20 வயசு பொண்ணு இருக்கு.. விஜய்யோடு சர்ச்சை.. படிப்பு ரொம்ப முக்கியம்.. நடிகை சங்கீதா எமோஷனல்
சென்னை: பூவே உனக்காக என்ற திரைப்படத்தில் நடிகர் விஜயோடு நடித்து பிரபலமான நடிகை சங்கீதா பல வருடம் கழித்து தன்னுடைய சினிமா வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்து பேட்டியில் பேசியிருக்கிறார்.
அதில் தனக்கு இப்போது 20 வயதில் மகள் இருக்கிறார் என்று ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறார்.

அதோடு தனக்குத் திருமண நேரத்தில் நடிகர் விஜய்யோடு சேர்த்து வைத்து வெளியான வதந்திகள் குறித்தும் தற்போது சங்கீதா பேசியிருக்கிறார்.
90's காலகட்டத்தில் ரசிகர்களின் பேவரைட் நடிகைகளில் ஒரு சிலர் திருமண வாழ்க்கையில் இணைந்து பிறகு சினிமாவை விட்டு விலகி இருக்கின்றனர். அந்த வகையில் ஒருவர்தான் நடிகை சங்கீதா. இவர் அந்த நேரத்திலேயே அதிகமாக கிளாமரில் நடிக்காமல் எப்போதும் ட்ரடிஷனல் உடையிலும் அதிகமான மேக்கப் இல்லாமல் நடித்து ரசிகர்களின் மனதில் பசை போல ஒட்டிக்கொண்டவர்.
பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்று இருக்கும் இவரை திரைப்படங்களில் பார்ப்பதற்கும் நிஜத்தில் பார்ப்பதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டாம். திரைப்படங்களில் இவர் அதிகமாக துரு துருவென்று கேரக்டரில் நடித்திருப்பார். ஆனால் நிஜத்தில் அமைதியின் சொரூபமாகத்தான் இருக்கிறார். இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து இப்போது முதல் முறையாக பிரபல youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.

அதில் தன்னுடைய குடும்ப வாழ்க்கை குறித்தும் சினிமா வாழ்க்கை குறித்தும் பேசுகிறார். அதில், தற்போது தனக்கு 20 வயதில் மகள் இருக்கிறாள் என்றும் தன்னுடைய மகளோடு படிப்பவர்கள் தன்னை ஆன்ட்டி என்று கூப்பிடும் போது கூட எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. ஆனால் தன்னைவிட இரண்டு மூன்று வயது கூடியவர்கள் தன்னை ஆன்ட்டி என்று கூப்பிடுகிறார்கள். அப்போதுதான் கஷ்டமாக இருக்கிறது.
அதுவும் திருமணமான புதிதில் பொண்ணு பிறந்து ஒரு வருடத்திற்குள் பிரபல நடிகர் ஒருவர் என்னை ஆன்ட்டி என்று கூப்பிட்டது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிறகு சரி இது போலத்தானே நாம நடித்துக் கொண்டிருக்கும் போதும் நாம் எத்தனை பேரை கஷ்டப்படுத்தினுமோ என்று எனக்கு நானே யோசித்துக் கொண்டேன் என்று சிரித்தபடியே சங்கீதா கூறி இருக்கிறார்.
அதுபோல பூவே உனக்காக திரைப்படத்தில் கேமராமேனாக இருந்த சரவணனை சில வருடங்கள் காதலித்து சங்கீதா திருமணம் செய்திருந்தார். சங்கீதாவிற்கு திருமணம் என்ற நேரத்தில் நடிகர் விஜய்யும் அவருடைய மனைவியான சங்கீதாவை காதலித்துக் கொண்டிருந்ததால் அப்போது பத்திரிகைகளிலும் சில தவறான கருத்துக்களும் வந்து விட்டதாம். நடிகர் விஜய் நடிகை சங்கீதாவை காதலிக்கிறார் என்று பலர் கூறி இருக்கிறார்கள்.
இந்த விஷயம் திரைத்துறையில் இருக்கும் ஒரு நபரால் நடிகை சங்கீதாவிற்கு தெரிய வந்திருக்கிறது. அப்போது இவருக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கிறது. எதை வைத்து இப்படி சொல்கிறார்கள் என்று குழம்பி இருக்கிறார். பிறகு அதை அப்படியே விட்டு விட்டாராம். ஏனென்றால் நடிகை சங்கீதா சரவணனை காதலித்து வருவது விஜய்க்கு ஏற்கனவே தெரியுமாம். அதுபோல விஜய் உடைய கதையும் சங்கீதாவிற்கு தெரியுமாம். அதனால் அவர்கள் இதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லையாம்.
ஆனால் இந்த வதந்தி உருவாகுவதற்கு காரணமாக இருந்தது நடிகர் விஜய் ஒரு பேட்டியில் நடிகை சங்கீதாவை எனக்கு பிடிக்கும் என்று கூறியிருந்தார். அதுவாகத்தான் இருக்கும் என்று சங்கீதா கூறி இருக்கிறார். காரணம் எனக்கு எந்த இடத்திலும் சரவணன் என்கிற போர்டு வைத்த பெயரை பார்த்தவுடனே அந்த கடை எனக்கு பிடிக்கத் தொடங்கிவிடும். அதுபோல விஜய்க்கும் இருந்திருக்கலாம் என்று எனக்கு பிறகு தான் சிந்தனை வந்தது என்று அந்த பேட்டியில் அமைதியாகவே சிரித்தபடி சங்கீதா பேசியிருக்கிறார்.
அதோடு குழந்தைகள் படிப்பு விஷயத்தில் அதிகமாக கவனத்தை செலுத்த வேண்டும். இப்போது கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் படிப்பு எவ்வளவு முக்கியம் என்று பிறகு தான் தெரியும். எப்போதுமே பெற்றோர்கள் படிப்பில் அடுத்த குழந்தைகளை தன்னுடைய குழந்தைகளிடம் கம்பேர் பண்ணி பேசக்கூடாது. போன முறை 70 மார்க் எடுத்திருந்தால் இந்த முறை 71 மார்க் எடுக்க வேண்டும் என்று சொல்லலாம்.
அதற்கு நம்மால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகமாக கொடுக்க வேண்டும். நாம் அடுத்தவர்களோடு கம்பர் பண்ணவே கூடாது. படிப்பு இப்போ இல்லை எப்பவுமே ரொம்பவே முக்கியம் என்று அந்த பேட்டியில் சங்கீதா பேசியிருக்கும் நிலையில் தற்போது இந்த வீடியோஸ் வைரல் ஆகி வருகிறது.
-
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications