Saranya Ponvannan: நடிகை சரண்யா பொன்வண்ணன் மகளுக்கு எங்கேஜ்மென்ட்.. மாப்பிள்ளை இந்த பிரபலம்தானா?
சென்னை: நடிகை சரண்யா பொன்வண்ணன் தம்பதியின் இரண்டாவது மகள் சாந்தினிக்கு எங்கேஜ்மென்ட் எளிமையாக நடந்திருக்கிறது. இதில் உறவினர்களும், நண்பர்களும் சில பிரபலங்களும் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகை சரண்யா பொன்வண்ணனுக்கு அறிமுகமே தேவையில்லை. 80ஸ் காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தாலும் இப்போதும் இன்றைய தலைமுறையினரும் அம்மாவாகவும் மாமியாராகவும் ஏற்றுக்கொள்ளும் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் இவர் நடிகர் கமல்ஹாசன் நடித்த நாயகன் படத்தின் மூலமாக அறிமுகமானார். அதற்குப் பிறகு மனசுக்குள் மத்தாப்பு, என் ஜீவன் பாடுது உட்பட பல படங்களில் நடித்திருந்தார்.

சினிமாவில் டாப்பில் இருக்கும் போது 1995ஆம் ஆண்டு நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பிரியதர்ஷினி, சாந்தினி என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். தன்னுடைய மகள்கள் பிறந்த சமயத்தில் சில வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்த சரண்யா மகள்கள் பள்ளியில் சேர்ந்த பிறகு மீண்டும் நடிக்க தொடங்கினார்.
அதிலும் நடிகர் ஜீவா நடித்த ராம் படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்திருந்தார். அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது அந்த படத்தில் இவருடைய கேரக்டரும் அதிகமாக பேசப்பட்டது. அதற்குப் பிறகு எம்டன் மகன், தவமாய் தவமிருந்து, கிரீடம், களவாணி, ஒரு கல் ஒரு கண்ணாடி, வேலையில்லா பட்டதாரி உட்பட பல படங்களில் நடித்து வந்தார். அதிலும் நமக்கு இதுபோல ஒரு மாமியார் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று பெண்களே பொறாமைப்படும் அளவிற்கு ஒரு வெகுளியான மாமியாராகவும், அம்மாவாகவும் தான் இவர் நடித்து வருகிறார்.
இவருடைய கேரக்டர் சென்டிமென்டாக இருந்தாலும் அதில் சில காமெடிகள் செய்வது போலவே இருக்கும். எம்டன் மகன் படத்தில் இவர் செய்த அட்ராசிட்டியை மறக்க முடியாது. அதுபோல ஒரு கல் ஒரு கண்ணாடி படமும் இவருக்கு அதிக அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. இந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் தங்களுடைய இரண்டு மகள்களுமே சினிமா பக்கம் காட்டாமல் மருத்துவர்களாக மாற்றி இருக்கிறார்கள்.
மூத்த மகள் பிரியதர்ஷினி குழந்தைகள் நல மருத்துவராகவும் இளைய மகள் சாந்தினி மகப்பேறு மருத்துவராகவும் உள்ளனர். சமீபத்தில் தான் சரண்யா பொன்வண்ணன் மூத்த மகள் பிரியதர்ஷினி எம்டி பட்டமளிப்பு விழாவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார். அதை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர்.
அது போல இளைய மகள் சாந்தினிக்கு சமீபத்தில் எங்கேஜ்மென்ட் முடிவடைந்து இருக்கிறது. சாந்தினிக்கு டானின் என்பவரோடு தான் எங்கேஜ்மென்ட் முடிந்து இருக்கிறதாம். இவர்கள் ஜோடியாக எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வர இந்த தம்பதிக்கு பல பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications