Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குடும்பத்தை மீறி காதல் திருமணம்..! அந்த வருத்தம் இருக்கு..! செம்பருத்தி சீரியல் ஷபானா எமோஷனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ஷபானா அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தன்னுடைய வீட்டில் இந்து பையனை திருமணம் செய்து கொள்ள கூடாது என்று கண்டிஷன் போட்டது பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

சினிமா மற்றும் சீரியலில் ஒன்றாக நடிக்கும் பல நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்கள். சில நடிகர்கள் நடிகைகளின் திருமணம் ரசிகர்களை இன்ப அதிர்ச்சி அடைய வைக்கும். அதேபோலத்தான் கடந்து 2021 ஆம் ஆண்டு நடந்த ஷபானா மற்றும் ஆர்யன் திருமணம் சின்னத்திரை ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

Zee Tamil Shabana

எதிர்பாராத காதல்

இவர்கள் இருவரும் வெவ்வேறு சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தனர். ஷபானா ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் நடித்து வந்தார். அதுபோல ஆரியன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது இருவரும் காதலிப்பதை மறைமுகமாக தங்களுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து இருந்தனர்.

இது இணையத்தில் பெரும் அளவு விவாதிக்கப்பட்டது. அதற்குப் பிறகு சில மாதங்கள் கழித்து தங்களுடைய காதலை இருவரும் சோஷியல் மீடியாவில் அறிவித்திருந்தனர். சோஷியல் மீடியா மூலமாகத்தான் தாங்கள் காதலிக்க தொடங்கியதாகவும் தெரிவித்திருந்தனர். பிறகு இவர்களுடைய திருமணம் எளிமையாக நடைபெற்றது.

Zee Tamil Shabana

எளிமையான திருமணம்

அப்போது ஆர்யனுடைய குடும்பத்தினர் மட்டும்தான் அதில் அதிகமாக கலந்து கொண்டனர். ஷபானாவின் நண்பர்கள் மட்டும் தான் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் ஷபானா தன்னுடைய குடும்பத்தோடு எடுத்த புகைப்படங்கள் எதையும் பகிரவில்லை. இந்த நிலையில் இவர்களுடைய திருமணம் முடிந்து மூன்று வருடங்களை கடந்துவிட்ட நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் தன்னுடைய திருமண விஷயம் பற்றி பேசியிருக்கிறார்.

Zee Tamil Shabana

செம்பருத்தி சீரியல் கதாநாயகி

அதில் நான் செம்பருத்தி சீரியலில் நடித்துக் கொண்டிருந்தேன் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அப்போது இந்து பெண்ணாக நடிப்பதற்கு பொட்டு வைத்துக் கொண்டதற்காக தன்னுடைய குடும்பத்தினர் ஒரு வருஷம் தன்னுடைய பேசவில்லை என்று கூறியிருக்கிறார். அதோடு தினமும் தன்னுடைய வீட்டில் இந்து பையனை மட்டும் திருமணம் செய்யக்கூடாது என்று சொல்லிக் கொண்டே இருந்தார்களாம்.

Zee Tamil Shabana

திருமணம் செய்ய காரணம்

அதற்காகவே நான் ஒரு இந்து பையனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்திருந்தேன். அந்த நேரத்தில் ஆர்யனோடு பேச எனக்கு பிடித்து போய்விட்டது. அதனால் அவரை கல்யாணம் செய்துகொண்டேன். என்னுடைய திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் தாண்டி விட்டது. ஆனாலும் என்னுடைய குடும்பத்தில் யாரும் என்னிடம் பேசுவதில்லை. அம்மா மட்டும் தான் என்கிட்ட பேசுறாங்க என்று ஷபானா வருத்தமாக பேசி இருக்கிறார்.

Zee Tamil Shabana

சீரியலில் இருந்து விலகல்

சின்னத்திரையில் ஷபானா ஆரியன் ஜோடி பலருடைய ஃபேவரைட் ஜோடி. ஆனால் இவர்களுடைய காதல் திருமணத்தில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறதா என்று பலரும் ஷபானாவிற்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். அதுபோல ஷபானா செம்பருத்தி சீரியல் முடிவடைந்த பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால் திடீரென்று அது சீரியலில் இருந்து விலகிவிட்டார்.

Zee Tamil Shabana

ஆர்யன் நடிக்கும் திரைப்படம்

அதுபோல ஆரியன் சில திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜீ தமிழில் ஒளிபரப்பான மீனாட்சி பொண்ணுங்க சீரியலிலும் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்போது அந்த சீரியல் முடிவடைந்திருக்கும் நிலையில் புதிய திரைப்படத்தில் பிக் பாஸ் ஜனனியுடன் நடிப்பதற்காக கமிட்டாகி இருக்கிறார். அந்த படத்திற்கான பூஜை புகைப்படங்கள் சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜாலியான தோழிகள்

அதுபோல ஷபானா அவருடைய தோழியான சீரியல் நடிகை நட்சத்திரா, கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி மற்றும் ரேஷ்மா முரளிதரன் என நான்கு பேரும் கொரோனா காலகட்டத்தில் நெருங்கிய தோழிகளாக இருந்தனர். எல்லோருமே ஜீ தமிழில் சீரியலில் நடிக்கும் போது தான் நண்பர்களாக மாறி இருந்தனர். ஆனால் இப்போது இவர்கள் எல்லோரும் தனித்தனியாக மட்டும் தான் போட்டோஸ் வெளியிட்டு வருகிறார்கள். அவர்களுடைய கேங்கில் ஷபானா மட்டும் இப்போது மிஸ் ஆகி கொண்டு இருக்கிறார். அதனால் ஷபானா தன்னுடைய தோழிகளோடு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கிறாரா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+