அம்மா செய்த துரோகம்.. வாழ்க்கையில் பட்ட கஷ்டம்! நான் செத்தா கூட சொல்ல யாரும் இல்ல! நடிகை சரண்யா உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் நடிகர்களுக்கு வெற்றியை மட்டும் கொடுப்பதில்லை அவர்களுடைய பெயரையே அடையாளமாக மாற்றிவிடும். அப்படித்தான் காதல் திரைப்படம் சரண்யாவுக்கு அமைந்தது. பள்ளி மாணவியான சரண்யா இவர் காதல் படத்தில் சந்தியாவுக்கு பிரண்டாக நடித்திருப்பார் இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் தன்னுடைய நிஜ வாழ்க்கையில் தான் பட்ட வலி வேதனைகள் குறித்து பேசி இருப்பது பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுவரைக்கும் அவர் தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருக்கும் படி போட்டோக்கள் போஸ்ட் போட்டுக் கொண்டிருப்பார். ஆனால் அவருடைய வாழ்க்கையில் இவ்வளவு வேதனை இருந்ததா? என்பது பலருக்கும் வருத்தத்தை கொடுத்திருக்கிறது. சமீபத்தில் சரண்யா பேசும்போது தன்னுடைய குழந்தை பருவத்தை பற்றி பேசினார்.

நடிகை காதல் சரண்யா பேட்டி

அப்போது, சின்ன வயதிலேயே என்னோட அப்பா இறந்துட்டாங்க. அதுக்கப்புறம் 19 வயசு இருக்கும் போது என்னுடைய அம்மா இன்னொரு கல்யாணம் செய்து போயிட்டாங்க. அதற்குப் பிறகு நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். என்னை யாருமே கண்டுக்கல. 19 வயது என்பது வாழ்க்கையை தனியாக எதிர்கொள்ள வேண்டிய வயது கிடையாது. அந்த வயதில் ஒரு குழந்தைக்கு அம்மாவின் அரவணைப்பும் அப்பாவின் பாதுகாப்பும் தேவைப்படும். ஆனால் அது எல்லாமே இல்லாமல் நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்.

Saranya Actress Saranya

அம்மாவின் தனி வாழ்க்கை

அம்மா வேறு ஒரு வாழ்க்கைக்குள் போய்விட்ட பிறகு அவரை தொந்தரவு செய்ய கூடாது என்று நினைத்தேன் ஆனாலும் அம்மாவை சமாதானப்படுத்தி மீண்டும் அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று முயற்சி செய்தேன். ஆனால் அது எதுவும் பலன் தரவில்லை. என்னுடைய அம்மாவை கன்வின்ஸ் பண்ணி பார்த்தும் நடக்காததால் பிறகு நான் தனியாகவே வாழ தொடங்கி விட்டேன். எனக்கும் அம்மாவுடன் இருக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது.

ஆனால் அதுதான் நடக்கலையே வேற என்ன பண்ண? இப்போதும் சில நேரங்களில் எனக்கு நாம செத்து போயிட்டா கூட அந்த இறப்பை வெளியில சொல்லக்கூட யாரும் இல்லையே என்று எனக்கு வருத்தமாக இருக்கும். தனியாக இருக்கும்போது மனம் ரொம்ப குழப்பமடையும் என்று அவர் கண்ணீரை அடக்கி கொண்டு சிரித்தபடியே பேசிய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

காதல் படம்

2004 ஆம் ஆண்டு வெளியான காதல் திரைப்படம் சரண்யாவின் வாழ்க்கையே மாற்றியது. பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான அந்த திரைப்படத்தில் பரத் ஜோடியாக சந்தியா ஐஸ்வர்யா என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மனதில் பதிந்தார். சந்தியாவுக்கு பிரண்டாக சரண்யாநடித்திருப்பார் அதற்கு பிறகு பல படங்களில் நடித்திருந்தாலும் காதல் தான் படம் அவருக்கு தனி அடையாளமாக மாறியது. திரைப்படங்களில் பிரபலமான நடிகையாக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்கள் அவரை துரத்தி இருக்கின்றன.

திருமணத்தை நினைத்து பயம்

ஒரு கட்டத்தில் திருமணம் வாழ்க்கையிலும் சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கிறது. இப்போதைய சூழ்நிலையில் கல்யாணம் பண்ணி ஒருத்தருடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று எனக்கும் ஆசை இருக்கிறது. ஆனால் அதைவிட ரொம்ப பயமாக இருக்கிறது என்று அவர் சொல்லி இருக்கிறார். எல்லார் வாழ்க்கையில் எல்லாவற்றையும் கடந்து விட்டோம் என்று நினைக்கும் நேரத்தில் சில பழைய காயங்கள் தனிமையில் நம்மை மீண்டும் தொந்தரவு செய்யும். அந்த மாதிரியான சூழ்நிலைதான் சரண்யாவிற்கும் வந்திருக்கிறது.

தைரியம் இருந்தா விஜய் பற்றி பேசுங்க.. திரிஷாவுக்கு ஆதரவாக களம் இறங்கிய நடிகை சஞ்சனா கல்ராணி
ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பயம் மரணம் அல்ல, தன்னை பற்றி கவலைப்படுவதற்கு யாருமே இல்லாமல் போய்விடுவார்களோ என்ற பயம் தான். அந்த நிலையில் தான் தற்போது சரண்யாவும் விரத்தியோடு பேசி இருக்கிறார். இந்த பேட்டி வெளியான பிறகு பலரும் அவருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+