Kodeeswari: சென்னைக்கு வந்தா ஜெயலலிதாவைப் பார்த்துட்டுத்தான் போவேன்!
சென்னை: பழம்பெரும் நடிகை, கன்னடத்து பைங்கிளி... கண்ணழகி சரோஜா தேவி கலர்ஸ் தமிழ் டிவியின் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் ராதிகா சரத்குமார் உன்னை ஒன்று கேட்பேன் பாடலுக்கு அபிநயம் பிடித்தபடி நான் உங்கள் ரசிகை என்று சொனார்.
அபிநய சரஸ்வதியின் பதிலுக்கு கேட்கவா வேண்டும்.. நான் உங்கள் ரசிகை என்று பதிலுக்கு சொன்னார் சரோஜா தேவி. என்னதான் மக்கள் திலகம் எம்ஜிஆரோடு சரோஜா தேவி நடித்து புகழ்பெற்று இருந்தாலும் புதிய பறவை படத்தில் வரும் உன்னை ஒன்று கேட்பேன் பாடலுக்கு சரோஜா தேவி பிடித்த அபிநயமும், டான்ஸும்தான் இன்றுவரை மக்கள் மனதில் அழியா இடம்பெற்று உள்ளது.
புதிய பறவை படத்தில் கோபால் கோபால் என்று கொஞ்சும் மழலையில் கிளைமேக்சில் சரோஜா தேவி பேசும் வசனம் இன்றுவரை பலராலும் பல சூழ்நிலைக்கு பேசப்படுகிறது. சினிமாவிலும், சீரியலிலும் இந்த வசனம் அவ்வப்போது எதாவது ஒரு வகையில் யாரவது ஒருவரால் பேசப்படுகிறது.

சிறப்பு விருந்தினர்கள்
கலர்ஸ் தமிழ் டிவியின் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் பலதுறை சார்ந்த சாதனைப் பெண்கள் கலந்துக்கொண்டாலும், அவ்வப்போது சிறப்பு விருந்தினர்களாக சினிமாவில் சாதித்த நடிகைகளும் கலந்துக்கொண்டு சிறப்பித்து வருகின்றனர். ரம்யா கிருஷ்ணன், பூர்ணிமா பாக்யராஜ், பாக்யராஜ், மீனா, வரலட்சுமி சரத்குமார், சரத்குமார் இப்படி பலரும் கலந்துக்கொண்டு சிறப்பித்த வரிசையில் நடிகை சரோஜா தேவியும் கலந்துக்கொண்டு இருக்கிறார்.

எம்ஜிஆர் சரோஜாதேவி
எம்ஜிஆர் தன்னை எப்போதும் சகோதரியாகத்தான் பார்ப்பார் என்றும்,தான் அவரை அன்போடு அண்ணா என்றுதான் அழைப்பேன் என்றும் சரோஜா தேவி சொல்லி இருக்கார். அதை இப்போதும் சொன்னார். அண்னனைப் போல பழகி இருந்தாலும், அவருடன் நடிப்பது என்பதில் கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் நல்ல ஜோடியாக நடித்து எம்ஜிஆர் பானுமதி ஜோடிக்குப் பிறகு எம்ஜிஆர் சரோஜா தேவி என்று பேசும் அளவுக்கு ஜோடிப் புகழ் சேர்த்தவர் சரோஜா தேவி. பிறகுதான் எம்ஜிஆர் ஜெயலலிதா, எம்ஜிஆர் லதா, எம்ஜிஆர் மஞ்சுளா ஜோடி பிரபலம் அடைந்தது.

ஜெயலலிதாவை சந்திப்பேன்
நிகழ்ச்சியில் சரோஜாதேவி கலந்துக்கொண்ட போது உன்னை ஒன்று கேட்பேன் பாடலுக்கு ராதிகாவும், சரோஜாதேவியும் அபிநயம் பிடித்தனர். ஜெயலலிதாவுக்கு எப்போதும் என் மேல் ஒரு பிரியம் உண்டு.. எனக்கும் அவர் மீது ரொம்ப பிரியம். சென்னைக்கு வரும்போதெல்லாம் ஜெயலலிதா வீட்டுக்கு போயி அவரை சந்தித்து பேசாமல் போனதில்லை என்று கூறினார் சரோஜாதேவி. எப்போதும் தனது தங்க நகைகளை அணிந்துக்கொண்டுதான் சரோஜா தேவி நடிப்பாராம். இதை நினைவு கூர்ந்து கேட்டபோது ஆமாம் என்றும் சொன்னார். புரடக்ஷன் சாப்பாட்டுக்கு காத்து இருந்ததில்லை என்றும் சொன்னர் சரோஜாதேவி.

நீதிக்கு பின் பாசம்
நீதிக்கு பின் பாசம் படப்பிடிப்பு கோயம்பத்தூரில் நடைப்பெற்ற போது, ஷூட்டிங் போக கிளம்பியதாகவும், அப்போது ஃபிளைட் கிளம்பத் தயாராகி இவருக்காக காத்து இருந்து கதவைத் திறந்து வைத்து இருந்ததாகவும் கூறினார். ஓடிப்போய் ஃபிளைட்டில் ஏறிக்கொண்டாராம். இப்படி பல சுவையான நினைவுகளை கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சரோஜா தேவி பகிர்ந்துக்கொண்டு இருக்கார். சிட்டுக்குருவி பாடலுக்கு ராதிகாவும், சரோஜா தேவியும் அபிநயம் பிடிக்க, பார்வையாளர்கள் பாடலை கேட்டு கைத்தட்டி ரசித்து மகிழ்ந்தனர்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications