ரேப் செய்தவனுடன் வாழ்க்கையா?.. இது புதுசா இருக்கேனு ஓகே சொன்னேன்.. மனம் திறந்த நடிகை சீதா
சென்னை: குரு சிஷ்யனில் கிளாமரில் நடித்த போது என்னை பாலசந்தர் சார் திட்டினார், என்ன பண்ணி வைச்சிருக்க என சத்தம் போட்டார் என நடிகை சீதா ஒரு யூடியூப் சேனல் இன்டர்வியூவில் தெரிவித்தார்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகை சீதா. இவருடைய இயற்பெயர் சாய் ரந்திரி. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நிறைய படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இவருடைய முதல் படம் 1985 இல் பாண்டியராஜனும் பாண்டியனும் நடித்து வெளிவந்த ஆண் பாவம் படம். இந்த படத்தில் சீதா, புதுமுகமாக இருந்தாலும் அக்கம் பக்கத்து வீட்டு பெண் போல் இயல்பான தோற்றத்தில் இருந்ததால் அவரை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டனர்.

காதல் திருமணம்: அடுத்தடுத்து அவருக்கு படங்கள் வந்து கொண்டே இருந்தன. இந்த நிலையில் 1989 ஆம் ஆண்டு நடிகரும் இயக்குநருமான ஆர். பார்த்திபனுடன் சீதா புதிய பாதை எனும் படத்தில் நடித்திருந்தார். அப்போது இருவரும் காதல் வயப்பட்டு கடந்த 1990 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
கருத்து வேறுபாடு: அவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் சீதா, பார்த்திபனிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து இருவரும் 2001 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதையடுத்து 2002 ஆம் ஆண்டு வேலன் சீரியலில் நடித்த போது அதில் நடித்த சீரியல் நடிகர் சதீஷுடன் சீதாவுக்கு காதல் ஏற்பட்டு இருவரும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இரண்டாவது திருமணமும் தோல்வி: ஆனால் இந்த திருமணமும் 2016ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. ஆர் பார்த்திபனுடன் சீதா விவாகரத்து பெற்றுவிட்டால் தனது மகள்களின் திருமணத்தை இருவரும் சேர்ந்தே நடத்தி வைத்தனர். வேலன், சமரசம், பெண், இதயம், ஜனனம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். அது போல் மலையாளம், தெலுங்கு சீரியல்களிலும் சீதா நடித்துள்ளார்.

மாடித் தோட்டம்: கடந்த 2020 ஆம் ஆண்டு தந்துவிட்டேன் என்னை எனும் வெப் சீரிஸில் நடித்திருந்தார். 2021 ஆம் ஆண்டு மை பர்ஃபெக்ட் ஹஸ்பெண்ட் எனும் வெப் சீரிஸிலும் அவர் நடித்துள்ளார். தற்போது வீட்டிலேயே மாடித் தோட்டம் அமைத்து அதிலிருந்து காய்கறிகளையும் கீரை வகைகளையும் பறித்து சமைப்பது எப்படி என்பது குறித்து ஒரு யூடியூப் சேனலை வைத்து நடத்தி வருகிறார் சீதா.
பாண்டியராஜன் சார் தெய்வம்: தற்போது சீதா ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: முதல் படம் ஆண் பாவம் படத்தில் எனக்கு புரியாத பல விஷயங்களை எல்லாம் அடுத்தடுத்த படங்களில் புரிந்து கொண்டேன். அதன் பிறகு தான் பாண்டியராஜன் சார் எனக்கு தெய்வமாக தெரிந்தார். படித்து கொண்டிருந்த போது தான் சினிமாவுக்கு வந்தேன். ஆனால் வந்த பிறகு படிக்கெல்லாம் போகலை. ஏன் தெரியுமா?
ரஜினி கிண்டல்: ஷூட்டிங் போனால் பிரியாணி, ஐஸ்கிரீம் தருவாங்க. வளையல் போட ஒரு ஆள், செருப்பு மாட்ட ஒரு ஆள், தலை சீவுவதற்கு ஒரு ஆள், மேக்கப் போட ஒரு ஆள் என இருப்பாங்க. இதெல்லாம் அப்போ எனக்கு ரொம்ப பிடிச்சிருந்ததால படிக்க போகலை. குருசிஷ்யன் படம் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது ரஜினி சார் என்னை கிண்டல் செய்துகிட்டே இருப்பார்.

பாலசந்தர் சார் திட்டினாரு: ஏன் கவுதமியை முறைச்சிட்டே இருக்கேனு கேப்பார். நான் எங்க சார் முறைச்சேனு கேப்பேன். இப்படியே ஏதாவது என்னை கலாட்டா செய்துகிட்டே இருப்பார். குரு சிஷ்யன் படம் வரை குடும்பப் பாங்கான கேரக்டரில்தான் நடித்தேன். குரு சிஷ்யனில் கிளாமர் ரோல் செய்தேன். பாலசந்தர் சார் போன் செய்து என்ன சீதா பண்ணிட்டு இருக்க? ஏன் இந்த மாதிரி கேரக்டர் எல்லாம் நடிக்கீறனு திட்டுனாரு. விசு சாரும் அதேதான் சொன்னாரு.
கிளாமருக்கு நோ: உடனே என் அப்பாவிடம் போய் அழுதேன். அது முதல் மாடர்ன் ஆடைகள் அணிந்து நடிக்கவில்லை. பார்த்திபன் புதுமுகமாக புதிய பாதை படத்தை இயக்க வந்தார். அப்போது நான் அதில் நடிக்க ஏன் சம்மதித்தேன் என்றார். அந்த படத்தின் கதை அப்படி! அதில் ஒருவர் பலாத்காரம் செய்துவிடுவான், அவனோடு அந்த பெண் வாழும் கதை என்பதால்தான். இது புதிய விஷயமாக இருந்தது. நல்லா இருக்கும் என்பதால் நான் இதில் நடித்தேன். ரசிகர்களும் என்னை பாராட்டினார்கள். அதன் பிறகு நிறைய படங்கள் எனக்கு கிடைத்தன. காதல், கல்யாணம் என கமிட்மென்ட் இருந்ததால் அடுத்தடுத்து படங்களில் நடிக்க முடியாமல் போனது என அந்த பேட்டியில் சீதா கூறியிருந்தார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications