மலேசியா வாசுதேவன் என் சொந்த சித்தப்பா தான்! ஆனால், பூவே உனக்காக படத்தில் விஜய் செய்தது! சங்கீதா ஓபன்
சென்னை: பூவே உனக்காக திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகை சங்கீதா சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அதில் மறைந்த பாடகரும் நடிகருமான மலேசிய வாசுதேவன் தன்னுடைய சொந்த சித்தப்பா என்று கூறி இருக்கிறார். அதோடு தங்கள் இருவருக்கும் உள்ள உறவு முறை குறித்தும் தாங்கள் இருவரும் சேர்ந்து பூவே உனக்காக திரைப்படத்தில் நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவம் குறித்தும் சங்கீதா பேசியிருக்கிறார்.
நடிகை சங்கீதா குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். தன்னுடைய அண்ணனுக்கு ஆடிஷனுக்காக வந்த இடத்தில் இவருக்கும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் நடிக்கிறோம் என்றதும் சந்தோஷமாக ஓகே சொன்ன சங்கீதா 16 வயதிலேயே ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும் நடித்திருந்தார். நடிகர் ராஜ்கிரண் நடித்த எல்லாமே என் ராசா திரைப்படத்தில் சங்கீதா கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் அவர் பாதியிலேயே இறந்து போவது போன்ற காட்சிகள் இருக்கும் அந்த படத்தில் உள்ள பாடல்கள் இப்போதும் எவர்கிரீன் பாடல்களாக பலருடைய பேவரைட் லிஸ்டில் இடம் பிடித்திருக்கிறது.

ராஜ்கிரணுக்கு ஜோடி
ஆரம்பத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்தாலும் சங்கீதாவுக்கு பூவே உனக்காக திரைப்படம் பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கும் பெரிய அளவில் பெயர் கிடைத்தது. விஜய் அதற்கு முன்பு பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவர் மீது இருந்த மொத்த பார்வையும் பூவே உனக்காக திரைப்படத்திற்கு பிறகு மாறிவிட்டது.
மீண்டும் நடிப்பு
குடும்ப ரசிகர்களை வெகுவாக இந்த படத்தின் மூலம் கவர்ந்து விட்டார். இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய பட்டாளமே நடித்திருந்தது. நடிகர் நாகேஷ், நம்பியார், மலேசியா வாசுதேவன் உட்பட பலர் இதில் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் நடிகை சங்கீதா பேசி இருந்தார். தன்னுடைய திருமணத்திற்கு பிறகு சில வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்த சங்கீதா இப்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

மலேசியா வாசுதேவன் சித்தப்பா
இந்த நிலையில் அவர் பூவே உனக்காக படம் பற்றி சொல்லும்போது "இந்த படம் எனக்கு மறக்க முடியாத அனுபவங்களை தந்தது. நடிகரும் மறைந்த பாடகருமான மலேசியா வாசுதேவன் என்னுடைய சொந்த சித்தப்பா தான். என்னுடைய அம்மாவின் தங்கையின் கணவர்தான் அவர். அதனால் பூவே உனக்காக படத்தில் நடிக்கும் போது எனக்கு நல்ல கம்பர்ட்டபிளாக இருந்தது. அதுபோல அந்த படத்தில் விஜய் நடிக்கும் போது அவரும் ரொம்பவும் அமைதியாக இருப்பார், நானும் பெருசாக எதுவும் பேச மாட்டேன்.

காதல் தெரிந்தது
டேக் என்று சொன்னதும் நாங்கள் நடிக்க தொடங்கி விடுவோம். மற்ற நேரத்தில் அமைதியாக தான் இருப்பார். அந்த நேரத்தில் தான் பூவே உனக்காக பட ஒளிப்பதிவாளர் சரவணனை காதலித்தேன். அந்த விஷயம் விஜய்க்கு தெரிய வந்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தது சொல்லவே இல்ல என்று சொன்னாரு. அதுபோல அவரும் சங்கீதாவை காதலித்துக் கொண்டிருந்த விஷயத்தை எங்களிடம் சொல்லி இருந்தாரு. ஆனால் அந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது விஜய் சங்கீதாவை காதலிக்கிறார் என்றதும் எங்கள் இருவரையும் இணைத்து பல செய்திகள் வந்தது என அந்த பேட்டியில் சங்கீதா பேசியிருக்கிறார்.
-
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்!












Click it and Unblock the Notifications