சிம்புவை திருமணம் செய்ய ஆசை! நேரடியாக சொன்ன நடிகை சாந்தினி! டி ராஜேந்தர் கொடுத்த எதிர்பாராத பதில்
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் சிம்பு. மாநாடு திரைப்படத்தின் மூலம் அதிரடி கம்-பேக் கொடுத்த அவர், இன்று தனது உடலமைப்பு, ஆன்மிகம் மற்றும் எதார்த்தமான நடிப்பு மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளார். வெந்து தணிந்தது காடு, பத்து தல என அடுத்தடுத்துக் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் சிம்புவின் அடுத்த திரைப்படம் எப்போது வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் கூமாம்பட்டி பிரபலமான தங்க பாண்டிக்கு ஜோடியாக இருக்கும் சாந்தினி தான் சிம்புவை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகும் டி ராஜேந்தரிடம் சொல்லி இருக்கிறார்.

கமல்ஹாசன் உடன் இணைந்து சிம்பு நடித்த தக் லைஃப் திரைப்படம் குறித்துப் பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனாலும் தொடர்ந்து செய்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்
காதல் சர்ச்சைகள்
தனது ஆரம்பக்கால வாழ்க்கையில் பல காதல் கிசுகிசுக்களில் சிக்கிய சிம்பு, ஒரு கட்டத்தில் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தார். தன் தனிப்பட்ட வாழ்க்கையை முழுமையாக ஆன்மிகம், தியானம் மற்றும் உடற்பயிற்சி என மாற்றி, அனைவரையும் அதிசயத்து பார்க்கக்கூடிய ஒரு நடிகராக உருவெடுத்துள்ளார். அவரது இந்த மாற்றம், ஒரு சரியான கம்-பேக் திரைப்படமாக அமைந்தது மாநாடு. அந்தப் படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
டி.ஆரின் சிங்கிள் பசங்க மேடை
இந்நிலையில், நடிகர் சிம்புவின் திருமணம் எப்போது? என்ற கேள்விதான், ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் மத்தியில் இப்போது எழுந்துள்ளது. சமீபத்தில், ஜீ தமிழில் மிகவும் பரபரப்பாகப் பேசப்படும் நிகழ்ச்சியாக இருக்கும் சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில், டி.ராஜேந்திரன் நடுவராக இருந்து வருகிறார். அதில், போட்டியாளராகக் கலந்து கொண்ட கூமாப்பட்டி தங்கப்பாண்டிக்கு ஜோடியாக, சின்னத்திரை நடிகை சாந்தினி இருந்து வருகிறார். இவர், டி.டி ராஜேந்தர் முன்னாடியே, "எனக்கு சிம்புவைத் திருமணம் செய்து கொள்ள ஆசையாக இருக்கிறது" என்று மிகவும் வெட்கப்பட்டுக் கூறினார்.
நடிகை சாந்தினி, சன் டிவி ஜீ தமிழ் விஜய் டிவி என முன்னணி சேனல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் சன் டிவியில் வானத்தைப்போல சீரியலில் இவர் தான் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் அதுபோல இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலிலும் நடித்த சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமானவர்.
டி ராஜேந்தர் உருக்கம்
சாந்தினியின் ஆசையைக் கேட்டதும், டி.ராஜேந்திரன், ஒரு தந்தைக்கே உரிய பாசத்துடன் உருக்கமான பதிலளித்தார். "காதல் என்பது மனைவி மீது மட்டும் வைத்திருப்பது கிடையாது. மகன்கள் மீதும் மகள்கள் மீதும் வைத்திருப்பதும் ஒருவித காதல் தான். அப்படித்தான் என்னுடைய மகன் சிம்புவின் மீதும் நான் வைத்திருக்கிறேன். நானும் என் மனைவியும் எந்தப் பெண்ணைக் காட்டுகிறோமோ, அதை வேண்டாம் என்று சொல்லாமல் சிம்பு உடனே திருமணம் செய்து கொள்வார். ஆனால் அப்படிப்பட்ட திருமணம் அவருக்கு இருக்கக் கூடாது. அவரைத் தேடி, 'சிம்புதான் வேண்டும்' என மனப்பூர்வமாக எந்தப் பெண் வருகிறாரோ, அவள்தான் சிம்புவுக்கு மனைவியாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்."
" நான் நினைத்தால் என் மகனைத் தொந்தரவு செய்ய மாட்டேன். இப்படித்தான் மற்ற பெற்றோர்களும் இருக்க வேண்டும். பெற்றோர்களின் விருப்பத்திற்காகத் திருமணம் செய்து, அந்தத் திருமணம் கடைசியில் எப்படி ஆகும் என்பது யாருக்கும் தெரியாது. அதனால், என் மகனைத் தேடி, இவர்தான் வேண்டும் என எந்தப் பெண் வருகிறாளோ, அவள்தான் சிம்புவுக்கு மனைவியாக வேண்டும்" என்று டி.ராஜேந்திரன் கூறியது, ஒரு தந்தையின் ஆசையையும், மகனின் மீது கொண்ட அன்பையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications