அந்தத் தப்பை நான் பண்ணி இருக்க கூடாது..பல வருடம் கழித்து மனம் திறந்த நடிகை சீதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சீதா தான் சினிமாவை விட்டு விலகியது பெரிய தப்பு என்று உணர்ந்து கொண்டதாக கூறி இருக்கிறார்.

திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் அந்த முடிவு எடுத்திருக்கக் கூடாது என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

80ஸ் கிட்ஸ்களின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சீதா ஆண்பாவம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். அந்த காலகட்டத்தில் பிஸியாக நடித்த நடிகையாக இவர் இருந்தாலும் ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட் கூட இவர் நடித்திருக்கிறாராம். பல நேரங்களில் படங்களுக்கு நேரம் ஒதுக்க முடியாத நிலையில் பல வாய்ப்புகளை கூட இவர் ஒதுக்கி வைத்திருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய ஆரம்ப காலம் குறித்து அவர் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

Actress Seetha opened her mind I should not have made that mistake

பல படங்களில் நேரம் ஒதுக்க முடியாத நிலையால் பல வாய்ப்புகளை கூட ஒதுக்கி வைத்திருக்கிறார். அந்த அளவிற்கு பிஸியாக இருந்த இவருடைய சினிமா வாழ்க்கை பாலாய் போனதற்கு முக்கியமான காரணமே இவருடைய திருமண வாழ்க்கை தான். முதல் முறையாக பார்த்திபன் இயக்கி நடித்த புதிய பாதை படத்தில் நடித்த சீதா ஆரம்பத்தில் இந்த திரைப்படத்தில் தான் நடிக்கவில்லை என்று கூறி, பிறகு தன்னுடைய தந்தையின் வற்புறுத்தலினால் தான் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

ஆனால் இந்த திரைப்படத்தின் பாதியிலேயே இவர்களுக்குள் காதல் ஏற்பட்டு இருக்கிறது. சீதாவின் வீட்டில் இவர்களுடைய காதலை ஏற்றுக் கொள்ளாததால் வீட்டை விட்டு வெளியேறி நடிகர் பார்த்திபனோடு 1989 ஆம் ஆண்டு திருமணமானது. திருமணத்திற்கு பிறகு சீதா நடிப்பதில் பார்த்திபனுக்கு பிடிக்கவில்லையாம். அதனால் பிஸியாக நடித்து வந்த சீதா திருமணத்திற்கு பிறகு 10 வருடங்கள் சினிமாவை விட்டுவிட்டாராம். திருமணத்திற்கு பின் இவர்களுக்கு இரண்டு மகள்கள் பிறந்திருக்கின்றனர்.

அது மட்டுமல்லாமல் ஒரு மகனையும் சீதா பார்த்திபன் தம்பதி தத்தெடுத்து வளர்த்து வந்தனர். பத்து வருடங்கள் கழித்து இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2001 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று இருக்கிறார். விவாகரத்து ஆனபிறகு மீண்டும் தன்னுடைய தந்தை வீட்டுக்கே வந்த பிறகு தன்னுடைய நடிப்பை துவங்கியிருக்கிறார். அப்போது இவருக்கு சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் சீரியலில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
அதைத்தொடர்ந்து சீரியல் நடிகர் சதீஷ் என்பவரையும் திருமணம் செய்து இருந்தார். அவரோடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரையும் பிரிந்து இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தான் சினிமாவை விட்டு விலகி போனதுதான் நான் செய்த பெரிய தவறு என்று உருக்கமாக கூறியிருக்கிறார்.

Actress Seetha opened her mind I should not have made that mistake

பெண்களாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி நமக்குன்னு ஒரு அடையாளம் இருக்கும் இடத்திலிருந்து நாம் விலகிப் போனால் பிறகு அந்த அடையாளத்தை பெறுவது ரொம்பவே கஷ்டம். அந்த கஷ்டத்தை நான் அனுபவித்திருக்கிறேன். சினிமாவை விட்டு விலகி போய்விட்டு திரும்ப வந்து சேர்வது ரொம்பவே கஷ்டமானது தான். இதைத் தவிர சினிமாவில் இருக்கும் பலரும் செய்திருக்கிறார்கள்.

நான் திருமணத்திற்கு முன்பு திருமணமானால் எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று பெரிய கற்பனை கோட்டை கட்டி இருந்தேன். அந்த மாதிரி இருக்க வேண்டும் என்று தான் திருமணம் ஆனதும் நடிப்பை விட்டு விட்டு விலகி இருந்தேன் ஆனால் அது நான் செய்த தப்பு என்பது எனக்கு பிறகு தான் தெரிந்தது. என்று சீதா உருக்கமாக பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+