போராட்டங்களை தாண்டி கனவு நிறைவேறியது! எதிர்நீச்சல் ஆதிரை சொன்ன செய்தி.. குவியும் வாழ்த்து
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை கேரக்டரில் நடித்த நடிகை சத்யா தேவராஜன் தன்னுடைய கணவரோடு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். அதோடு தான் புதியதாக திருமண மண்டபம் ஒன்றை கட்டியிருப்பதாகவும் அந்த மகிழ்ச்சி செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.
இளைஞர்களையும் சீரியல் பார்க்க வைத்த பெருமை எதிர்நீச்சல் சீரியலுக்கே சேரும். இந்த சீரியல் ஆரம்ப காலத்தில் பெரிய அளவில் பிரபலம் இல்லை என்றாலும் சீரியல் தொடங்கி சில மாதங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டது.

காரணம் இந்த சீரியலில் நடிகர்கள் இயல்பான கேரக்டரில் நடித்ததுதான். கதையும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருந்தது. ஆனால் சில வருடங்களுக்கு பிறகு யாரும் எதிர்பார்க்காத வகையில் மாரிமுத்துவின் இறப்பிற்கு பிறகு இந்த சீரியலில் கதை வேறு விதமாக பயணித்தது. இது ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்தில் இருந்த சுவாரசியத்தை ஏற்படுத்தவில்லை.
இதன் காரணமாகவே திடீரென்று இந்த சீரியல் முடிவுக்கு வந்துவிட்டது. சீரியல் முடிவுக்கு வந்துவிட்டாலும் இந்த சீரியலில் நடித்த நடிகர்கள் எல்லோருமே ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலத்தை அடைந்து விட்டனர். அதில் ஒருவர் தான் சத்யா தேவராஜன். இவர் ஆரம்பத்தில் தொகுப்பாளராக பணியாற்றினார். அதற்கு பிறகு தான் இவருக்கு சன் டிவியில் அருவி சீரியலில் முக்கிய கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த சீரியலில் நடிக்க தொடங்கிய சில மாதங்களிலேயே அவருக்கு எதிர்நீச்சல் சீரியலில் வாய்ப்பு வந்தது. எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை கேரக்டரில் இவர் நடித்திருந்தார். அந்த கேரக்டரில் முதலில் நடிக்கவா? வேண்டாமா? என்ற குழப்பத்தோடு இருந்த சத்யா பிறகு வேறு வழியில்லாமல் எதிர்நீச்சல் சீரியலை மட்டுமே தொடர்ந்து விட்டு அருவி சீரியலில் இருந்து விலகி விட்டார்.
காரணம் அருவி சீரியலை விடவும் எதிர்நீச்சல் சீரியலில் தான் இவருக்கு அதிக அளவில் பெயர் கிடைத்தது. இவருடைய திருமண ட்ராக் மட்டும் மூன்று மாதங்களுக்கு மேலாக போய்க் கொண்டிருந்தது. அதுபோல இவருடைய எதிர்பாராத திருமணத்திற்கு பிறகு நடந்த பிரச்சனைகள் போன்றவையும் அந்த சீரியலில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

அதே நேரத்தில் இந்த சீரியல் முடிவடைந்த பிறகு சத்யா வேறு எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று தன்னுடைய கணவரோடு எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். அதோடு தான் புதியதாக திருமண மண்டபம் ஒன்றை கட்டி இருக்கிறேன் என்று அவர் கூறியிருக்கிறார்.
அதற்காக அவர் வெளியிட்ட பதிவில், "எங்கள் புதிய தொடக்கத்தை பற்றி சற்று தாமதமாக அறிவிக்கிறோம். எங்கள் குடும்பங்களின் ஆதரவிலும் நாங்கள் இந்த கனவை நினைவாக்கியுள்ளோம். பிரீமியம் திருமண மண்டபம் கட்டும் இந்த கனவு இறுதியாக உயிர் பெற்றுள்ளது. எங்களின் வலி, போராட்டங்கள் மற்றும் கஷ்டங்கள் இருந்தபோதிலும் இந்த அழகான இடத்தை உருவாக்குவதில் நீங்கள் காட்டிய அர்ப்பணிப்பு மற்றும் அன்பை நிறைய அறிவேன்.

மிகவும் பெருமைப்படுகிறேன் என்று அவர் தன்னுடைய திருமண மண்டபம் கட்டுவதற்கு உதவி செய்தவர்களை டேக் செய்து நன்றி கூறி இருக்கிறார். இவருக்கு ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications