மீனாவின் உண்மை முகம் இதுதான்.. “டபுள்ஸ்” படத்தில் தான் நானே பார்த்தேன்.. வெளிப்படையாக பேசிய சங்கீதா
சென்னை: நடிகை சங்கீதா கிரிஷ் நடிகை மீனா பற்றி பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசி இருக்கிறார். அதில் தான் மீனாவுடன் "டபுள்ஸ்" என்ற திரைப்படத்தில் ஒன்றாக நடிக்கும் போது மீனா தன்னிடம் நடந்து கொண்ட விதம் குறித்து அந்த பேட்டியில் பகிர்ந்து இருக்கும் நிலையில் இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
நடிகையாகவும், தொகுப்பாளராகவும் பலருக்கும் பரீட்சயமான சங்கீதா கிரீஸ் சமீபத்தில் தமிழ் சினிமா குறித்து பேசியது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு மரியாதையே கிடையாது, ஆனால் தெலுங்கில் நடிகைகளுக்கு நல்ல மரியாதை கொடுக்கிறார்கள். நடிகைகளின் உழைப்பை பாராட்டுகிறார்கள். தமிழில் சிலர் அவர்களே போன் பண்ணி ஏதோ நமக்கு பிச்சை போடுவது போன்று அவர்களே நம்முடைய வேலைக்கு இதுதான் சம்பளம் என்ற பிக்ஸ் பண்ணுவார்கள்.

ஆனால் தெலுங்கில் அப்படியே இல்லை தெலுங்கில் நம்முடைய திறமைக்கு தகுந்த பணம் கிடைக்கிறது. அங்கு மரியாதையும் இருப்பதால் எனக்கு தெலுங்கு தான் பிடிக்கும் என்று பேசியிருந்தார். இது குறித்து இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகை மீனா பற்றியும் இன்னொரு பேட்டியில் சங்கீதா பேசி இருக்கிறார். இதுவும் இப்போது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது.
அதில் சங்கீதா க்ரிஷ் பேசுகையில் மீனா எனக்கு சினிமாவில் சில வருடங்களாகவே தெரியும். ஆனால் அவரோடு நான் டபுள்ஸ் என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது தான் அவருடைய உண்மையான கேரக்டரை நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது. சினிமாவில் சில பெரிய நடிகைகள் தன்னோடு நடிக்கும் இரண்டாவது நடிகைகளிடம் நன்றாக பழக மாட்டார்கள். தன்னைவிட இரண்டாவது நடிகை பெஸ்ட்டா வந்து விடக்கூடாது என்று சிலர் பல வேலைகளை பண்ணுவார்கள்.

ஆனால் மீனா அப்படி கிடையாது. மீனாவுடன் நான் டபுள்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறேன். அந்த திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபுதேவா நடித்திருந்தார். அந்த படத்தை பாண்டியராஜன் இயக்கி இருந்தார். அப்போது எனக்கு சினிமா புதியது என்றால் நான் எல்லா இடத்திலும் தயங்கி தயங்கி தான் இருப்பேன். ஆனால் மீனா என்னிடம் வந்து நீங்க அந்த டிரஸ் போடுறீங்களா? நான் இந்த டிரஸ் போடுறேன், நீங்க அப்படி ஆக்டிங் பண்ணுங்கள் என்று பல விஷயங்களை சொல்லித்தருவாங்க.
மீனா மட்டுமல்ல மீனாவின் அம்மா கூட நம்முடைய நடிப்பை ரொம்பவே பாராட்டுவாங்க. சில இடங்களில் நம்முடைய நடிப்பு அவங்களுக்கு பிடித்து விட்டால் மீனாவிடம் நேரடியாகவே சொல்லுவாங்க, உன்னை விட சங்கீதா நன்றாக பண்ணுற என்று நம்மை பாராட்டுவாங்க. இதுபோல ஒரு குணத்தை நான் வேறு எந்த நடிகையிடமும் பார்க்கவில்லை. அதற்குப் பிறகுதான் எனக்கும் மீனாவிற்கும் நட்பு அதிகமாயிடுச்சு என்று அந்தப் பேட்டியில் சங்கீதா க்ரிஷ் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications