என்று பார்த்தால் படுக்கவும் அழைக்கிறார்கள், இதுதான் நிலைமையாக இருக்கிறது. எனவே சம உரிமை வேண்டி இதைப் பற்றிய பேசுங்கள். ஸ்கூல் பொண்ணுங்களை வைத்து 10 பேருடன் படு, கஞ்சா அடி, தம் அடி என்று சொல்வது சம உரிமை அல்ல என்று கூறி இருக்கிறார்.
குறிப்பாக இப்படி ஒரு மோசமான படத்தை பெரிய மனிதர்கள் பாராட்டுவதும் தாங்க முடியாத வருத்தமாக இருக்கிறது என்று சனம் ஷெட்டி தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி இருக்கிறார். இயக்குனர் வெற்றிமாறனின் துணை இயக்குனர் வர்ஷா பாரத் இயக்கியுள்ள பேட் கேர்ள் திரைப்படத்தின் டீசர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த படம் பற்றி பலரும் விமர்சனங்கள் வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் சனம் ஷெட்டி பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications